Friday, August 28, 2009

காங்கிரஸ் கட்சியும்..நடிகரும்...

காங்கிரஸ் கட்சியில் நடிகர்கள் சேர்ந்தால் என்னவாகும்..என்று யோசித்தேன்..முன்பெல்லாம் கூட தமிழக காங்கிரஸில் இந்த அளவு தலைவர்கள் பிணக்கு இருந்ததில்லை.ஆனால் இன்று?

தங்கபாலு கோஷ்டி,வாசன் கோஷ்டி,இளங்கோவன் கோஷ்டி,சிதம்பரம் கோஷ்டி..இப்படி சொல்லிக்கோண்டே போகலாம். இவர்களைத்தாண்டி சேரும் நடிகர்கள் பிரகாசிக்க முடியுமா?

உடன் எனக்கு நடிகர் திலகமே ஞாபகத்தில் வந்தார்..

ஆரம்பத்தில் தி.மு.க.,வில் இருந்தவர்..1955ல் கட்சி பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக திருப்பதி போய் வந்ததால்..கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.பின் 1961 முதல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராகவும்..மக்கள் தலைவர் காமராஜரின் பிரதம சீடனாகவும் இருந்தார்.காமராஜருக்குப் பின் இந்திராகாந்தியின் ஆதரவாளர் ஆனார்.1982ல் இந்திரா இவரை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கினார்.பின் 1987ல்.எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவக்கினார்.ஜானகி அணியுடன்..கூட்டு சேர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்க்கொண்டார்.அவராலேயே திருவையாறு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை.பின் 1989ல் தன் கட்சியை ஜனதாதள் கட்சியுடன் இணைத்து..ஜனதாதளத்தின் தமிழக தலைவரானார்.

மாபெரும் நடிகன்..சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்ப பின்னணி கொண்டவராலேயே அரசியல் சமாளிக்கமுடியவில்லை.நடிப்புலகில் கொடிகட்டி பறந்தவர்..அரசியல் வாழ்வில் படு தோல்வி அடைந்தார்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..கோஷ்டி தகராறில் சிக்கித் தவிக்கும் கட்சியில்..ஒரு நடிகன் சேர்ந்தால் அவனால் அதிக பட்சம் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை அனுபவிக்க மட்டுமே முடியும்.

இதுதான் யதார்த்தம்.

இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை.

13 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிவாஜியின் மல‌ரும் நினைவுகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

i am first & second

Unknown said...

//இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை.// நிஜமாவா :-)

உடன்பிறப்பு said...

இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை

/\*/\

இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்பிடுவமாக்கும். ஆசை யாரை விட்டது அவரும் இருந்துவிட்டு போகட்டுமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல் வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Sri said...
//இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை.// நிஜமாவா :-)//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// உடன்பிறப்பு said...
இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை

/\*/\

இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்பிடுவமாக்கும். ஆசை யாரை விட்டது அவரும் இருந்துவிட்டு போகட்டுமே//

போகட்டும்

மங்களூர் சிவா said...

வில்லு , குருவி விஜய் ரஜிகர் மன்ற சார்பில் கண்டனங்கள்

:))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
வில்லு , குருவி விஜய் ரஜிகர் மன்ற சார்பில் கண்டனங்கள்

:))))))))))))////

:-)))

அத்திரி said...

//இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை//

நம்பிட்டோம் ஐயா................

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
//இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை//

நம்பிட்டோம் ஐயா................//

:-)))

Thamira said...

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
:-))//


வருகைக்கு நன்றி ஆதி