Monday, August 31, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

Sunday, August 30, 2009

நேற்று கலைவாணர் நினைவு நாள்..

நேற்று கலைவாணர் நினைவு நாள்..(30-8-09) அவரைப் பற்றி சில விஷயங்களை பற்றிய பதிவு..

அந்த நாட்களில் கலைவாணர் நடித்தால் படம் ஓடும் என்ற நிலை.பக்தராமதாஸ் என்று ஒரு படம்..ஒரே காட்சியில் படம் படுத்து விட்டது.படத்தின் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் வந்து முறையிட்டு அழுதாராம்.உடனே கலைவாணர்..தான் நடித்து ஒரு தனி காமெடி ட்ராக்கை அப்படத்துடன் இணைத்தாராம்.படம் மீண்டும் வெளியானது..சூபர் ஹிட்.

ஒரு சமயம்..கலைவாணரும்,எம்.ஜி.ஆரும்..நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.அப்போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்று அறுந்து விட்டதாம்.எம்.ஜி.ஆர்., அதை தூக்கிப் போட்டுவிட்டு..கலைவாணரிடம் நாளை வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம் என்றார்.அடுத்த நாள் எம்.ஜி.ஆர்., கலைவாணரை செருப்பு வாங்க கூப்பிட்டார்.கலைவாணர்..முதல் நாள்.எம்.ஜி.ஆர்., தூக்கி எறிந்த செருப்பை தைத்து கொண்டு வந்து போட்டாராம்.பின்'தம்பி..அவசியம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் வாங்கக் கூடாது..இருக்கும் பொருளை வீணாக தூக்கி எறியக் கூடாது.வீண் செலவும் கூடாது' என அறிவுரைக் கூறினாராம்.

கலைவாணர் வீட்டில் வருவோர் அனைவரும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது கலைவாணரின் கொள்கை.அதை எம்.ஜி.ஆரும்..கடைசிவரை கடைபிடித்தார்.

கலைவாணர் மருத்துவமனையில் இறுந்த போது..அவர் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது..உடனே பல ரசிகர்களும்,நண்பர்களும்..மாலை,மலர்வளையம் எல்லாம் எடுத்துக் கொண்டு அவரை கடைசியாகக் காண விரைந்தனராம்..அவர்களைக் கண்ட கலைவாணர்..தான் இன்னும் இறக்கவில்லை என்று அவர்களிடம் கூறி திருப்பி அனுப்பினாராம்.பின் தன் உடன் இருந்த நண்பரிடம்.நகைச்சுவையாக 'இவர்களுக்காகவாவது நான் ஒரு முறை இறந்தால் தேவலை' என்றாராம்.

நடிப்பவர்களை கூத்தாடிகள் என்ற நிலையை மாற்றி..அவர்களை கலைஞர்கள் என்று சொல்ல வைத்தது அவர் சாதனை.

யார் யாரையோ கவுரவிக்கும் மத்ய அரசு..இவரை கவுரவிக்கவே இல்லை.

கோவி கண்ணனுக்கு கண்டனம்..

கோவியார்..ஈழம் குறித்து..நேற்று இணையத்தில் வந்த பலர் பதிவுகளுக்கு பதில் சொல்வதாய் எண்ணிக்கொண்டு..ஒரு பதிவை நேற்று எழுதியிருந்தார்.

அதில்..இதுபற்றி இணையத்தில் எழுதுவதால்..எந்த----- ஆகப் போவதில்லை என்ற தலைப்பு வேறு..

அவரது இந்த எண்ணத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி..ஊடகங்களில் வந்ததால்தான் உலகு அறிந்தது.அதற்கு மறுப்பு வந்தது தனிக்கதை.ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாது இணையதளம் வளர்ந்து வருகிறது.

ஆகவேதான்..எல்லாக் கட்சிகளும்..தங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றன.

வெகுஜன பத்திரிகைகளும்..பதிவுகள் பற்றி எழுதத் தொடங்கியுள்ளன.

ஒரு பத்திரிகை போட்டி நடத்தினால் இவ்வளவு கதைகள் வருமா..என ஆச்சர்ய படத்தக்க விதத்தில் உரையாடல் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு 250 கதைகள் வந்தன.

தமிழ் சினிமா.காம் என்ற வலைத் தளம்..திரைப்படங்களை பதிவர்கள் விமரிசிப்பதைக் கண்டு...தன் விமரிசனத்தை கவலையுடன் வைத்துள்ளது.

செந்தழல் ரவியின் வலைத்தளத்தி..நான் sap படித்துள்ளேன்..எனக்கு ஏதேனும் வேலைக் கிடைக்குமா? என்ற நம்பிக்கை கேள்வியை ஒருவரால் வைக்க முடிந்தது.

சக நண்பர் சிங்கை நாதனுக்கு..எம்.ஜி.ஆர்.,க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது..மக்கள் எப்படி பிரார்த்தித்தார்களோ அந்த அளவு அனைத்து சமயத்தினரலும் பிரார்த்தித்திக்க முடிந்தது.

ஆகவே..வெறும் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடமல்ல இணையத்தளம்.

நடப்பது..நடக்கட்டும்..எனக்கென்ன..என அனைவரும் வாளயிருந்து விட்டால்..எந்தவொரு துறையும் தேவையில்லை.

நம்மால் முடியாவிடினும்..நடப்பதை உலகுக்கு தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு எவ்வளவு கடமைகள் உள்ளதோ..அந்த அளவிற்கு இணையங்களுக்கும் உள்ளது என்பதே என் எண்ணம்.

பெரிய..பெரிய வல்லரசுகளாலேயே அறிக்கை விடுவதைத் தவிர வேறு ஏதும் உருப்படியாக செய்யமுடியவில்லை..நம்மால் மட்டும் ஒரு ****ம் செய்யமுடியாது என அனைவருக்கும் தெரியும்..இருந்தாலும்.சுகத்தை பங்கிடும் போது இரட்டிப்பாவதும்..துக்கத்தை பகிரும் போது குறைவதும் உண்டு. அதுபோலத்தான்..மனத்துயரை பகிர்ந்துக் கொள்ளவே அப்பதிவுகள் என்பதை கோவி புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே..கோவியின் பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Saturday, August 29, 2009

மன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்




மன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்
மனவலிமை இருந்தால் இதையும் பாருங்கள்
http://puhali.com/index/view?aid=282

Friday, August 28, 2009

காங்கிரஸ் கட்சியும்..நடிகரும்...

காங்கிரஸ் கட்சியில் நடிகர்கள் சேர்ந்தால் என்னவாகும்..என்று யோசித்தேன்..முன்பெல்லாம் கூட தமிழக காங்கிரஸில் இந்த அளவு தலைவர்கள் பிணக்கு இருந்ததில்லை.ஆனால் இன்று?

தங்கபாலு கோஷ்டி,வாசன் கோஷ்டி,இளங்கோவன் கோஷ்டி,சிதம்பரம் கோஷ்டி..இப்படி சொல்லிக்கோண்டே போகலாம். இவர்களைத்தாண்டி சேரும் நடிகர்கள் பிரகாசிக்க முடியுமா?

உடன் எனக்கு நடிகர் திலகமே ஞாபகத்தில் வந்தார்..

ஆரம்பத்தில் தி.மு.க.,வில் இருந்தவர்..1955ல் கட்சி பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக திருப்பதி போய் வந்ததால்..கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.பின் 1961 முதல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராகவும்..மக்கள் தலைவர் காமராஜரின் பிரதம சீடனாகவும் இருந்தார்.காமராஜருக்குப் பின் இந்திராகாந்தியின் ஆதரவாளர் ஆனார்.1982ல் இந்திரா இவரை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கினார்.பின் 1987ல்.எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவக்கினார்.ஜானகி அணியுடன்..கூட்டு சேர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்க்கொண்டார்.அவராலேயே திருவையாறு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை.பின் 1989ல் தன் கட்சியை ஜனதாதள் கட்சியுடன் இணைத்து..ஜனதாதளத்தின் தமிழக தலைவரானார்.

மாபெரும் நடிகன்..சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்ப பின்னணி கொண்டவராலேயே அரசியல் சமாளிக்கமுடியவில்லை.நடிப்புலகில் கொடிகட்டி பறந்தவர்..அரசியல் வாழ்வில் படு தோல்வி அடைந்தார்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..கோஷ்டி தகராறில் சிக்கித் தவிக்கும் கட்சியில்..ஒரு நடிகன் சேர்ந்தால் அவனால் அதிக பட்சம் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை அனுபவிக்க மட்டுமே முடியும்.

இதுதான் யதார்த்தம்.

இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை.

Thursday, August 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-8-09)

இந்தியாவில் பல லட்சம் குழந்தைகளுக்கு..ஆரம்ப,நடுநிலை..மற்றும் கல்லூரி படிப்புகள் கூட வழங்கப்படவில்லை.ஆனாலும் கூட அங்கு தொழில் நுட்பக் கல்வி உலகத்திலேயே மிகச் சிறப்பாய் உள்ளது.இது போன்ற கல்வி திட்டம் தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்..என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

2.அண்ணாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்..அடுத்தமாதம் 15ஆம் தேதி இதற்கான விழா நடக்கிறது.முதல்வர் கலைஞர் தலைமையில்..மத்திய நிதி அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி பங்கேற்று நாணயத்தை வெளியிட உள்ளார்.

3.இன்று..தமிழ்த் திரையுலகில் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவிற்கு 3 படங்கள் இருக்கிறது.இதுவும் ஒரு சாதனை.அந்த திரை வசனகர்த்தா கலைஞர்.அவரின்..நீயின்றி நானில்லை கதையை இயக்குநர் இளவேனில் இயக்குகிறார்.தியாகராஜன் இயக்கத்தில் பொன்னர் சங்கர்,ஸ்ரீரங்கம் இயக்கத்தில் பெண்சிங்கம்.86 வயதிலும்..சாதனை புரிகிறார் கலைஞர்.

