சற்றே தாமதமான பதிவு...காரணம்..பதிவிடுமுன்..நான் படித்திராத பரிசுபெற்ற கதைகளை படிக்க நினைத்ததே.
ஒரு வெகுஜன பத்திரிகை சிறுகதை போட்டி வைத்தால் கூட இவ்வளவு கதைகள் வருமா என்பது சந்தேகமே.
250 கதைகள்...அடேங்கப்பா..பதிவர்கள் தங்கள் திறமையைக் காட்டிவிட்டார்கள்.ஆனால் பாவம் நடுவர்கள்.
இவ்வளவு கதையை படிப்பது என்பது சாமன்யமல்ல..அதைவிட தேர்ந்தெடுத்த கதைகளை ஷார்ட் லிஸ்ட் பண்ணிவிட்டு..அவற்றை மீண்டும் படிக்க வேண்டும்..இறுதி முடிவு எடுப்பதற்கு முன்.அதாவது..மீண்டும் கிட்டத்தட்ட 50 அல்லது அறுபது கதைகளை படித்திருக்க வேண்டும்.எவ்வளவு கடினமான செயல்.அதை வெற்றிகரமாக செய்து முடித்த சிவராமனையும்.. ஜ்யோவ்ராம் சுந்தரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பதிவர்கள் சார்பில்..யாராவது ஒரு மூத்த பதிவர்(வயதில் அல்ல..பதிவிடுவதில்) பரிசு வழங்கும் நாளில் இவர்களை கௌரவிக்க வேண்டும்.செய்வார்களா?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..
பரிசு கிடைக்காத நண்பர்கள் அனைவருக்கும்..பரிசு பெற்ற கதைகளைவிட தங்கள் கதை சிறந்ததாகவே தெரியும்..ஆனால் .. மீண்டும் மீண்டும் நம் கதையைப் படித்தால்..உள்ள குறைகள் தெரியும்.
எனக்குக் கூட..பரிசு பெற்ற சில கதைகளைவிட..பரிசு பெறா சில கதைகள் பிடித்தன.ஆனால்..நடுவர்கள்..அவர்கள் பார்வையில் தேர்ந்தெடுத்ததை குறை சொல்லக் கூடாது.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.சமயத்தில் கிரிக்கெட் போட்டியில் நடுவர்கள் LBW தீர்ப்பை தவறாகக் கொடுத்தாலும்..batsman அவுட் தானே..அதை சச்சின் போல முகமலர்ச்சியுடன் ஏற்க வேண்டும்.இன்னொன்றையும்..இங்கு சற்றே..மனவலியுடன் கூற ஆசைப்படுகிறேன்.வெற்றி பெற்ற கதை எழுதிய ஒரு பதிவரின் பதிவில் சற்று ஆணவம் தெரிந்தது.தயவு செய்து ஆணவத்தை அனைவரும் விட்டு ஒழிப்போம்.
இனி..போட்டியை நடத்தியவர்களுக்கு சிறு யோசனை..
இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில் வெளியிடாமல்..நேராக..போட்டி நடத்துபவர்க்கே அனுப்பவேண்டும்.நடத்துபவர் எழுதியவரின் பெயரை வெளியிடாது..படைப்பினை நடுவர்களுக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெற்றவற்றின் படைப்பாளி யார் என பின் தெரிவிக்க வேண்டும்.அப்படி செய்தால்..சலசலப்பிருக்காது.
நடந்து முடிந்த போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு participation certificate கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
9 comments:
இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில் வெளியிடாமல்..நேராக..போட்டி நடத்துபவர்க்கே அனுப்பவேண்டும்.நடத்துபவர் எழுதியவரின் பெயரை வெளியிடாது..படைப்பினை நடுவர்களுக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெற்றவற்றின் படைப்பாளி யார் என பின் தெரிவிக்க வேண்டும்.அப்படி செய்தால்..சலசலப்பிருக்காது.
என் கருத்தும் இதுவே.[சலசலப்பு இருக்காது என்பதால் அல்ல ],போட்டிநடத்துவதற்கான விதி முறைகளில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து.
நானும் போட்டியில் கலந்து கொண்டேன் .என் எழுத்து இன்னும் கூராக வேண்டும்,நடை இன்னும் சீராக வேண்டும் என்பதை உணர்ந்து அடுத்த போட்டிக்கு நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன்
உரையாடல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
ஹிஹி நானும் கூட போட்டில இருந்தேன்.
நல்லதொரு யோசனை. இனிமேல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பட்சத்தில் திறம்பட செயலாற்றுவேன் என உறுதி கொள்ளச் செய்த போட்டி இது. ஒரு படைப்பை போட்டிக்கு அனுப்புவது என நினைத்துவிட்டால் அதற்கான உழைப்பின்றி இனி அனுப்ப மாட்டேன். தேர்ந்தெடுக்கப்படுவது, தேர்ந்தெடுக்கப்படாதது இரண்டாம் பட்சம், சீரும் சிறப்புடன் அனுப்புவதுதானே நமது கடமை.
உங்கள் கதையும், எனது கதையும் கொண்ட கரு ஒன்றாக இருந்தது இருப்பினும், உங்கள் கதை மிகவும் வித்தியாசமாக இருந்ததை எண்ணி அன்றே வியந்தேன்.
மிக்க நன்றி ஐயா.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமா
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வெ.இராதாகிருஷ்ணன்
சிறுகதை போட்டி முடிவுகளைப்பற்றியும் இனி போட்டிகள் நடத்தப்பட்டால்
//இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில் வெளியிடாமல்..நேராக..போட்டி நடத்துபவர்க்கே அனுப்பவேண்டும்.நடத்துபவர் எழுதியவரின் பெயரை வெளியிடாது..படைப்பினை நடுவர்களுக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெற்றவற்றின் படைப்பாளி யார் என பின் தெரிவிக்க வேண்டும்.அப்படி செய்தால் சலசலப்பிருக்காது.//
உங்களது மேற்கூறிய இந்த கருத்தையும் நானும் வரவேற்கிறேன்.
//முகமலர்ச்சியுடன் ஏற்க வேண்டும்.இன்னொன்றையும்..இங்கு சற்றே..மனவலியுடன் கூற ஆசைப்படுகிறேன்.வெற்றி பெற்ற கதை எழுதிய ஒரு பதிவரின் பதிவில் சற்று ஆணவம் தெரிந்தது.தயவு செய்து ஆணவத்தை அனைவரும் விட்டு ஒழிப்போம்.//
இந்த வரிகளிலும் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ரத்னாபீட்டர்ஸ்
Post a Comment