Monday, September 1, 2008

வினாயகர் சதுர்த்தியும், சினிமாக்களும்

வினாயகசதுர்த்தி நாளை(3-9-08) கொண்டாடப்படுகிறது. என் நண்பர் ஒருவர் பழுத்த ஆன்மீகவாதி.அவரை..அன்று முழுவதும் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் என்ன சார் இப்படி கேட்கிறீர்கள்..அன்று முழுவதும் நான் பிசி என்றார்.
'எனக்குத் தெரிந்து..காலையில் குளித்து முடிந்ததும்..கடைத்தெருவிற்கு சென்று களிமண் பிள்ளையார்,அவருக்கு ஒரு குடை.பூ,பழங்கள் இவற்றை நீங்கள் வாங்கி வரவேண்டும்..வீட்டில் மனைவி எப்போதும் போல் சமைப்பதுடன்..கொழுக்கட்டை,வடை,பாயாசம் செய்வார்கள்.பின்..சாமி கும்பிடுவீர்கள்..எல்லாம் 10மணிக்குள் முடிந்துவிடுமே'என்றேன்.
அதற்கு நண்பர்,'அது எல்லாம் வெறும் ஃபார்மாலிட்டி தான்...அதற்குப் பின்னால் தான்..சன் டி.வி.யில்,சாலமன் பாப்பையா .பட்டிமன்றம்..ராஜா கூட இருக்கார்..தமாஷா இருக்கும்.
அப்புறம் 11மணிக்கு ஒரு படம்..அதுமுடிந்ததும் இன்னோருபடம்..மாலை 6 மணிக்கு ஒரு படம்,9.30 மணிக்கு ஒரு படம்னு நாலு படம் இருக்கு..நடு நடுவே பல சினிமா பிரபலங்கள் பேட்டி..
மத்யானம்..தூங்கக்கூட நேரம் இல்லை'என்றார்.
அடப்பாவிகளா..இந்த பண்டிகை..முக்கியமானது என்றுதானே..விடுமுறையே விடுகிறார்கள்..என்றேன் நக்கலாக.
'ஒரு மணி நேர பூஜைக்கு..முழுநாள் விடுமுறை யார் விடச்சொன்னது?'எடக்குமடக்கான பதில்.
தனி மனிதனே..சற்று சிந்தித்துப்பார்..
விடுமுறை விட்டதால் எல்லா மக்களின் நேரமும்...எவ்வளவு கோடிக்கணக்கான மணி நேரம் வீண்?
உற்பத்தி எவ்வளவு பாதிக்கப்படுகிறது.
நாட்டுக்கு எவ்வளவு கோடிக்கணக்கான பணம் இழப்பு..
பொழுதுபோக்கு அவசியம் தான்...24 மணி நேரமும் அது தேவையா.

13 comments:

விஜய் ஆனந்த் said...

இப்ப பண்டிகைகளெல்லாம் தொலைக்காட்சியிலதான் கொண்டாடப்படுகின்றன.

இந்த trend வந்து ரொம்ப நாளாயிடுச்சி...ஹம்ம்ம்...தீபாவளி, பொங்கல்....எதுவும் விதிவிலக்கில்ல...

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)))

நெனச்சேன். உங்க நண்பார் டீவி நிகழ்ச்சிகளை பற்றிதான் சொல்லப்போறார்ன்னு.

அதான் "இந்திய தொலைக்காட்ச்யிலேயே முதல் முதலாக"ன்னு படத்துக்கு விளம்பரம் போட்டே நம்மாளை கவுக்குறானுங்க. அந்த படம் ஒரு மொக்கை அல்லது பல தடவை அதே சேன்னலில் போட்டது மறந்திருப்பானுங்களோ. அப்புறம் பண்டிகை ஸ்பெஷல்ன்னு சினிமா பிரபலங்களின் இண்டர்வியூ. அதுல நான் இப்படி இருந்தேன் அப்படி இருந்தேன். இந்த பண்டிகையை சின்ன வயசுல அவ்வளவா கொண்டாடியதுல்ல. ஆனா இப்போ ரசிகர்களுடன் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சின்னு அவங்க போடுற பிட்டுக்களையெல்லாம் இங்கே உட்கார்ந்து வாயை ஆன்னு பிளந்து வச்சிக்கிட்டு பார்க்கிறோம். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். :-(

அவனும் அவளும் said...

******உற்பத்தி எவ்வளவு பாதிக்கப்படுகிறது.
நாட்டுக்கு எவ்வளவு கோடிக்கணக்கான பணம் இழப்பு..
பொழுதுபோக்கு அவசியம் தான்...24 மணி நேரமும் அது தேவையா****

விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு அவரவர் விருப்பம்.

kanchana Radhakrishnan said...