4.அப்பாவும்..அம்மாவும்..கட்டுப்பாடு என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள்.பெற்றோரை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்த முடியாத அந்த குழந்தைகள் மனதில் ஆற்றாமை இருந்துக் கொண்டே இருக்கும்.அதனால்..பெற்றோரை பழி வாங்குகிறேன் என்று அவர்கள் விரும்பாத செயல்களை செய்துக் கொண்டு இருப்பார்கள்..ஆகவே..பெற்றோர் குழந்தைகள் மனதையும் புரிந்து நடக்க வேண்டும்.

5.இந்த வார அரசியல் ஜோக்கர் விருது பெறுபவர் லால்லு பிரசாத்...
பீகார் மாநிலம் பருவ மழை தவறியதால் வறட்சியில் சிக்கியுள்ளது.அதற்கு அவர் சொன்ன காரணம்.
சூரியகிரகணம் அன்று அந்த நேரத்தில்..முதல்வர் நிதீஷ்குமார்..பிஸ்கெட்,குளிர்பானம் சாப்பிட்டதால்தான்..பீகாரில் வறட்சி தாண்டவமாடுகிறது.

6.ஒரு ஜோக்..
டாக்டர் மூணு மாசமா தூக்கமே இல்லை
மூணு மாசம் என்ன பண்ணினீங்க..முதல்லயே வந்திருக்கலாமே
நிரந்தரமா தூங்க வைச்சுட்டீங்கன்னா என்ன செய்யறதுங்கற பயம்தான்

சிவாஜி ஒரு சகாப்தம்-24

1981ல் வந்த படங்கள்
மோகனபுன்னகை
சத்ய சுந்தரம்
அமர காவியம்
கல்தூண்
லாரி டிரைவர் ராஜாகண்ணு
மாடிவீட்டு ஏழை
கீழ் வானம் சிவக்கும்

மோகனப் புன்னகை..ஸ்ரீதர் கதை, வசனம்.இப்படத்தில் சிவாஜி, கீதா, ஜெயபாரதி நடித்தனர்.எம் எஸ் விஸ்வநாதன் இயக்கம்

ஸ்ரீதருடன்..சிவாஜி இணைந்த கடைசி படம்..படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை


அமரகாவியம்..விஸ்வனாதன் தயாரிப்பாளர்.அமிர்தம் இயக்கம்.சிவாஜி, ஸ்ரீபிரியா, மாதவி நடித்தனர்.முக்கந்தர் கா சிக்கந்தர் என்ற ஹிந்தி படத்தின் தழுவல்.விஸ்வநாதன் இசை

கல்தூண்..மேஜர் சுந்தரராஜன்..நாடகமாக போட்ட கதை..மேஜர் இயக்கத்திலேயே படம் வெளிவந்து..100 நாட்கள் ஓடியது.சிவாஜி, கே ஆர் விஜயா., எம் எஸ் வி இசை

லாரிடிரைவர் ராஜாகண்ணு..(புஷ்பலதா   நடிகர் ஏ.வி.எம்.ராஜன் மனைவி..தயாரிப்பாளர்) ஸ்ரீபிரியா நாயகி.டிரைவர் நாயுடு என்ற தெலுங்குப் படத்தின் தழுவல்

மாடி வீட்டு ஏழை..சிவாஜி கடைசியாக கலைஞர் வசனம் பேசி நடித்த படம்.
சுஜாதா,ஸ்ரீபிரியா உடன் நடித்திருந்தனர்.முரசொலி செல்வம் தயாரிக்க அமிர்தம் இயக்கம்

கீழ் வானம் சிவக்கும்..விசுவின் சகோதரர் ராஜாமணி குழுவினரால்..மேடையேற்றப்பட்ட நாடகம்.விசு வசனம்..படம் 100 நாட்கள் ஓடியது.முகதா ஸ்ரீனிவாசம் இயக்கம்.சரிதா, சரத்பாபு ஆகியோருடன் சிவாஜி.எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 'கடவுள் நினைத்தான்" என்ற பாடல் ஹிட்


சத்ய சுந்தரம் மற்றுமொரு 100 நாள் படம்.கே எஸ் பிரகாஷ்ராவ் இயக்கம்.சிவாஜியுடன் ஸ்ரீபிரியா, கே ஆர் விஜயா, மாதவி நடித்தனர்.இசை விஸ்வநாதன்

1982ல் வந்த படங்கள்..
ஹிட்லர் உமாநாத்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
கருடா சௌக்யமா
சங்கிலி
வசந்தத்தில் ஒரு நாள்
தீர்ப்பு
நிவுரு கப்பின நிப்பு (தெலுங்கு)
தியாகி
துணை
பரீட்சைக்கு நேரமாச்சு
ஊரும் உறவும்
நெஞ்சங்கள்

சிவாஜி திரை உலகிற்கு வந்து 30 ஆண்டுகள் பூர்த்தி ஆன ஆண்டு.இரண்டு தலைமுறைகள் கடந்தும் நாயகனாக கோலோச்சி சாதனை படைத்தவர்.நாயகனாகவே ஒரே வருடத்தில் 13 படங்கள் நடித்து சாத்னை புரிந்தார்.

தீர்ப்பு..மற்றும் நிவுரு...படங்கள் வெள்ளிவிழா படங்கள்.

மற்றபடி..வா கண்ணா வா,சங்கிலி(இலங்கையில் 100 நாள்)தியாகி,பரீட்சைக்கு நேரமாச்சு ஆகியவை 100 நாட்கள் ஓடின.சங்கிலி..சிவாஜியுடன் அவரது மகன் பிரபு இணைந்த முதல் படம்.

மிண்டும் ஒரு நாடகம் வெற்றி படமாகியது..பரீட்சைக்கு நேரமாச்சு.

1983 படங்கள் அடுத்த பதிவில்.

Wednesday, August 26, 2009

என்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி

ஆகஸ்ட் 15ஆம் நாள் கடைசி தினமாக அறிவிக்கப்பட்ட மணற்கேணி 2009 போட்டி..சிங்கை பதிவர்களும்..தமிழ்வெளியும் சேர்ந்து நடத்த இருக்கும் போட்டி.

போட்டியின் கடைசி நாள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது..ஒரு போட்டியின் தேதி தள்ளி வைக்கப்பட்டால்..தள்ளி வைக்கப் பட்ட தேதியை அறிவிக்க வேண்டும்.ஆனால் இந்நாள்வரை அதை அறிவிக்கவில்லை.அதற்கான காரணம் கீழ்காணும் ஏதேனும் இருக்கும் என தோன்றுகிறது.

1.கருத்தாய்வுப் போட்டி என்றதும்..ஆகா..இதில் கலந்துக் கொண்டால்..நம்மால் வெல்லமுடியாது.இதற்கான இலக்கிய அறிவு நம்மிடம் இல்லை என பலர் எண்ண இடம் கொடுத்துவிட்டது.கோவி இதற்கான விளக்கம் கொடுத்தும்..அது சரிவர சென்றடையவில்லை.

2.உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வேறு..இருபது கதைகள் என்றபோதே நமக்கு கிடைக்கவில்லை..3 பரிசுகள் என்றால் எப்படி கிடைக்கும் என்ற மனப்பான்மை .இதை அறிந்துதான்..நடத்துநர்கள் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு எனவும் அறிவித்தனர்.(இதை அறிவித்ததும் தான்..நானும்..சிறப்பு பரிசாக ஒரு புத்தகமாவது கிடைக்கும்..என என் படைப்பை அனுப்பி வைத்தேன்)

3.பல பதிவர்கள் அவர்கள் எழுதும் நடைமுறை தமிழ்..இப்போட்டிக்கு ஒத்துவராது என கலந்துக் கொள்ளவில்லை என தோன்றுகிறது.

4.எதிர்ப்பார்த்த அளவிற்கு..கட்டுரைகள் வராததால்..என்ன செய்வது என விழிக்கின்றனர் தேர்வுக் குழுவினர்.

5.இதனிடையே..சிங்கைநாதன் உடல்நிலை வேறு பாதிக்கப்பட்டதால்... சிங்கை பதிவர்கள் முழு ஈடுபாடும் இப்போது அதில் இருக்கிறது..

காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆசை..நான் மணி கட்டிவிட்டேன்.

சரி.இப்போது..என்னதான் சொல்ல வருகிறீர்கள்..என்கிறீர்களா....சிங்கை செல்லும் அதிர்ஷ்டம் எனக்கில்லை..சிறப்பு பரிசையாவது அனுப்பிவையுங்கள்..என்கிறேன்.

வாய் விட்டு சிரியுங்க...

1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்

2.பஞ்ச பாண்டவருக்கு ஒரே மனைவி..
இதில் என்ன ஆச்சர்யம்..எனக்கும் ,என் அண்ணனுக்கும் கூடத்தான் ஒரே மனைவி
என்ன சொல்ற நீ
அவருக்கும் ஒரு மனைவி...எனக்கும் ஒரு மனைவி...அதைத்தான் சொன்னேன்

3.டாக்டர்- முன்னே எல்லாம்..நான் ஒரு நாளைக்கு இருபது ஆபரேஷன் செய்வேன்..ம்..அதெல்லாம்..இறந்த காலம்
நோயாளி-இப்ப நீங்க ஒரு ஆபரேஷன் செய்தாலும்..அது நோயாளியோட இறந்த காலம்

4வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க..
தரகர்-யாருக்கு
வயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே...

5.கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு
அது காலாவதி ஆயிடுச்சு

6.பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா
நன்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..

Tuesday, August 25, 2009

ஐ.டி.யின் தற்போதய நிலை..

எனது முந்தைய பதிவில்..ஐ.டி.யின் தற்போதய நிலை குறித்து ஏதும் சொல்லவில்லையே என நண்பர்கள் காலப்பறவை,துபாய் ராஜா,ராஜாதி ராஜ் ஆகியோர் பின்னூட்டம் இட்டிருந்தனர்.ஆகவே இப்பதிவு.

அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவு..பல நாடுகளில் எதிரொலிக்கவே செய்தது.அதன் பாதிப்பு நம் நாட்டிலும் தெரிந்தது.பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 7 சதவிகிதம் இருப்பதாகவும்..பண வீக்க விகிதம் மைனசில் போவதாகவும் புள்ளி விவரங்கள் இருந்தாலும்..ஐ.டி.,செக்டார் பாதிப்பு இருக்கிறது.

பல நிறுவனங்கள் அளித்து வந்த ஊதியத்தில்..ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்தது.ஊதியத்தை நம்பி தவணை முறையில் வீட்டு கடன் வாங்கியோர் தவணை கட்ட முடியா நிலை.ரியல் எஸ்டேட்
துறையும் அதனால் வீழ்ச்சி.கேம்பஸ் இன்டெர்வியூ..கடந்த வருடம்..கல்லூரிகளில் நடத்தப் படவில்லை.

இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் கூட..தங்கள் ஊழியர்களை 'பெஞ்ச்" என்ற சொல்லப்படும் முறையில்..காத்திருக்க வைத்துள்ளது.

2007 ஆம் ஆண்டு..ஒரு கல்லூரியில் கேம்பஸ் இண்டெர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கற்புநிறை கணினி நிறுவனம் இன்னமும் வேலையில் சேர்க்கவில்லையாம்.அந்த மாணவர்கள் நிலை திரிசங்குசொர்க்கம் தான்.

இதெற்கெல்லாம் என்று விடிவுகாலம் வரும்? என கேள்விக்குறியுடன் மாணவர்கள் தரப்பு.ஆனால்..மென்பொருள் வல்லுநர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் அறிவுரை..

Love your job but don't love your company because you may not know when your company stops loving you

எவ்வளவு மனக்குறையிருந்தால் இப்படி சொல்லத் தோன்றும்.

இனி நிலை எப்படி.?..சற்றும் கவலை வேண்டாம்..

வெளிநாடுகளிலிருந்து..குறிப்பாக அமெரிக்காவிலிருந்து கிடைக்கும்..வேலைகள் நம் நிறுவனங்களுக்கு குறையலாம்.ஆனால் இல்லாமல் போகாது.வாங்கும் ஊதியம் சற்றே குறையலாம். வேலைபோகாது.
நம்பிக்கையே வாழ்க்கை.

சமீபத்தில் இந்தியா விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூட..உலகிலேயே பொறியியல் துறை கல்வியில் இந்தியாதான் சிறந்தது எனக் கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 43 சதவிகிதம் இந்தியர்களே..

இந்தியர்களை விடுத்து..மென்பொருள்துறையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆகவே..நண்பர்களே கவலையை விடுங்கள்..

வாழ்வில் மீண்டும் வசந்தம் மலரும்.

ஐ.டி.துறையின் இன்றைய நிலை..

தங்க சுரங்கம்..தகர சுரங்கமாகிறது என்று பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை நான் எடுத்துப்போட http://sowmyatheatres.blogspot.com/2008/10/blog-post_10.html
..தமிழ்நெஞ்சம்..இது பற்றி உங்களது எண்ணம் என்ன..எனக்கேட்டிருந்தார்.அதற்கான பதிவே இது.

ஒரு மாணவன் 9ம் வகுப்பு தேறி 10ம் வகுப்பு போகிறான்..அவனுக்கான பள்ளிச்செலவுகள் போக..மாதம் ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்து..கணக்கு..மற்றும் சயின்ஸ் பாடங்களுக்கு டியூஷன் வைக்கப்படுகிறது.அவன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என குடும்பத்தினர் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.புத்திசாலி பையனாய் இருப்பவன் 90 மதிப்பெண்கள் சராசரியாகப் பெற்று தேறுகிறான். அவன் வாங்காமல் போன மதிப்பெண் எங்கே? என்று தேடப்படுகிறது.
+2 சேருகிறான்..சயின்ஸ் குரூப்..மொத்தமாக பள்ளிச்செலவுகள்..வருஷம் முழுதும் என மொத்தமாக டியுஷன் ஃபீஸ்..கணக்கு..பிசிக்ஃஸ்,கெமிஸ்ட்ரி,கம்.சயின்ஸ் என.,இரண்டு வருடங்கள் பெற்றோர் வயிற்றில் நெருப்பு.பையன் நல்ல மதிப்பெண் பெற்று தேறினால்..கவுன்சிலிங்கில் நல்ல காலேஜ் கிடைக்கிறது.சற்று குறைவான(95%!!!)மதிப்பெண் ஆனால் சுயநிதி கல்லூரியில்..வாங்குவதில்லை என்று சொல்லியபடியே வாங்கும் கேபிடேஷன் ஃபீஸ்(லட்சங்கள்)செலுத்தி...ஃபீஸ் 4 வருஷங்களும் கட்டி படிப்பை முடிக்கிறான்.
10ம் மதிப்பெண்,+2 மதிப்பெண்,இஞ்சினீரிங்க் மதிப்பெண்(இது 75%குறையாமை இருந்தால்தான் கேம்பஸ் தேர்வில் நல்ல கம்பெனி ) பார்த்து வேலை கிடைக்கிறது.
இது எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..இவ்வளவு கஷ்டங்கள்..தியாகங்கள் செய்தால் தான் வேலை.அதுவும் உடனே லட்சக்கணக்கில் இல்லை,..ப்ராஜெக்ட்..டீம் லீடர்..
இப்படியெல்லாம் மாதம் 25000க்குள்தான் சம்பளம்.காலநேரம் பார்க்காமல் ..ஆண்..பெண் என சலுகைகள் இல்லாமல்..உடலை வறுத்தி உழைக்க வேண்டும்.வாழ்வில் பல சௌகரியங்கள்..சின்னச்சின்ன சந்தோஷங்கள் எல்லாம் அவனுக்கு கிடையாது.

சரி இனி தலைப்பு...
இந்திய ஐ.டி.கம்பெனிகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அவுட் சோர்ஸிங் முறையில் வேலையைப் பெறுகின்றன.ஒரு மணி நேரத்திற்கு 15..20..யு.எஸ்.டாலர் என்ற முறையில் வாங்கிக்கொள்கின்றனர்..ஆனால் வேலையில் இருப்போருக்கு 2 அல்லது 3 டாலர் ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கப்படுகிறது.இரவு நேர வேலை. ஓரளவு நல்ல சம்பளம்..அதற்கு ஊழியர்கள் கொடுக்கும் விலை..நிம்மதியில்லா வாழ்க்கை,சிறு வயதிலேயே இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள்.

இப்படி தேவையில்லா வாழ்வானாலும்..பொன் முட்டையிடும் வாத்தே ஐ.டி.துறை.இப்போது..அகில உலகிலேயே பொருளாதார சிக்கல் உள்ளது.ஏர்வேஸ் ஆட் குறைப்பு பற்றி பேசாத நாம்..இத் துறை பற்றி மட்டும் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.

(மீள்பதிவு)

இதையும் பார்க்கவும்

Monday, August 24, 2009

இன்னும் செத்துவிடாத மனித நேயம்...

சிங்கை நாதனுக்கான இருதய அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் தேவைப்படும் என்ற நிலையில்...பதிவுலக நண்பர்களும்..மற்றும் விஷயம் அறிந்து அவரது கல்லூரி நண்பர்களும்..பல நல்ல உள்ளங்களும்..நாங்கள் இருக்கிறோம்..கவலையை விடுங்கள் என்று கிட்டத்தட்ட 75 சதவிகித வரை இதுவரை நிதி திரட்ட உதவியுள்ளனர் என்ற செய்தி பால்ராஜ் அவர்களின் பதிவின் மூலம் தெரியவருகிறது.(http://www.maraneri.com/2009/08/latest-updates.html)இன்னும் 25% அதாவது 25000 சிங்கை டாலர்கள்தான்..அதை திரட்டிவிடலாம் என தெம்பை கொடுத்துள்ளது.உதவ எண்ணுபவர்கள் உடனே செய்யவும்.

இந்நிலையில்..அவருக்கு நடைபெறுவதாக இருந்த முதல் அறுவை சிகிச்சை ..புதனிலிருந்து வியாழன் அதாவது 27ம் நாள் காலை சிங்கை நேரம் 8மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மருத்துவம் பாட்டிற்கு..நடக்கட்டும்..நாமும் அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வோம்.

இனி தலைப்பிற்கு வருவோம்..

இப்போதெல்லாம்..அவ்வப்போது மனிதநேயம் செத்துவிட்டதா என்ற புலம்பல்கள் வருகின்றன.."இல்லை" என்பதற்கான நிகழ்ச்சி ஒன்று திரிச்சூர் அருகே நடந்துள்ளது,

கூலி வேலை செய்யும் ஒரு தம்பதிகளின் 5 வயது மகளுக்கு..இருதயத்தில் கோளாறு.அதற்கான அறுவை சிகிச்சைக்கு 60000 ரூபாய் ஆகும் என திரிச்சூர்,குன்னம்குலம் அருகே பெரும்பிளவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் பெற்றோருக்கு இயலாத நிலை.அப்போது நாங்கள் இருக்கிறோம் என் உதவிக்கு வந்துள்ளவர்கள் யார் தெரியுமா?

திரிச்சூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள்.அவர்கள் சிறையில் செய்யும் வேலைக்கு ஒரு நாளைக்கு 30 ரூபாய் கொடுக்கப்படுகிறதாம்..அதை சேர்த்து அனைவரும் இதுவரை ரூபாய் 29000 கொடுத்துள்ளார்களாம்.கைதிகள் செய்தித்தாள்கள் மூலம் விஷயம் அறிந்து தாங்களே வலிய உதவ வந்தார்களாம்.இதை சிறை மேலாளர் பி.பிரதீப் தெரிவித்துள்ளார்.

அறுவைசிகிச்சை அடுத்த மாதம் நடைபெறுகிறது.அதற்குள் மீத பணத்தை சேர்த்துவிடலாம் என்றும் கைதிகள் தெரிவித்துள்ளனராம்.

