தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் அரசுக்கு லட்சக்கணக்கில் செலவு.
இளையாங்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி,மு.க., எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,விற்கு கட்சி மாறியதால்..தன் பதவியை ராஜினாமா செய்ய ..அந்த இடத்திற்கு இப்போது இடைத்தேர்தல்.
ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கண்ணப்பன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தி.மு.க.,விற்கு தாவியதால் தொண்டாமுத்தூர், கம்பம்..தொகுதிகளில் இடைத்தேர்தல்.
அ.தி.மு.க., எம்.எல்.எ., தம்பிதுரை..,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு..எம்.பி., ஆகி விட்டதால்..பர்கூர் எம்.எல்.ஏ., பதவியைத் துறந்தார்.அதனால் அங்கு தேர்தல்.
இவர்கள் எல்லாம்..ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருகிறார்கள்.
ஒரு பதவியில் இருப்பவர்கள்..மற்ற பதவிக்கு போட்டியிட்டு வென்றால்..முந்தைய பதவியை விட்டு விலகுவதைத் தவிர.. மீண்டும் அவ்விடத்திற்கு நடைபெறும் இடைத் தேர்தல் செலவை அவ்வேட்பாளரே ஏற்க வேண்டும்..என அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும்.
மேலும்..கட்சி மாறும்,இடையில் அமரராகிவிடும்..வேட்பாளர்கள் தொகுதியில்..முன் தேர்தலில் வென்ற கட்சியே..வேட்பாளரை நியமித்துக் கொள்ளலாம்..என்ற நிலை வரவேண்டும்..
இல்லையேல்..மக்களின் வரிப்பணம் தேவையற்ற இடைத்தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவாவதை தவிர்க்க முடியாது.
இப்போது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., வில் சேர்ந்து விட்டதால்..அடுத்து அத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது.
12 comments:
சரியான யோசனை. இந்த பதிவையே மனுவாக எடுத்துக்கொண்டு Supreme கோர்ட் வழக்கு நடத்த வேண்டும்
//இவர்கள் எல்லாம்..ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருகிறார்கள்.//
ம்ம்ம் உண்மை
இடைத்தேர்தலை தடைசெய்யவேண்டும்.
//"தம்பிதுரையால் அரசுக்கு இழப்பு.."//
திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,
அருமையான பதிவு...
தலைப்பில் தம்பிதுரையை மட்டும் சாடுவதேன்...?? நீங்கள் திமுக அபிமானியா...?
http://thayagapookkal.blogspot.com
அரசியல்ல இதல்லாம் சகஜமுங்க
இவங்க பண்ணுற கூத்துல நாமதான் .....
Politics is also a kind of entertainment. without elections lacs will be affected. This the time the politicians distribute money.
//Ravi said...
சரியான யோசனை. இந்த பதிவையே மனுவாக எடுத்துக்கொண்டு Supreme கோர்ட் வழக்கு நடத்த வேண்டும்//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ரவி
//ஆ.ஞானசேகரன் said...
//இவர்கள் எல்லாம்..ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருகிறார்கள்.//
ம்ம்ம் உண்மை//
வருகைக்கு நன்றி ஞானசேகரன்
//குடுகுடுப்பை said...
இடைத்தேர்தலை தடைசெய்யவேண்டும்.//
உண்மை
தமிழ் மதியன் said...
//"தம்பிதுரையால் அரசுக்கு இழப்பு.."//
//திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,
அருமையான பதிவு...
தலைப்பில் தம்பிதுரையை மட்டும் சாடுவதேன்...?? நீங்கள் திமுக அபிமானியா...?
http://thayagapookkal.blogspot.com//
தம்பிதுரை மட்டுமே..தன் சட்டசபை உறுப்பினர் பதவி இருந்தும்..நாடாளுமன்றத் தேர்தலில் நின்று எம்.பி., ஆனவர்.
பதவி இருக்கும் போதே..செலவுக்கு வித்திட்டவர் என்பதால்..அவர் பெயரில் பதிவு.அவ்வளவுதான்
வருகைக்கு நன்றி தமிழ் மதியன்
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அரசியல்ல இதல்லாம் சகஜமுங்க
இவங்க பண்ணுற கூத்துல நாமதான்//
உண்மை Starjan
// krish said...
Politics is also a kind of entertainment. without elections lacs will be affected. This the time the politicians distribute money.//
வருகைக்கு நன்றி krish
Post a Comment