1)டென்ஷன் பாதிப்பில் இருக்கையில் நமக்கு நிம்மதி போகும்..தூக்கம் வராது..அத்தகைய சமயங்களில் அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும்.உடனடியாக அது ரத்தத்துடன் கலந்து குளூகோசாக மூளைக்குச் செல்கிறது.அது கிடைத்ததும் மூளை வலுவாக செயல்படுகிறது.இதை அமெரிக்காவில் ஒகையோ மாநில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2)உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்திலும்..ஆசிய அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.2010 ஆண்டு இதுவரை இந்தியாவிற்கு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அனுப்பிய தொகை 55 பில்லையன் டாலர்கள் என உலக வங்கி தெரிவிக்கிறது.நன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களே
3) என்னதான் கிரிக்கெட் அளவு மற்ற விளையாட்டுகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நாம் பேசினாலும்..கிரிக்கெட்டில் இந்தியா விளையாடி ஜெயிக்கையில் ஏற்படும் மகிழ்ச்சி தனிதான்..நடந்து முடிந்த நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி அனைத்திலும் வென்ற இந்தியக் குழுவிற்கு வாழ்த்துகள்.குறிப்பாக இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவிற்கு நம் தனி பாராட்டு
4)நம் உடலின் போர்வையான தோலில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றனவாம்.பாக்டீரியாவிலும் நல்ல பாக்டீரியா..கெட்ட பாக்டீரியா என உண்டாம்.
5)மை நேம் ஈஸ் கான் படம் சமீபத்தில் பார்த்தேன்..சாருக்கான் அருமையாய் நடித்துள்ளார்.இப்படத்தில் அவர் தாயார் நாட்டில் இரண்டே ஜாதி..நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சொன்னதாக அடிக்கடி குறிப்பிடுவார்.
ஔவையும்..சாதிகள் இரண்டு என்றார் ..இட்டார்(தருமம் செய்பவர்கள்) இடாதார் (இடாதவர்கள்) என்றார்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியும்..ஜாதிகள் இரண்டு தான் என்றார் அவர் சொன்னது..படித்தவர், படிக்காதவர் என்பதை.
ஆனால்..இன்று ஜாதிகள் பற்றி கேட்டால் ஒரு இந்தியன் சொல்வான்..சாதிகள் இரண்டுதான்..ஊழல் புரிபவன், ஊழல் செய்யத் தெரியாதவன் என.,
6)நாம் தும்மும் போது வெளிவரும் காற்று மணிக்கு அறுபது மைல் வேகத்தில் பரவுகிறதாம்.
நம் உடலில் வெகு வேகமாக செயல்படும் தசை கண் இமையாம்..ஒருதரம் கண் இமைக்க 1/100 விநாடிதான் ஆகிறதாம்
ஒரு மனிதனின் உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் கைகளிலும், பாததிலுமே உள்ளனவாம்.
7)கொசுறு ஒரு ஜோக்
ஊழலில் பெற்ற பணம் சரியாக இருக்கிறதா என்பதை எப்படி எண்ணுவார்கள்
திருப்பதி கோவிலில் இருந்து உண்டியல் எண்ணுபவர்கள் வருவார்களோ
38 comments:
மக்களும்தான் இப்போ லஞ்சம் வாங்கறாங்களே.. அப்புறம் என்ன செய்யத் தெரியாதவன்? காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறதை லஞ்சம்னுதானே சொல்லனும்
ஆனால்..இன்று ஜாதிகள் பற்றி கேட்டால் ஒரு இந்தியன் சொல்வான்..சாதிகள் இரண்டுதான்..ஊழல் புரிபவன், ஊழல் செய்யத் தெரியாதவன் என.,
....ஹா,ஹா,ஹா,ஹா,.... செம கமென்ட்!
ஊழலில் பெற்ற பணம் சரியாக இருக்கிறதா என்பதை எப்படி எண்ணுவார்கள்
திருப்பதி கோவிலில் இருந்து உண்டியல் எண்ணுபவர்கள் வருவார்களோ
.....கணக்கில் வராத பணம் மட்டும் இல்லை, கணக்கு வைத்து கொள்ள முடியாத அளவுக்கு உள்ள பணமா? அவ்வ்வ்...