இப்போது சொல்லுங்கள்..செத்துவிட்டதா மனிதநேயம்...

அவரவர் பார்வையில்....(சிறுகதை)

அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.

அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'

'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Saturday, August 22, 2009

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.
ஜெயலலிதாவிற்கு..திலகம் இட்டு..அதை சற்றே அழித்து மேலே நீட்டினாற்போன்று இடுதல் பிடிக்கும்.
ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.



கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

Friday, August 21, 2009

இடைத் தேர்தலும்..விஜய்காந்தும்..

இடைத்தேர்தல் நடந்த ஐந்து தொகுதிகளுக்கான முடிவுகள் எதிர்ப்பார்த்தபடியே தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பிரதான கட்சியான அ.தி.மு.க.,வும் தன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.,மற்றும் பா.ம.க., கட்சித் தலைமை தேர்தலை புறக்கணித்தாலும்..அக்கட்சியின் தொண்டர்கள் புறக்கணிக்கவில்லை என்பது..வாக்குகள் விழுந்துள்ள சதவிகிதத்திலிருந்து தெரிகிறது.

அக்கட்சியின் தொண்டர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு விழுந்துள்ளன..என பார்த்தால்..பெருவாரியானவை தி.மு.க., கூட்டணிக்கே விழுந்துள்ளன.ஒரு சிலரே விஜய்காந்திற்கு வாக்களித்துள்ளார்கள்.

மொத்த தொகுதியிலும் சேர்த்து தி.மு.க., கூட்டணிக்கு 3,98,177 வாக்குகளும்..டி.எம்.டி.கே., விற்கு 1,37,479 வாக்குகளும் விழுந்துள்ளன.

வாக்குகள் சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என விஜய்காந்த்..அவர் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க சொல்லலாம்..ஆனால் உண்மையிலேயே..அ.தி.மு.க., போட்டியிடாததால் சில ஆயிரம் வாக்குகள் இவருக்கு அதிகமாக விழுந்துள்ளது.அவ்வளவே..

தான் மாபெரும் சக்தியாய் வளர்ந்து வருவதாய் எண்ணிக்கொள்ள ஏதுமில்லை.ஓட்டப்பந்தயத்தில்..நான் இரண்டாவதாக வந்தேன்..என..இருவர் மட்டுமே கலந்துக் கொண்ட பந்தயம் பற்றி பேசி என்ன பயன்.இனி வரும் நாட்களில்..கட்சியை பலப்படுத்துவதுடன்..கூட்டணிக்கும் அவர் தயாராய் இருந்தாலே..அவரால் இனி கட்சி நடத்த முடியும்..இல்லையேல்...வரும் தேர்தல்களில் நிற்க வேட்பாளர்கள் கூட தயாராய் இருக்க மாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி சொல்ல ஏதுமில்லை.தமிழ்நாட்டில்..தனியாக நின்றால்..கோவை,நாகபட்டிணத்தில் கூட அவர்கள் வெற்றி பெறமுடியாது.

பாவம்..பா.ஜ.க., அவர்களை விட்டு விடுவோம்...கொங்கு.......வேண்டாம் நமக்கு ஏன் பொல்லாப்பு.

அ.தி.மு.க.,வின் புறக்கணிப்பு...இதிலிருந்து கட்சி எழுந்திருக்க தலைமை..உடனே ஆவன செய்ய வேண்டும்.

இல்லையேல்..கலைஞர் சொன்னாற்போல தி.மு.க., மாபெரும் கட்சியாய் வளர்வதை தடுக்க முடியாது.

Thursday, August 20, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(21-8-09)

ஸ்விஸ் வங்கியில் கணக்கில் இருக்கும் கறுப்பு பண விவரம்..
இந்தியா-75 லட்சம் கோடி
ரஷ்யா-25 லட்சம் கோடி
பிரிட்டன்-20 லட்சம் கோடி
உக்ரைன்-5 லட்சம் கோடி
சீனா -4.8 லட்சம் கோடி
இந்தியாவில் பல அரசியல்வாதகளும் அடக்கம்.
வாழ்க இந்திய ஜனநாயகம்

2.எம்.எல்.ஏ.,க்களுக்கு மகாராஷ்டிராவில் 65 ஆயிரம்,ஆந்திராவில் 48ஆயிரம் சம்பளம்.எங்களுக்கு சம்பளம் கூடத் தேவையில்லை.டீசல்,ஃபோன்,உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் படி மட்டும்
கொடுத்தால் கூடப் போதும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

3.நாம் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளின் உதவி தேவைப்படுகிறது.

4ஒரு துறவியிடம் சிஷ்யன் 'குருவே இறைவன் எங்கிருக்கிறான் 'என்றான்.அதற்கு துறவி சொன்னார்..
வெண்ணெய்க்குள்ளே நெய்யைப்போல
விறகுக்குள்ளே தீயைப்போல
மலருக்குள்ளே மணத்தைப்போல
எள்ளுக்குள்ளே எண்ணேய்போல
எங்கும் உள்ளான் இறைவன் - என்றார்.

ஏழையின் சிரிப்பை மறந்தார் என்கிறார் ஒரு அரசியல்வாதி.

5.இந்தவார ஜோக்கர் விருது பெறுபவர் சுப்ரமணியசாமி..அவர் சொன்னது..
ஜனதா கட்சி 2011ல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை உருவாக்க பா.ஜ.க.,உடன் கூட்டணி அமைத்துள்ளது.திராவிட இயக்கங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.தில்லியில் தமிழகத்திற்கு மதிப்பு இல்லை.தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நல்லது.

6.ஒரு ஜோக்..
ஆசிரியர்- முட்டையிடும் குஞ்சு பொரிக்காது..அது என்ன
மாணவன்-ஆசிரியரான நீங்கதான் சார்.

சிவாஜி ஒரு சகாப்தம் - 23

1979ல் வந்த படங்கள்
திரிசூலம்
கவரிமான்
நல்லதொரு குடும்பம்
இமயம்
நான் வாழவைப்பேன்
பட்டாக்கத்தி பைரவன்
வெற்றிக்கு ஒருவன்

இவற்றுள் திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.

சிவாஜியுடன் ரஜினி இணைந்த இரண்டாம் படம் நான் வாழவைப்பேன்.அபிதாப் நடித்த மஜ்பூர் என்ற ஹிந்தி படக் கதை இது.சிவாஜியின் அருமையான நடிப்பைக் காணலாம்.நூறு நாள் படம்.

பட்டாக்கத்தி பைரவன்..இலங்கையில் 100 நாள் படம் சென்னையில் அறுபது நாட்கள் ஓடியது.

1980ல் வெளியான படங்கள்

ரிஷிமூலம்
தர்மராஜா
எமனுக்கு எமன்
ரத்தபாசம்
விஸ்வரூபம்

ரிஷிமூலமும்,விஸ்வரூபமும் நூறு நாட்கள் படம்.

தர்மராஜா..முதன் முதலாக ஜப்பானில் எடுக்கப்பட்ட படம்
சிவாஜி, கே ஆர் விஜயா நடிக்க எம் ஏ திருமுகம் இயக்கம்.விஸ்வநாதன் இசை

ரத்தபாசம்..சிவாஜி சொந்த படம்..சிவாஜி புரடக்ஷன்ஸ் முதன் முதலாய் வெளிநாட்டில் படபிடிப்பு நடத்திய படம். கே விஜயன் இயக்கம்.சிவாஜி, ஸ்ரீபிரியா.எம் எஸ் வி இசை

ரிஷிமூலம்..சிவாஜி, கே ஆர் விஜயா.எஸ் பி முத்துராமன் இயக்கம்.இளையராஜா இசை

எமனுக்கு எமன் ..சிவாஜி, ஸ்ரீபிரியா.டி யோகானந்த் இயக்கம்,இசை சக்கரவர்த்தி.எமனாகவும், சாதாரண குடிமகனாகவும் சிவாஜிக்கு இரட்டை வேடங்கள்.(எமலோக் என்ற தெலுங்கு படத்தின் தழுவல்)

விஸ்வரூபம்..ஏ சி திருலோகசந்தர் இயக்கம்.சிவாஜி, சுஜாதா நடிகக் பத்மாலயா பிக்சர்ஸ் தயாரிப்பு.அதாலத் என்ற ஹிந்தி படத்தின் தழுவல்

எமனுக்கு எமன்,ரத்தபாசம்,விஸ்வரூபம்..மூன்று படங்களிலும் சிவாஜி இரட்டை வேடங்கள்.

.

Wednesday, August 19, 2009

மண்ணிலே முத்தெடுப்பவன் மண்ணுக்குள்..

பருவ மழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டுள்ள ஆந்திராவில் கடந்த நாற்பது நாட்களில் 21 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.இதை ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியும் உறுதி செய்துள்ளார்.இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மழையை நம்பி மட்டுமே விவசாயம் நடைபெறும் இடங்களில் மழை பொய்த்தால் ..சம்பந்தப்பட்ட குறு விவசாயிக்கு நஷ்டமும்..கடனும்..கடன் மேல் வட்டியும் சேர்ந்து வாழ வழி தெரியாது..தற்கொலையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

கடந்த ஆண்டும்..மஹாராஷ்ட்ராவில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாது..பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர்.அவர்கள் இறந்தபின் அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்வதால் என்ன பயன்..அந்த பணத்தையும் கடன் கொடுத்தவர்கள் பிடுங்கிக் கொள்ளப் போகின்றனர்.

அரசாங்கம்..விவசாயிகளுக்கு..பல சலுகைகள்,கடன் தள்ளுபடி போன்றவற்றை அளித்தாலும்..அது உண்மையில் அவர்களைப் போய் அடைகிறதா..அல்லது நடுவில்..பல இடைத்தரகர்கள் வாயில் விழுகிறதா..தெரியவில்லை.

நமக்கு..சோறு போடும் விவசாயி.. அவன் குடும்பம் சோறின்றி இறப்பதா..

இயற்கை அன்னை நம்மை மன்னிப்பாளா?

