1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நின்ற தி.மு.க. தேர்தல் அறிக்கையில்..ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றது.வந்ததும் ஒரு படி ஒரு ரூபாய்.படிப்படியாக 3 படி போடுவோம் என்றனர்.இல்லாவிட்டால் சவுக்கால் அடியுங்கள் என்றனர்.எதிர்பாராது கிடைத்தது வெற்றி.அண்ணா முதல்வர் ஆனார்.சென்னையிலும்,கோவையிலும் முதலில் படி அரிசி திட்டம் அமுல் செய்யப்பட்டது.ஆனாலும்..நிதிநிலையைக் காரணம் காட்டி அதையும் பின்னர் விலக்கிக்கொண்டனர்.
பின்னர்..இவ்வளவு ஆண்டுகள் கழிந்து 2006 தேர்தலில் கலைஞர் தேர்தலில் ஜெயித்து வந்ததும் 2ரூபாய்க்கு அரிசி போட்டார்.இப்பொழுது செப்டம்பர் 15..அண்ணா பிறந்தநாள் முதல் ரேஷனில் ரூபாய்க்கு ஒரு கிலோ என அறிவித்திருக்கிறார். 41 ஆண்டுகள் கழித்து..அண்ணாவின் கனவை நிறைவேற்றி வைத்துள்ள கலைஞரை மனதார பாராட்டுகிறேன்.
ஆனால் இச்சமயத்தில் ஒரு சில வேண்டுகோள்.
தேவையில்லாதவர்களுக்கும்,மாதம் கணிசமாக சம்பாதிப்பவர்களுக்கும் கூட அரிசி கார்ட் உள்ளது.அவர்கள் ரேஷனில் அரிசி வாங்குவதில்லை.ஆனால்..கடைகளில்..அவர்கள் கார்டிலும் பில் போடப்பட்டு அரிசி திருடப்படுகிறது.அண்டை மாநிலங்களுக்கு அதிக விலைக்கு கடத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் அரசுக்கு பொருளாதார இழப்பை எற்பட காரணமாக ஆகிறது.இந்த சமூக விரோதிகளை அடையாளம் காணமுடியாது.அப்படியே யார் என்று தெரிந்தாலும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது..ஏனெனில் அவர்கள் ஏதாவது அரசியல் கட்சியைச் சேர்ந்தவராய் இருப்பார்கள்.
ஆகவே..அரிசி கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அரிசி விலையை 5 ரூபாய்க்கு உயர்த்துங்கள்.உன்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாகவே அரிசி கொடுங்கள்.ஒவ்வொரு வார்டிலும் கஷ்டப்படுபவர்கள்,நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கணக்கெடுங்கள்.அந்த பொறுப்பை அரசியல்வாதிகளிடம் கொடுக்காதீர்கள்.சமூக ஆர்வலர்களிடம் ஒப்படையுங்கள்.தேவையானவர்களுக்கு அரிசி போய் சேரட்டும்.
மற்றவர்களுக்கு சற்று உயர்வு விலையால் பாதிப்பு இருக்காது..இதனால் வரும் அதிகப்படி வருவாய் இலவச அரிசிக்கு ஈடுகட்டிவிடலாம்.
பிறகு என்ன 39ம் நமதே..
1 comment:
எவ்வளவு முக்கியமான பதிவு..ஒரு பின்னூட்டம் கூட இல்லையே..ம்ம்ம்ம்ம்
Post a Comment