சர்க்கரை இனிமே ரெடியா வச்சுக்க வேண்டியது தான் :)- புத்துனர்ச்சியோட சண்டை போடலாம்.
தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல் ருசியாகவும்,சூடாவும் இருந்துச்சு ..
கொஞ்ச நாளா நமக்குத் தெரிஞ்சது ரெண்டு சாதிதானுங்க
ஒன்னு பதிவு எழுதுறவங்க
இன்னொன்னு பதிவு எழுதாம ஒழுங்கா வேலவெட்டி பாக்குறவங்க! :)
சுண்டலோ சுண்டல். (பொங்கலுக்கு ப்ராக்டிசு:)))
சுட சுட செய்திகள்
பாக்டீரியாவிலும் நல்ல பாக்டீரியா..கெட்ட பாக்டீரியா என உண்டாம்."
பாக்டீரியா முதல் , பதிவர்கள் வரை , எல்லாவற்றுக்கும் பொதுவான தன்மை இது
நல்ல பகிர்வு சார்.
"ஊழல் புரிபவன், ஊழல் செய்யத் தெரியாதவன் என., " இது, ஊழல் புரிபவன், ஊழல் புரிய வாய்ப்பில்லாதவன்" என்று இருந்தால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
அந்த கிரிக்கட் மேட்டர் உண்மை சார் ......
கொஞ்ச நாளா நமக்குத் தெரிஞ்சது ரெண்டு சாதிதானுங்க
ஒன்னு பதிவு எழுதுறவங்க
இன்னொன்னு பதிவு எழுதாம ஒழுங்கா வேலவெட்டி பாக்குறவங்க! :)
December 10, 2010 8:08:00 A
அப்படிப் போடு’ங்க ஈரோடு கதிர்
டென்ஷன் பாதிப்பில் இருக்கையில் நமக்கு நிம்மதி போகும்..தூக்கம் வராது..அத்தகைய சமயங்களில் அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும்.உடனடியாக அது ரத்தத்துடன் கலந்து குளூகோசாக மூளைக்குச் செல்கிறது.அது கிடைத்ததும் மூளை வலுவாக செயல்படுகிறது.
ரேஷன்ல கொடுக்கும் சர்க்கரை இதுக்கே சரியாப் போகுது மத்தபடிக்கு???
//குறிப்பாக இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவிற்கு நம் தனி பாராட்டு
//
டோனி வயதானவர் பட்டியலுக்கு போய்விடுவாரோ?
நல்ல தொகுப்பு!
//ILA(@)இளா said...
மக்களும்தான் இப்போ லஞ்சம் வாங்கறாங்களே.. அப்புறம் என்ன செய்யத் தெரியாதவன்? காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறதை லஞ்சம்னுதானே சொல்லனும்//
வருகைக்கு நன்றி இளா..
காசு வாங்காம ஓட்டு போடறவங்களும் இருக்காங்க
வருகைக்கு நன்றி Chitra
//மணிகண்டன் said...
சர்க்கரை இனிமே ரெடியா வச்சுக்க வேண்டியது தான் :)- புத்துனர்ச்சியோட சண்டை போடலாம்.//
சர்ர்கரை இல்லாமலேயே சண்பை போடுபவராச்சே மணி..நீங்க..
சும்மா ஜாலியான பதில்..உடனே சண்டைக்கு வந்துடாதீங்க
வருகைக்கு நன்றி மணிகண்டன்.
//Kalidoss said...
தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல் ருசியாகவும்,சூடாவும் இருந்துச்சு//
நன்றி Kalidoss
//ஈரோடு கதிர் said...
கொஞ்ச நாளா நமக்குத் தெரிஞ்சது ரெண்டு சாதிதானுங்க
ஒன்னு பதிவு எழுதுறவங்க
இன்னொன்னு பதிவு எழுதாம ஒழுங்கா வேலவெட்டி பாக்குறவங்க! :)//
ஒழுங்கா ஈரோடு சங்கமத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்க கதிர்..