கோடிக்கணக்கில் இலவசங்களை அள்ளிவிடும் அரசுகள்..நாட்டின் ஆணிவேரான விவசாயிகளை புறக்கணிக்கலாமா?

ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில விவசாயி குடும்பங்களை தத்தெடுத்துக் கொள்ளட்டும்..

இனி வரும் காலங்களில் வறுமைப் பேயை..விவசாயிகளின் குடும்பங்களிலிருந்து விரட்டட்டும்.

நாட்டில் விவசாயி மகிழ்ச்சியாய் இல்லாவிடின்..மற்றவர்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்?

Tuesday, August 18, 2009

பன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே !!

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் .(swine flu) பரவும் பயத்தை மக்களிடையே பரப்பிவருவதில் மீடியாக்கள் பெரும் பணி செய்து வருகின்றன.மக்கள் பீதி..என செய்திகள் சொல்லி பீதியடைய வைக்கிறார்கள்.

இந்நிலையில்..மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஜாத்..அருமையான ஒரு யோசனையை தெரிவித்துள்ளார்.அக் காய்ச்சல் வராமல் தடுக்க பள்ளிகளில் இறைவணக்கம் பாடுவதை நிறுத்த வேண்டும் என்பதே..மொத்தமாக அப்போது 1000 மாணவர்கள் ஒன்று கூடுகின்றனர்..அதனால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு என்கிறார்.

பதவி ஏற்ற நாள் முதல்..இவரது அறிக்கைகள் இவரை ஒரு ஜோக்கராகவே ஆக்கி வருகின்றன.

மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க மக்கள் இரவில் அதிக நேரம் டீ.வி., பார்க்க வேண்டும் என்றார்..காரணம் இரவில் டீ.வி., பார்ப்பதால்..மக்கள் சோர்வு அடைந்து..தூங்கிவிடுவார்களாம்.மக்கள் பெருக்கத்தை தடுக்கலாமாம்.

என்ன அருமையான யோசனை...

நம் தலையெழுத்து...இப்படி ஒரு அமைச்சர்...

Monday, August 17, 2009

வாய் விட்டு சிரியுங்க

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

Sunday, August 16, 2009

மனிதனாகும் ஆசை வேண்டாம்.

நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

Saturday, August 15, 2009

நோன்பு (சிறுகதை)

சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது.

பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார்.

கருமை நிறம் அதிகமா...அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில் கேசக்கற்றைகள்.சாந்தமே..உருவான..புன்முறுவலுடன் காணப்படும் அந்த முகம்.. இன்று சற்றே வாடிய ரோஜாப்போல...கண்மூடிக்கிடந்தது.மேல் உதடுகள் மீதும்..நெற்றிப்பரப்பிலும்..முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.தன் கையில் இருந்த கைகுட்டையால் அவற்றை ஒற்றி எடுத்தார்.

இப்பொது அவர் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.

அவள்..அவர் வீட்டில்..அவர் மனைவியாய் காலடி வைத்தது முதல்..நேற்று மாலை வரை பம்பரமாய் சுழன்றவள்.ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாத உயிர்...

அவள் அப்படியிருந்ததால் தான், பிரகாசத்திற்கு வீட்டுக் கவலைகளை மறக்க முடிந்தது.,

அவள் அப்படியிருந்ததால் தான்..அவரால்..தன் இரு சகோதரிகளுக்கும்.மகளுக்கும் திருமணம் செய்துவைக்க முடிந்தது.

தொகுதி எம்.எல்.ஏ., வரும்போது...அல்லக்கைகள் படை சூழ வருவதுபோல..சிவகாமியை கவனிக்கும் மருத்துவருடன்..உதவியாளர்கள் என்ற சிறுகூட்டம் உள்ளே நுழைந்தது.

சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்...நர்ஸிடம்..'டிரிப்ஸ் ஏற்றுவதை நிறுத்த வேண்டாம்...ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாராய் வைத்திருங்கள்'என்றார்.

பிரகாசம்..தயங்கியவாறு அவரைப் பார்த்து..'டாக்டர்..'என இழுத்தார்.

புருவங்களை உயர்த்தி 'என்ன' என்பது போல பார்த்தவர் 'இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.இருபத்து நாலு மணி நேரம் தாண்ட வேண்டும்'என இயந்திரத் தனமாய் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.பிரகாசம்..கடைசியாய் போன மருத்துவரைப் பார்த்து..பரிதாப சிரிப்பு சிரித்தார்.

உதவியாளருக்கு என்ன தோன்றியதோ..அவர் பிரகாசத்தின் தோள்களைத் தட்டி 'இனி எல்லாம் அந்த ஆண்டன் கையில்..'என மேலே கையைக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

ஆண்டவன்..என்ற வார்த்தையைக் கேட்டதும்..சிவகாமியின் முகத்தைப் பார்த்தார் பிரகாசம்.

'அவர் ஆயுள் நீடிக்க வேண்டும்..அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..என வரலட்சுமி நோன்பும்,கனுப்பொங்கலும்,வெள்ளிக்கிழமைகளில் விரதமும்..என சதா சர்வகாலமும்..தன் கணவனின் நலத்தையே எண்ணிக்கொண்டிருந்தாளே..சிவகாமி..அவள் நலத்தைப் பற்றி..தான் என்றாவது நினைத்ததுண்டா?இது நாள் அவளை ஒரு மனிஷியாகக் கூட நினைக்கவில்லையே..ஒரு இயந்தரம் போலத்தானே..நினைத்திருந்தார்..'

'ஆண்டவா..இவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே! அவள் நலனுக்காக இனி நான் விரதம் இருக்கிறேன்..நான் அவளுக்காக நோன்பு எடுக்கிறேன்..மனைவி நலத்துக்காக..கணவன் நோன்பு எடுக்கக்கூடாது என எங்கே எழுதி வைத்திருக்கிறது? அவளில்லாமல் ஒரு வினாடிக்கூட இருக்க முடியாது..என உணர்ந்துக் கொண்டேன்' என அரற்றத் தொடங்கினார்.

வாடிய ரோஜா..சற்று சிரிப்பது போல இருந்தது.

Friday, August 14, 2009

வாய் விட்டு சிரியுங்க..

தலைவர் இன்னிக்கு கூட்டத்தில வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போகிறாராம்
யார் தலைமை..யார் முன்னிலை
அவர் மச்சான் தலைமைல..மாமா முன்னிலைல மகன் வரவேற்புரை வழங்கியதும் தலைவர் பேசுவார்

2.எங்க தலைவர் எப்பவுமே..கைகளுக்கு கிளவுஸ்தான் போட்டிட்டு இருப்பார்.
ஏன்?
கை சுத்தம்ங்கறதை சிம்பாலிக்கா சொல்றாராம்

3.தலைவர்- தொண்டர்களே! உஷாராய் இருங்கள்.எதிர்க்கட்சித் தலைவர் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிறார்.பழைய உலகை அவர் அபகரிக்க திட்டமிடுகிறார்.

4.திடீரென ஒரு பேரணி வருதே..எந்தக் கட்சியுடையது..
பேரணி இல்லை..கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒன்னா வராங்க

5.நம்ம தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்தில..வேட்பு மனுவிற்கு பதிலா முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

6.நம்ம தலைவர் சிறுகக் கட்டி பெருக வாழ்பவர்
அப்படியா?
ஆமாம்..சின்ன வீடு ஒன்னை கட்டிக்கிட்டு பெரிய வீட்டோட வாழ்ந்து வருபவர்.

சிவாஜி ஒரு சகாப்தம்-22

1978ல் வந்த படங்கள்

அந்தமான் காதலி
தியாகம்
என்னைப் போல ஒருவன்
புண்ணிய பூமி
ஜெனரல் சக்ரவர்த்தி
பைலட் பிரேம்னாத்
ஜஸ்டிஸ் கோபினாத்

இவற்றில் அந்தமான் காதலி,ஜெனரல் சக்ரவர்த்தி ஆகியவை 100நாள் படங்கள்.

அந்தமான் காதலி..அந்தமானிலேயே எடுக்கப்பட்ட படம்.சுஜாதா நாயகி.

தியாகம் 25 வாரங்கள் ஓடிய படம்.இப்ப்டம் சென்னை கிரௌன் தியேட்டரில் தொடர்ந்து 210 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகள்.மதுரையில் 207 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகள்.இந்த சாதனைகளை யாரும் முறியடித்ததாக தெரியவில்லை.

மெழுகு பொம்மைகள் என்ற நாடகம் பைலட் பிரேம்நாத்.இப்படம்..இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவானது.இலங்கையில் ஷிஃப்ட் முறையில் 1080 நாட்கள் இப்படம் ஓடியது.யாழ்ப்பாணத்தில் ஒரு திரையரங்கில் 222 நாட்கள் தொடர்ந்து ஓடியது.கடல் கந்த வேறொரு நாட்டில் முதன் முதலாக திரைப்படங்கள் வர ஆரம்பித்தபின்..இன்று வரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை.

இந்த வருடம் வந்த மலையாளப் படமான தச்சோளி அம்பு சிவாஜி நடித்த 3ஆவது சினிமாஸ்கோப் படம்.முன்னதாக 1973ல் ராஜ ராஜ சோழனும்,1977ல் சந்திரகுப்த சாணக்யா தெலுங்கு படமும்(இதிலும் சிவாஜி நடித்திருந்தார்)மற்ற சினிமாஸ்கோப் படங்கள்.

ஜஸ்டிஸ் கோபிநாத்..சிவாஜியுடன்..ரஜினி இணைந்த படம்..ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1979 படங்கள் அடுத்த பதிவில்

Thursday, August 13, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (14-8-09)

1.தமிழக அரசின் இலவசத் திட்டங்களால் ரூபாய் 75000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது.மக்களின் வரிப்பணம் வீணாகிறது.தமிழகத்தில் உள்ளவர்களின் தலைக்கு 12000 ரூபாய் வீதம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது...இதை சொன்னவர் விஜய்காந்த்.

