Thursday, September 18, 2008

நான் பாதியில் எழுந்து வந்த திரைப்படங்கள்

பெரும்பாலான திரைப்படங்கள் பாதியில் எழுந்து வரவேண்டியவைகளாக இருப்பதால்...ஒரு சில நல்ல படங்கள் விமரிசனம் வந்தபின் சென்று பார்ப்பது என் வழக்கம்.மணிரத்னம்,பாலுமஹேந்திரா போன்ற சிலர் படம் விதிவிலக்கு...
ஆனால்..அவர்கள் படத்தில் நான் பாதியில் வெ
ளியே வந்திருக்கிறேன்.

இருவர் - இந்த படம் நான் செல்ல ஒரே காரணம்..மணிரத்னம் படம்.முதல் வாரத்திலேயே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்தேன்..பிரகாஷ்ராஜ்,மோஹன்லால் நடித்திருந்தனர்.ஒரு நல்ல படம் பார்க்கப்போகிறோம்..என்ற மகிழ்ச்சி சுத்தமாக போனது..படம் ஓட..ஓட..கொட்டாவி..மேல்..கொட்டாவி..
இவரது படம் எப்போதும் சற்று இருட்டாக இருக்கும்..அப்படி இந்த படம் இருந்திருந்தால்...ஏ.சி.தியேட்டரில் தூங்கியிருப்பேன்..ஆனால் சற்று வெளிச்சமாக வேறு எடுத்திருந்தார்.அரை மணி நேரம் சென்றிருக்கும்..திடீரென..வித..விதமான சத்தம்..ஏ.ஆர்.ரஹ்மான்..ரீரிகார்டிங்கில் கோளாறா..என்று பார்த்தால்..வந்திருந்த ரசிகர்கள் எழுப்பிய குறட்டை சத்தங்கள் அவை என உணர்ந்தேன்.
என்னை ஏமாற்றிய படம் இது.

ஜூலி கணபதி -நான் மதிக்கும் மற்றோரு இயக்குநர் பாலு மஹேந்திரா.இவரது இந்த படம் சத்யம் காம்ப்ளஃக்ஸில் பார்த்தேன்..நீண்ட நாளைக்குப் பிறகு சரிதா நடித்திருந்ததாலும்,என் அபிமான இயக்குநர் படம் என்பதாலும் முதல் வாரத்தில் தியேட்டரில் ஆஜர்.பிறகு தான் என் விதியை நொந்துக்கொண்டேன்.திரை முழுக்க ஆக்ரமித்துக்கொண்ட சரிதா..பாலக்காட் தமிழ் ஜயராம்..இப்போது நினைத்தாலும் வயிற்றைக் குமட்டுகிறது.மூன்றாம் பிறையில் நளினமாக கமல்..சில்க் நடனம் எடுத்தவரா...ரம்யாகிருஷ்ணனை வைத்து..ஒரு ஆபாச பாடல்/நடனம் எடுத்தார்.
கொஞ்சமும் லாஜிக் பற்றிக்கவலைப்படாத படம்.

பாபா -என்னை ஏமாற்றிய ..நான் பாதியில் வந்த மற்றோரு படம்..இப் படம் பற்றி எழுதுவதை விட வாளா இருப்பதே சிறந்தது.எங்கிருந்தோ ஓடி வந்து கையெழுத்துப்போட இருந்த விசுவின்
பேனாவை தட்டிவிடும்..ருத்ராக்க்ஷக்கொட்டை படத்தைக்கூட ரசித்த என்னால்..இந்த படத்தை...
ஒரு பகுதி பணத்தை விநியோகஸ்தர்களுக்கு ரஜினி திருப்பிக் கொடுத்தாராம்.நான் வாங்கிய டிக்கட் பணத்தில் ஒரு பகுதியை தியேட்டர்காரர்கள் எனக்குத் திருப்பித் தரவில்லை.

6 comments:

ஜோ / Joe said...

//ஏ.ஆர்.ரஹ்மான்..ரீரிகார்டிங்கில் கோளாறா..என்று பார்த்தால்..வந்திருந்த ரசிகர்கள் எழுப்பிய குறட்டை சத்தங்கள் அவை என உணர்ந்தேன்//

:))))

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஜோ

தாமிரா said...

உங்க‌ள் அனுப‌வ‌மும் க‌ண‌க்கில் எடுத்துக்கொள்ளப்ப‌டுகிற‌து. ப‌ங்கு கொண்ட‌மைக்கு ந‌ன்றி.! பெரிய‌ த‌லைக‌ளின் ப‌ட‌ங்க‌ளை சொல்லிய‌திலிருந்தே தெரிகிறது, நீங்க‌ள் வ‌ழ‌க்க‌மாக‌வே மொக்கைப்ப‌ட‌ங்க‌ளிலிருந்து த‌ப்பி விடுகிறீர்க‌ள் என்ப‌து. அவ‌ற்றிற்கு எவ்வ‌கையிலும் குறையாத‌தே நீங்க‌ள் குறித்த‌ ப‌ட‌ங்க‌ளும்.

Anonymous said...

உங்கள் ரசனை புரிகிறது... :)

T.V.Radhakrishnan said...

nanri thaamira

T.V.Radhakrishnan said...

// Anonymous said...
உங்கள் ரசனை புரிகிறது... :)//

;-))))))))