//விஜய் ஆனந்த் said...
இப்ப பண்டிகைகளெல்லாம் தொலைக்காட்சியிலதான் கொண்டாடப்படுகின்றன.

இந்த trend வந்து ரொம்ப நாளாயிடுச்சி...ஹம்ம்ம்...தீபாவளி, பொங்கல்....எதுவும் விதிவிலக்கில்ல//


இந்த டிரண்ட் வந்து ரொம்ப நாளாச்சு..உண்மைதான்..இருந்தாலும் மனம் சமயங்களில் வேதனைப் படுவதை தடுக்க முடியவில்லையே!!!

kanchana Radhakrishnan said...

//அவங்க போடுற பிட்டுக்களையெல்லாம் இங்கே உட்கார்ந்து வாயை ஆன்னு பிளந்து வச்சிக்கிட்டு பார்க்கிறோம். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். :-(//


உண்மைதான் மைஃப்ரண்ட்..என்ன செய்வது?டி.வி.பார்ப்பதும் ஒரு அட்டிக்ட் ஆகிவிட்டது.:-(((

kanchana Radhakrishnan said...

//விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு அவரவர் விருப்பம்.//

அடடா..நக்கீரனை எங்கே இரண்டு நாட்களாக காணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.,
வருகைக்கு நன்றி அவனும்,அவளும்.

அவனும் அவளும் said...

*****அடடா..நக்கீரனை எங்கே இரண்டு நாட்களாக காணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.,*******

கொஞ்ச வேல இருந்தது அது தான் !

கோவி.கண்ணன் said...

இராத கிருஷ்ணன் ஐயா,

டிவி நிகழ்ச்சிகள் மீது ஏன் இந்த கொலை வெறி ?

:)

என்ன இருந்தாலும் தீபாவளிப் பண்டிகைகளை நடிகர் - நடிகையோடு வீட்டுக்குள் கொண்டாட வகை செய்யும் சின்னத் திரைகள் மக்கள் சேவையில் இமயம் போல் உயர்ந்து இருக்கிறதா இல்லையா ?
:)))))))))

மங்களூர் சிவா said...

அப்பாடா நல்லவேளை நான் நேத்து ரெண்டு கோவில்க்கு கட்டில் துர்கா பரமேஸ்வரி, உடுப்பி போயிருந்தேன் திரும்ப வரப்ப ராத்திரி ஆகிடுச்சு அதனால இந்த டிவில இருந்து தப்பிச்சேன் இல்லைனா நானும் நமீதா, பாவனாவோட புள்ளையார் சதுர்த்தி கொண்டாடிருப்பேனோ என்னவோ!!!

:))))

kanchana Radhakrishnan said...

//சின்னத் திரைகள் மக்கள் சேவையில் இமயம் போல் உயர்ந்து இருக்கிறதா இல்லையா ?//


கோவி இமயம் என்று ஒரு டி.வி.சேனல் இருக்கிறது...கலைஞர் டி.வி.,சன் டி.வி. இவற்றை அவர்களுடன் ஒப்பிடுவதாக சம்பந்தபட்டவர்கள் நினைத்து விடப்போகிறார்கள்.

kanchana Radhakrishnan said...

//திரும்ப வரப்ப ராத்திரி ஆகிடுச்சு அதனால இந்த டிவில இருந்து தப்பிச்சேன் இல்லைனா நானும் நமீதா, பாவனாவோட புள்ளையார் சதுர்த்தி கொண்டாடிருப்பேனோ என்னவோ!!!//அடடா..உங்கள் பின்னூட்டத்திலேயே வருத்தம் தொனிக்கிறதே..சிவா

மங்களூர் சிவா said...

/
kanchana Radhakrishnan said...

//திரும்ப வரப்ப ராத்திரி ஆகிடுச்சு அதனால இந்த டிவில இருந்து தப்பிச்சேன் இல்லைனா நானும் நமீதா, பாவனாவோட புள்ளையார் சதுர்த்தி கொண்டாடிருப்பேனோ என்னவோ!!!//அடடா..உங்கள் பின்னூட்டத்திலேயே வருத்தம் தொனிக்கிறதே..சிவா
/

அழுவாத மாதிரி நடிச்சாலும் கண்டுபிடிச்சிடறேங்களே!!

:)))))))))

kanchana Radhakrishnan said...

சிவாவை நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறேன்
;-))))