அத்துடன்..மரியாதை, எங்க ஆசான்..மூலம் அந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அடைந்த கடன் சுமை எவ்வளவு என தெரிவிப்பாரா?

2.உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு 70 சதவிகிதம் ஆகும்.உடலின் அனைத்து பாகங்களில் அது வியாபித்திருந்தாலும்..மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும்..ரத்தம்,உமிழ்நீர்,நிணநீர் போன்ற திரவங்களிலும் ஜீரணமுறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

3.நம் உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்கிறது.ரத்தக்குழாய்களில் செல்லும் போது அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டராம்.

ஓவர் ஸ்பீட் என யாராலும் சார்ஜ் பண்ணமுடியாது..

4.ஒரு மனிதன் தவறு செய்தபின் அதை எண்ணி வருந்துவதைவிட, அதை திருத்திக் கொள்வதைவிட..எளிய வழி ஒன்று உண்டு.தவறே செய்யாவிடின்...

விழுந்து எழுந்திருப்பதைவிட விழாமல் இருப்பது சிறந்தது.

5.வரும் அக்டோபர் மாதம் துவங்கும் 2010ஆம் நிதியாண்டிற்காக அமெரிக்க அரசு 65 ஆயிரம் H1B விசாக்களை அறிவித்ததாம்.இதுவரை 49000 விண்ணப்பங்கள்தான் வந்துள்ளதாம்.எப்போதும் வழக்கமாக அறிவிப்பு வந்ததும் விண்ணப்பங்கள் ஆயிரக் கணக்கில் வந்து குவியுமாம்.

6.பணவீக்க விகிதம் எப்படி கணக்கிடுகிறார்கள் என யாராவது சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்..இப்போது -1.74 சதவிகிதமாம். பருப்பு விலையும்,எண்ணெய் விலையும் இதில் சேருமா?

7.ஒரு ஜோக்..

சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் என் கதைக்கு டாப் 10ல் 10 ஆவது இடமாம்.
மொத்தம் எத்தனை கதைகள் வந்ததாம்..
பத்து கதைகள் வந்ததாம்.

Wednesday, August 12, 2009

கமல் பொன்விழாவும்..மறக்கமுடியா பாத்திரங்களும்..


தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

(இப்பதிவிடும்போது நினைவிற்கு வந்த படங்களே பட்டியலிடப்பட்டுள்ளன..பல முக்கிய படங்கள் விட்டுப் போயிருக்கலாம்)

Tuesday, August 11, 2009

உரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ஜ்யோவ்ராமும்....

சற்றே தாமதமான பதிவு...காரணம்..பதிவிடுமுன்..நான் படித்திராத பரிசுபெற்ற கதைகளை படிக்க நினைத்ததே.

ஒரு வெகுஜன பத்திரிகை சிறுகதை போட்டி வைத்தால் கூட இவ்வளவு கதைகள் வருமா என்பது சந்தேகமே.

250 கதைகள்...அடேங்கப்பா..பதிவர்கள் தங்கள் திறமையைக் காட்டிவிட்டார்கள்.ஆனால் பாவம் நடுவர்கள்.

இவ்வளவு கதையை படிப்பது என்பது சாமன்யமல்ல..அதைவிட தேர்ந்தெடுத்த கதைகளை ஷார்ட் லிஸ்ட் பண்ணிவிட்டு..அவற்றை மீண்டும் படிக்க வேண்டும்..இறுதி முடிவு எடுப்பதற்கு முன்.அதாவது..மீண்டும் கிட்டத்தட்ட 50 அல்லது அறுபது கதைகளை படித்திருக்க வேண்டும்.எவ்வளவு கடினமான செயல்.அதை வெற்றிகரமாக செய்து முடித்த சிவராமனையும்.. ஜ்யோவ்ராம் சுந்தரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பதிவர்கள் சார்பில்..யாராவது ஒரு மூத்த பதிவர்(வயதில் அல்ல..பதிவிடுவதில்) பரிசு வழங்கும் நாளில் இவர்களை கௌரவிக்க வேண்டும்.செய்வார்களா?

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..

பரிசு கிடைக்காத நண்பர்கள் அனைவருக்கும்..பரிசு பெற்ற கதைகளைவிட தங்கள் கதை சிறந்ததாகவே தெரியும்..ஆனால் .. மீண்டும் மீண்டும் நம் கதையைப் படித்தால்..உள்ள குறைகள் தெரியும்.
எனக்குக் கூட..பரிசு பெற்ற சில கதைகளைவிட..பரிசு பெறா சில கதைகள் பிடித்தன.ஆனால்..நடுவர்கள்..அவர்கள் பார்வையில் தேர்ந்தெடுத்ததை குறை சொல்லக் கூடாது.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.சமயத்தில் கிரிக்கெட் போட்டியில் நடுவர்கள் LBW தீர்ப்பை தவறாகக் கொடுத்தாலும்..batsman அவுட் தானே..அதை சச்சின் போல முகமலர்ச்சியுடன் ஏற்க வேண்டும்.இன்னொன்றையும்..இங்கு சற்றே..மனவலியுடன் கூற ஆசைப்படுகிறேன்.வெற்றி பெற்ற கதை எழுதிய ஒரு பதிவரின் பதிவில் சற்று ஆணவம் தெரிந்தது.தயவு செய்து ஆணவத்தை அனைவரும் விட்டு ஒழிப்போம்.

இனி..போட்டியை நடத்தியவர்களுக்கு சிறு யோசனை..

இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில் வெளியிடாமல்..நேராக..போட்டி நடத்துபவர்க்கே அனுப்பவேண்டும்.நடத்துபவர் எழுதியவரின் பெயரை வெளியிடாது..படைப்பினை நடுவர்களுக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெற்றவற்றின் படைப்பாளி யார் என பின் தெரிவிக்க வேண்டும்.அப்படி செய்தால்..சலசலப்பிருக்காது.

நடந்து முடிந்த போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு participation certificate கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Monday, August 10, 2009

கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்

ஒருவர் கவிஞராக இருப்பார்..அல்லது
எழுத்தாளராக இருப்பார்..அல்லது
திரைப்பட வசனகர்த்தாவாக இருப்பார்..அல்லது
இலக்கியவாதியாக இருப்பார்..அல்லது
திரைப்பட பாடலாசிரியராக இருப்பார்..அல்லது
அரசியல்வாதியாக இருப்பார்.....ஆனால்
தமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.
ஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.

இப்பதிவு...திரைப்பட பாடலாசிரியராக கலைஞர்.

பல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.

1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..

அருமைக் கன்னுக்குட்டி - என்
எருமைக் கன்னுக்குட்டி...
ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு
குற்றம் அறியான்டி
உதைப்பட்டு சாவான்டி....
என்று வரும் வரிகள்...

அடுத்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...

பொதுநலம்..என்றும் பொதுநலம்
புகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்
பொதுநலம்.....என்ற பாடல்
(பூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினில்
மறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.


மறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....

காகித ஓடம் கடலலை மேலே
போவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.

எல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...

பூமாலை..நீயே
புழுதி மண்மேலே-வீணே
வந்தேன்..தவழ்ந்தாய்....என்ற பாடல்.

தவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..
ராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.

எனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.
கடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா?

Saturday, August 8, 2009

மனிதரில் இத்தனை வகையா!?

மனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.

வேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது?'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(?!) என்றார்.

சில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.

சிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.

வேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே இருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.

இதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா?

மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Friday, August 7, 2009

சிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்

சத்யம் சினிமாஸ்..மற்றும் ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி இணைந்து தயாரிக்கும்..திரு திரு துறு துறு படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில் சிவாஜி கணேசன் 20ஆம் நூற்றாண்டு கலஞர்.அவரை 19ம் நூற்றாண்டிலேயே வைத்திருந்து துரோகம் செய்து விட்டோம் என்றார்.

வித்தியாசமாக இருக்கட்டுமே என விழாவில் ஒவ்வொருவரும் திரு திரு என்று விழித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆடியோ வெளியிட்டு அவர் மேலும் பேசுகையில்..

நான் வணக்கம் சொன்னதும் இங்கு பெரும் ஆரவாரம் எழுந்தது.அது பணிவுக்குக் கிடைத்த மரியாதை.பணிவிற்கும்,துணிவிற்கும்தான் இந்த மரியாதை கிடைக்கும்.

எனக்கு சிவாஜியுடன் ஒரு அனுபவம்..ஆனால் நான் திரு..திருன்னு விழிக்கவில்லை.தேவர்மகன் படபிடிப்பின் போது, ஒரு காட்சியில் சிவாஜி நடித்துவிட்டார்.ஆனால் எனக்கு முழு திருப்தி இல்லை.இயக்குநரிடம் சென்று..இன்னொரு தடவை அந்தக் காட்சியை எடுக்கலாம்.அவர் இன்னும் நல்லா பண்ணித் தருவார்..என்றேன்.அதை சிவாஜி கணேசன் கவனித்து விட்டார்.அவருக்கு ஏழெட்டுக் கண்கள்.எல்லாப் பக்கமும் கவனிப்பார்.

என்னை அழைத்தார்..'என்ன வேணும் முதலாளி?'என்றார் சிரித்தபடியே.

நான் உடனே..'படத்தில நீங்க பெரிய தேவர்.இது..கொஞ்சம் சின்ன தேவர் மாதிரி இருக்கிறது என்றேன்.அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டு..சிவாஜியின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்தது.அது தான்..படத்தில் நான் மழையில் வழுக்கும் போது சிவாஜி பதறும் காட்சி.

சிவாஜி எப்படி நடிப்பார்? என்பது ரசிகன் என்ற முறையில் எனக்குத் தெரியும்.வியட்நாம் வீடு, எங்க ஊர் ராஜா எல்லாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?