அதைவிட்டுட்டு...சாதி பற்றி பேசிகிட்டுட்டு..
இது எப்படி இருக்கு:)))
வருகைக்கு நன்றி கதிர்
//வானம்பாடிகள் said...
சுண்டலோ சுண்டல். (பொங்கலுக்கு ப்ராக்டிசு:)))//
பொங்கலுக்கா...தமிழ் புத்தாண்டுக்கா..!!!
வருகைக்கு நன்றி பாலா
//மோகன் குமார் said...
சுட சுட செய்திகள்//
வாங்க மோகன் குமார்..
நன்றி..
ஆமா..ரொம்ப நாளா எங்கே கடைப்பக்கம் ஆளைக் காணோம்
//பார்வையாளன் said...
பாக்டீரியாவிலும் நல்ல பாக்டீரியா..கெட்ட பாக்டீரியா என உண்டாம்."
பாக்டீரியா முதல் , பதிவர்கள் வரை , எல்லாவற்றுக்கும் பொதுவான தன்மை இது//
ஆமாங்க..ஒரு பார்வையாளனா இருந்தாக் கூட நல்லது..கெட்டதுன்னு பார்க்கமுடியுங்க ;))
வருகைக்கு நன்றி பார்வையாளன்
//சிநேகிதன் அக்பர் said...
நல்ல பகிர்வு சார்//
நன்றி அக்பர்
//azhagan said...
"ஊழல் புரிபவன், ஊழல் செய்யத் தெரியாதவன் என., " இது, ஊழல் புரிபவன், ஊழல் புரிய வாய்ப்பில்லாதவன்" என்று இருந்தால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.//
இல்லீங்க..இன்னும் கூட சில அசடுகள் இருக்கு..
ஊழல்,லஞ்சம் வாங்க சந்தர்ப்பம் இருந்தும்..தருமத்திற்கு பயப்படும் ரகம்..
ஆனா..நீங்க சொல்றதும் ஒருவேளை உண்மையாய் இருக்கும்.
வருகைக்கு நன்றி அழகன்
//மங்குனி அமைச்சர் said...
அந்த கிரிக்கட் மேட்டர் உண்மை சார் ......//
வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்
//goma said...
ரேஷன்ல கொடுக்கும் சர்க்கரை இதுக்கே சரியாப் போகுது மத்தபடிக்கு???//
அட..நீங்க வேற..ரேஷன்ல பில்ல போடறது ஒரு அளவுக்கு..கொடுக்கறது ஒரு அளவுக்கு.ஒரு ஆளுக்கே 15 நாள் காஃபிக்குத்தான் வரும்..
வெளிமார்க்கெட் தான் மத்த நாளுக்கு..
வருகைக்கு நன்றி கோமா
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
டோனி வயதானவர் பட்டியலுக்கு போய்விடுவாரோ?//
நான் இந்த விளையாட்டுக்கே வரலை..
நான் இதுக்கு பதில் சொன்னா..உடனே ரயினா பத்தி கேப்பீங்க..
ஆமாம்...ரொம்ப ணோயாளிங்களைப் பார்க்கறீங்களோ..
இப்பவெல்லாம் கடைப் பக்கமே பார்க்க முடியலை
//சிவா என்கிற சிவராம்குமார் said...
நல்ல தொகுப்பு!//
நன்றி சிவா
sir :)- no fighting ! I am a good boy !
//மணிகண்டன் said...
sir :)- no fighting ! I am a good boy !//
:)))
தேங்காய் மாங்காய் சுண்டலில் அனைத்து சங்கதியும் அருமை
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 19-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
//Jaleela Kamal said...
தேங்காய் மாங்காய் சுண்டலில் அனைத்து சங்கதியும் அருமை//
நன்றி Jaleela kamal
//ரஹீம் கஸாலி said...
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 19-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்//
நன்றி ரஹீம் கஸாலி
நல்ல தகவல் தொகுப்புக்கள்.
//மாதேவி said...
நல்ல தகவல் தொகுப்புக்கள்.//
நன்றி மாதேவி
Post a Comment