20ஆம் நூற்றாண்டு நடிப்பை சிவாஜியால் காட்டமுடியும்.அந்த 20 ஆம் நூற்றாண்டு நடிகரை 19ஆம் நூற்றாண்டில் வைத்திருந்தது நம் தவறு.அந்த துரோகம் எனக்கும் நடந்து விடக் கூடாது.டைரக்டர்கள் நடிப்பை சொல்லித் தர வேண்டும்.என் எதிர்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

இந்த படம் முழுக்க..முழுக்க டிஜிட்டலில் தயாராகி உள்ளது.மிகவும் மகிழ்ச்சி.இதுதான் எதிர்கால சினிமா. என்றும் கூறினார்.

(சிவாஜி 21ஆம் நூற்றாண்டு நடிகர்..20 ஆம் நூற்றாண்டிலேயே வைத்திருந்தது நம் தவறு..என கமல் சொல்லி இருக்க நினைத்திருப்பார் என எண்ணுகிறேன்.)

படத்தின் இயக்குநர் நந்தினி.

Thursday, August 6, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-8-09)


1.கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் உத்திரபிரதேசத்தில்..தனது சிலைகள் உட்பட தலைவர்களின் சிலையை வைக்க 550 கோடி ஒதுக்கியுள்ள மாநில முதல்வர் மாயாவதி..வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் 250 கோடி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

2.இந்தியாவின் திறமையான இளைஞர்கள்..அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு தேவை..அதனால் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கடும் குடியுரிமை சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும்...என அமெரிக்க கம்ப்யூட்டர் மன்னன் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

3.அழகிரி தன் பெயரின் ஸ்பெல்லிங்கை மாற்றிவிட்டாராம்.தமிழின் சிறப்பு 'ழ' என்ற எழுத்து.இதை வட இந்தியர்கள் உச்சரிக்க சிரமப்படுகிறார்களாம்.(நம்மவர்களிலும் இருப்பது வேறு விஷயம்). மேலும் அதை ஆங்கிலத்தில் எழுதும் போது zha என எழுதுவதை அவர்கள் ஜா..இல்லை ஸா என்கிறார்களாம்.அழகிரியை அஜாகிரி என்றும் அஸாகிரி என்றும் சொல்கிறார்களாம்.அதனால் அழகிரி..தன் பெயரின் ஸ்பெல்லிங்கை Alagiri என்று மாற்றிவிட்டாராம். கனிமொழி என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

4.ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்திற்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.இது குறித்து படம் வெளிவந்த பின் முடிவெடுக்கப் படும் என்றும் கூறினார்.
எத்தனை காலம்தான்......

5. உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொள்ளுவதால் உடல் எடை அதிகரிக்கும்..நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் நினைப்பது தவறாம்.மாறாக உடல் ஆரோக்யத்திற்கு அது துணைபுரிகிறதாம்.இதில் குறைந்த அளவே கலோரியே உள்ளதாம்.இயற்கையிலேயே கொழுப்பு குறைவான..உயிர்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளனவாம்.இதைச் சொல்வது இந்திய மருத்துவ சங்கம்.

6.இடைத்தேர்தலில் 3 தொகுதிகள் தன் பொறுப்பில் உள்ளதாகவும்..இந்த தொகுதியில் பொட்டியிடும் தி.மு.க., வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் பெற்றுத்தரும் மாவட்ட செயலருக்கு தனது சொந்த செலவில் முதல்வர் உருவம் பொறித்த டாலருடன் கூடிய 25 சவரன் தங்கசங்கிலி பரிசாக வழங்கப்போவதாக மத்திய அமைச்சரும்..கலைஞரும் மகனுமான அழகிரி தெரிவித்துள்ளார்.
தந்தை அண்ணாவிடம் கணையாழி பெற்றார்.மகன்...?

கொசுறு ஜோக்..

அவன் பணக்காரன்னு எப்படி சொல்ற
தினமும் அவன் வீட்ல பருப்பு சாம்பார்தானாம்.

சிவாஜி ஒரு சகாப்தம் - 21

சிவாஜி ஒரு சகாப்தம் - 21
1976ல் வந்த படங்கள்

உனக்காக நான்
கிரஹப்பிரவேசம்
சத்யம்
உத்தமன்
சித்ரா பௌர்ணமி
ரோஜாவின் ராஜா

இதில் கிரஹப்பிரவேசம்,சத்யம்,ஆகியவை நூறு நாட்கள் படங்கள்.உத்தமன் வெள்ளிவிழா படம்

சத்யம் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது.

உத்தமன் கொழும்பு,யாழ்ப்பாணம் நகரங்களில் வெள்ளிவிழா கொண்டாடியது.

உனக்காக நான் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் கே பாலாஜி தயாரிப்பில் வந்த படம்.சிவாஜி,ஜெமினி, லட்சுமி நடித்தனர்.சி வி ராஜேந்திரன் இயக்கம்
எம் எஸ் விஸ்வநாதன் இசை.இப்படம் 1973ல் வந்த நமக்கரம் என்ற ஹிந்திப் படத்தின் தழுவல்

கிரகப்பிரவேசம், சிவாஜி, கே ஆர் விஜயா நடிக்க யோகானந்த் இயக்கத்தில் வந்த படம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை

சத்யம், எஸ் ஏ கண்ணன் இயக்கம்.சிவாஜி, தேவிகா, கமல் ஹாசன் நடித்திருந்தனர்.கே வி மகாதேவன் இயக்கம்

உத்தமன், சிவாஜி, மஞ்சுளா நடிக்க ஜகபதி ஆர்ட்ஸ் சார்பில் வந்த படம்.இயக்கம் வி பி ராஜேந்திரபிரசாத்.ஆ கலே லக்ஜா என்ற ஹிந்தி படத்தழுவல்.மகாதேவன் இசை

சித்ரா பௌர்ணமி, சிவாஜி, ஜெயலலிதா நடிக்க பி மாதவன் இயக்கம்.விஸ்வநாதன் இசை

ரோஜாவின் ராஜா விஜயன் இயக்கத்தில் சிவாஜியுடன் வாணீஸ்ரீ நடித்த படம்.விஸ்வநாதன் இசை

மற்றபடி..சற்றே தேக்கநிலை இவ்வாண்டும்..அடுத்த ஆண்டும்.

1977 படங்கள்
--------------------

அவன் ஒரு சரித்திரம்
தீபம்
இளையதலைமுறை
நான் பிறந்த மண்
அண்ணன் ஒரு கோயில்

இதில்..தீபமும்,அண்ணன் ஒரு கோயிலும்  100 நாள் படங்கள்.தீபம் இலங்கையிலும் 100 நாட்கள்.

அவன் ஒரு சரித்திரம்..சிவாஜி,மஞ்சுளா நடிக்க கே எஸ் பிரகாஷ் ராவ் இயக்கம்.விஸ்வநாத்ன் இசை

தீபம்..விஜயன் இயக்கம்.கே பாலாஜி தயாரிப்பாளர்.சிவாஜி,சுஜாதா நடிக்க இளையராஜா இசையமைத்தார்.தீக்கனல் என்ற மலையாளப் படத்தின் தழுவல். (ஹிந்தியில் அமர்தீப் என்றும், தெலுங்கில் அமரதீபம் என்றும் இப்படம் வெளிவந்தது.முறையே ராஜேஷ் கன்னா, கிருஷ்ணம் ராஜு நடித்தனர்)

இளையதலைமுறை..சிவாஜி, வாணிஸ்ரீ நடிக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்.விஸ்வநாத்ன் இசை

நான் பிறந்த மண்..சிவாஜி,ஜெமினி,கே ஆர் விஜயா,கமல் ஹாசன் நடிக்க ஏ வின்சென்ட் இயக்கம்.விஸ்வநாதன் இசை

அண்ணன் ஒரு கோயில் ..சிவாஜி, சுஜாதா நடிக்க  கே விஜயன் இயக்கம்.விஸ்வநாத்ன் இசை.தேவரகன்னு என்னும் கன்னடப் படக்கதை



Wednesday, August 5, 2009

வாய் விட்டு சிரியுங்க..

என் பையன் ஆஃபீஸ்ல ஒரு வேலையை முடிச்சு தரச் சொன்னா..என் கிட்டேயே லஞ்சம் கேட்கிறான்..
அப்படியா?
கேட்டா..இது தொழில் ரீதியான சந்திப்புன்னு சொல்றான்.

2.எங்க ஊர் தாதா அரிவாளை எடுத்துட்டா கொலை விழாமல் இராது..
அது என்ன பெரிய விஷயம்..எங்க ஊர் டாக்டர் சாதாரண கத்தியிலேயே..ஆபரேஷன் தியேட்டர்ல அந்த கொலையை பண்ணிடுவார்.

3.தந்தை- (மனைவியிடம்) நம்ம பொண்னு ரகசியமா..உன் கிட்ட என்ன சொல்றா
மனைவி-அவ இனிஷியலை மாத்திக்கணுமாம்..உங்க பர்மிஷன் கேட்கறா

4. ஹிஸ்டரில ஃபெயில் மார்க் வாங்கி இருக்கியே
நான் பொறக்கறதுக்கு முன்னால நடந்ததெல்லாம் கேட்கறாங்க

5.அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்ற
18 வயசுக்குள்ள இருக்கற நோயாளிக்கு ஆபரேஷன் பண்ணினா அது மைனர் ஆபரேஷனாம்..அதுக்குமேல வயசுள்ளவங்களுக்கு பண்ணினா அது மேஜர் ஆபரேஷனாம்

6.எங்க தமிழ் ஆசிரியரைப் பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி இருக்கேன்
குரு நாவல்ன்னு சொல்லு

7.உங்க பையனுக்கு எஜுகேஷன் லோன் வாங்கினியே..எப்படி படிக்கிறான்..
கடனேன்னு படிக்கிறான்

Tuesday, August 4, 2009

ஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய்ச்சி..

வர வர..ஒவ்வொருவர் பதிவையும் படிக்க வரும் வாசகர்கள் குறைவதைக் கண்டு...இந்நிலையை தவிர்ப்பது எப்படி என அமெரிக்க பொருளாதார சீர்க்குலைவுக்கு மண்டையை பிய்த்துக்கொள்ளும் வல்லுநர்கள் போல பிரபல பதிவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு..ஆராய பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினர்.

இதில் கலந்துக் கொண்டவர்கள் கருத்துக்கள்..

இதற்கு முக்கியக் காரணம் பைத்தியக்காரன்தான் என அக்னி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம்..அடுத்த உரையாடல் போட்டிக்கான கரு என்னாவாயிருக்கும் எனத் தெரியாத நிலையில்..அனைவரும்.கதை,கட்டுரை என யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

அதை வன்மையாக மறுத்த நர்சிம்..லக்கி லுக்கே காரணம் என்றார். லக்கி ..அந்த பெயரைவிட்டு யுவகிருஷ்ணா என்று எழுதுவதால் என்றார் அவர்.ஆனால் அதற்கு லக்கி..'நர்சிம் தன் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கவில்லை..அதுதான் காரணம்' என்றார்.

வால்பையன்...'அனுஜன்யா கவிதையை எழுதுவதை நிறுத்த வேண்டும்..அவர் எழுதும் கவிதையில்..அவை தமிழ் எழுத்துக்கள் என்ற அளவிலே தான் புரிகிறது என்றார்.ஆதியும் ஏதோ இது சம்பந்தமாக புலம்புவது கேட்டது.

ஜ்யோவ்ராம்சுந்தரை பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே பிரபலமான பாடல்களை எழுதச் சொல்லலாம்..என பைத்தியக்காரன் கூறினார்.அதற்கு சுந்தரின் நண்பர் ராஜாராம் 'சரியான யோசனை' என்றார்.

அதிஷாவை..இன்ஃபினிடி கதைகளையும்..கார்க்கியின் புட்டிக்கதைகளையும் நிறைய எழுத வேண்டும்..என லக்கி சொல்ல ..கூட்டம் முழுதும் வழி மொழிந்தது.

இதற்கெனவே..சிங்கையிலிருந்து வந்திருந்த கோவி..எல்லா பதிவு தலைப்பும்..ஆபாசம்..பாலியல்..என்ற பெயரில் வர வேண்டும் என்றார்.அதற்கு பின்னூட்டம் என எண்ணிக் கொண்டு ரிபீட்டு என்றார் அதிஷா.

என்னைப்போல் அனைவரும் கவிதை எழுதினால் ,..தீர்வு கிடைக்கும் என்றார் அகநாழிகை.

நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலும்..கருமமே கண்ணாக..ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஜாக்கி சேகர்.

இடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு..அங்கு பரோட்டா சாப்பிடுவோம் என்றார்.எல்லோரும் வெண்பூவை தேட ஆரம்பித்தனர்.

எதிலும் பட்டுக் கொள்ளாமல்..வந்த பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார் டோண்டு ராகவன்.

இந்த பதிவை எழுதினாலாவது..பரிந்துரையில் வருமா..என என் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

நர்சிம் பேசியபோது மட்டும்..ஆமாம்..ஆமாம் ..என சொல்லிக் கொண்டிருந்த முரளிக்கண்னன்..மீதி நேரங்களில் மௌனமாயிருந்தார்.

கோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..

வழக்கம் போல எந்த முடிவும் எடுக்காமல்..கூட்டம்..டீக்கடைக்கு கிளம்பியது.

Monday, August 3, 2009

தம்பிதுரையால் அரசுக்கு இழப்பு..

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் அரசுக்கு லட்சக்கணக்கில் செலவு.

இளையாங்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி,மு.க., எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,விற்கு கட்சி மாறியதால்..தன் பதவியை ராஜினாமா செய்ய ..அந்த இடத்திற்கு இப்போது இடைத்தேர்தல்.

ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கண்ணப்பன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தி.மு.க.,விற்கு தாவியதால் தொண்டாமுத்தூர், கம்பம்..தொகுதிகளில் இடைத்தேர்தல்.

அ.தி.மு.க., எம்.எல்.எ., தம்பிதுரை..,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு..எம்.பி., ஆகி விட்டதால்..பர்கூர் எம்.எல்.ஏ., பதவியைத் துறந்தார்.அதனால் அங்கு தேர்தல்.

இவர்கள் எல்லாம்..ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருகிறார்கள்.

ஒரு பதவியில் இருப்பவர்கள்..மற்ற பதவிக்கு போட்டியிட்டு வென்றால்..முந்தைய பதவியை விட்டு விலகுவதைத் தவிர.. மீண்டும் அவ்விடத்திற்கு நடைபெறும் இடைத் தேர்தல் செலவை அவ்வேட்பாளரே ஏற்க வேண்டும்..என அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும்.

மேலும்..கட்சி மாறும்,இடையில் அமரராகிவிடும்..வேட்பாளர்கள் தொகுதியில்..முன் தேர்தலில் வென்ற கட்சியே..வேட்பாளரை நியமித்துக் கொள்ளலாம்..என்ற நிலை வரவேண்டும்..

இல்லையேல்..மக்களின் வரிப்பணம் தேவையற்ற இடைத்தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவாவதை தவிர்க்க முடியாது.

இப்போது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., வில் சேர்ந்து விட்டதால்..அடுத்து அத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது.

Sunday, August 2, 2009

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

இன்றைய..பல குழந்தைகள்..இளைஞர்கள் மத்தியில்..தீரா பிரச்னையையாக இருப்பது Obesity என்னும் உடல் பருமன் தான்.

உடல் பருமன் சர்க்கரை நோய்,இதய நோய்,ரத்த அழுத்தம்,பக்கவாதம் ஆகிய நோய்களுக்கு ஒரு காரணமாய் அமைந்துவிடுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி..இருபது சதவிகிதம் குழந்தைகளும்,60 சதவிகிதம் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக உடல் பருனாய் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம்..நமது உணவில் ஏற்பட்டுவரும் மாற்றம்தான் என தெரிய வந்துள்ளது.இட்லி,தோசை,பொங்கல்..ஆகியவை..இந்திய குடும்பங்களிலிருந்து..கொஞ்சம்..கொஞ்சமாய் மறைந்துஅவற்றின் இடத்தை..நூடில்ஸ்,பிஸ்ஸா,பர்கர் ஆகியவை பிடித்து வருகின்றன.

மேலும்..பணம்,புகழ்,ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு..பலர்..தங்கள் உடல்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஒழுங்கான உடற்பயிற்சி,நடை ஆகியவை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக நினைத்து செயல் பட வேண்டும்.

BMI எனப்படும் body mass index ஐ நினைவில் கொள்ளுங்கள்..அதாவது..நமது எடையை கிலோகிராமில் எடுத்துக் கொண்டு..அதை நம் உயரத்தால்..உயரத்தை மீட்டர் ஸ்கொயரால்(M2) வகுக்கு வேண்டும்.

25 க்குள் ஈவு இருந்தால்..சரியான எடை
25 முதல் 30 வயதுவரை எடை அதிகம்
30க்கு மேல் Obesity

ஆரோக்ய உணவை அருந்தி..சரியான உடற்பயிற்சி செய்து..நோயை நம்மை அண்டவிடாமல் தடுப்போம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ...

உறவுகளும்..நாமும்...

உறவுகள்...

இதில்தான் எத்தனை வகை..

தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..

வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.

நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..

நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்

உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்..இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..

கடைசியாக ஒரு ஜோக்..

நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!

Saturday, August 1, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 20

1974ல் வந்த சிவாஜி படங்கள்..

சிவகாமியின் செல்வன்
தாய்
வாணி-ராணி
தங்கபதக்கம்
என் மகன்
அன்பைத்தேடி

இதி ..தங்கபதக்கம்..வெள்ளிவிழா படம்.உதிரிபூக்கள் மகேந்திரன் கதைவசனம்.இது சிவாஜி நாடகமன்றத்தாரால் நாடகமாக சபா மேடைகளில் நடத்தப்பட்டு பின் திரைப்படமானது.முதன் முதலாக
1.75 கோடி வசூலான தமிழ்ப்படம் இது.மதுரையில் தொடர்ந்து 185 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக சாதனைப் படைத்தது.பெங்களூரு,இலங்கை ஆகிய இடங்களிலும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

சிவகாமியின் செல்வன்..மற்றுமொரு 100 நாட்கள்படம்..இனிமையான பாடல்கள் ...கொண்ட படம்.

என்மகன்..பாலாஜி தயாரிப்பு..இப்படப் பாடல்களும் பிரபலம்.இதுவும் 100 நாட்கள் ஓடிய படம்.

வாணி-ராணி..ஹிந்தியில்..ஹேமமாலினி..நடித்து வெளிவந்த சீதா அவுர் கீதா படக் கதை.நாயகனுக்கு அவ்வளவு வேலை இல்லை..ஆகவே படமும் ஓடவில்லை.50 நாட்கள் மட்டுமே ஓடியது.

அன்பைத் தேடி..நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால்...வெற்றியை எட்டவில்லை.

1975ல் படங்கள்

மனிதனும்..தெய்வமாகலாம்
அவன்தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
அன்பே ஆருயிரே
வைர நெஞ்சம்
டாக்டர் சிவா
பாட்டும் பரதமும்

இதில் அவன்தான் மனிதன்..மற்றும்..மன்னவன் வந்தானடி..ஆகிய இரு படங்கள் 100 நாட்கள் ஓடின.சிவாஜியின் 175ஆவது படம் அவன் தான் மனிதன்.23 ஆண்டுகளில் 175 படம்.

ஸ்ரீதர்..முதலில் ஹீரோ 72 என்ப் பெயரிட்டு, பின்..காலமெல்லாம் காத்திருப்பேன் என பெயர் மாறி..வைர நெஞ்சம் என்ற பெயரில் வந்த படம்.வெற்றி பெறவில்லை

பாட்டும் பரதமும்..சிவாஜியின் அருமையான நடிப்பு இருந்தும்..படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

அடுத்த பதிவில் 1976க்கான படங்களைப் பார்ப்போம்.