Tuesday, December 28, 2010

திரைப்பட இயக்குனர்கள்-11 மகேந்திரன்

தமிழ்த் திரையுலகில் பல இயக்குனர்கள் இருந்தனர்,இருக்கின்றனர், இருப்பர்..

அவர்களில் அதி திறமைவாய்ந்தவர்கள் என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல்வரிசையில் இருப்பவர்களில் ஒருவராக இருப்பார் மகேந்திரன்.

அலெக்ஸாண்டர் என்ற தன் பெயரை..தன்னுடன் கல்லூரியில் படித்த மகேந்திரன் என்னும் தடகள வீரர் ஞாபகமாக தன் பெயரையும் மகேந்திரன் என மாற்றிக்கொண்டார்.ஆரம்பகாலத்தில் ஒரு பத்திரிகையில் வேலை செய்தார்.பின் இவரின் நாடகம் தங்கப்பதக்கம் ..சிவாஜி நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்டு..பி.மாதவன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி படமாய் வந்தது.

'முள்ளும் மலரும்' என்ற உமாசந்திரன் அவர்கள் எழுதிய நாவல் மகேந்திரனை திரைப்பட இயக்குனராக அறிமுகப் படுத்தியது.ரஜினிக்கும் மாறுபட்ட நடிப்பு.படம் மாபெரும் வெற்றி அடைந்தது.1978ல் இப்படம் வந்தது.

பின்னர் 1979ல் புதுமைப்பித்தன் எழுதிய சித்தி என்னும் கதையே இவர் இயக்கத்தில்..'உதிரிப்பூக்களாய்' பூத்தது.இதுவரை இதற்கு ஈடாக ஒரு படம் தமிழில் வரவில்லை எனலாம்.இயக்குனர் மணிரத்தினம் ஒரு பேட்டியில்..இப்படத்திற்கு இணையாய் ஒரு படம் இயக்கினால்தான் எனக்கு சந்தோஷம் உண்டாகும் என இப்படத்தை சிறப்பித்துள்ளார்.

பின்னர் ரஜினி நடித்த ஜானி இவரின் மற்றொரு வெற்றி படம்.

இவர் இயக்கிய மற்ற படங்கள்



பூட்டாத பூட்டுகள் (பொன்னீலன் கதை)

நண்டு (சிவசங்கரி கதை)



தமிழ் நாவலையோ,சிறுகதையையோ திரைப்படமாய் எடுத்த இயக்குநர் இவர் .



நெஞ்சத்தைக் கிள்ளாதே

மெட்டி

அழகிய கண்ணே

கை கொடுக்கும் கை

கண்ணுக்கு மை எழுது

ஊர் பஞ்சாயத்து

சாசனம்

ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் திறமையை திரையுலகு சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை எனலாம்.

சமீபத்தில்..கூட இயக்குனர் சங்க விழா ஒன்றில் இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ரஜினியிடம் 'உங்களுக்கு பிடித்த இயக்குநர்' என்ற கேள்விக்கு..ரஜினி உடனடியாக 'மஹேந்திரன்' என்றதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவர் இயக்கிய படத்திலிருந்து..


21 comments:

இராகவன் நைஜிரியா said...

உதிரிப்பூக்கள் நெஞ்சத்தை அள்ளிச் செல்லும் படம்.

லொக்கேஷன், கதை கையாண்ட விதம் என அனைத்துமே நிறைந்த அற்புத படைப்பு.

டிஸ்கி : அலுவலக வேலை மிக அதிகமாகி விட்டதால் எங்குமே படிக்க இயலவில்லை. படிக்காமல் பின்னூட்டம் போடுவதில்லை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

என் கைபேசியின் அழைப்புஒலி இந்த பாடல் தான் .

சிநேகிதன் அக்பர் said...

அனுபவப்பூர்வமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

nagoreismail said...

புதுமைபித்தனின் நாவல் சித்தி அல்ல சிற்றன்னை என்று படித்ததாக நினைவு..... கமல்ஹாசன் ஒரு பேட்டியில் முள்ளும் மலரும் படத்திற்கு தான் ஒரு production manager போல் வேலை பார்த்ததாக சொன்னார்.... உதிரிப்பூக்கள் சினிமா பற்றிய விமர்சனம் ஒன்று இணையத்தில் படித்ததுண்டு. இறுதி கட்ட (காட்சிக்கு) காட்சி விமர்சனம் மிகவும் அருமையாக எழுதியிருக்கும்... ஒவ்வொரு ஷாட் பற்றியும் அந்த விமர்சனத்தில் இருக்கும்... இது போல் உள்ள விமர்சனத்தை காண கிடைத்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்... my email id - dulfiqar@gmail.com, Thanks

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

suneel krishnan said...

கை கொடுக்கும் கை -இதுவும் ஒரு நல்ல திரைப்படம் ,இவர் ஒரு காலத்தை வென்ற இயக்குனர் என்று அடித்து சொல்லலாம்

பூங்குழலி said...

எனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும் காட்சி கூட வன்முறை தெரியாமல் மென்மையாக இருக்கும் .முள்ளும் மலரில் ஏதோ ஒரு பாடலுக்கு (செந்தாழம் பூவில் ?)ப்ரொடியூசர் பணம் தர மறுத்ததால் கமல் உதவியதாக மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார் .

ஜி.ராஜ்மோகன் said...

தமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு!

ஆதவா said...

இயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுதியிருக்கலாம்.. மிக அருமையான இயக்குனர்.. ஆனால் ஓரிரண்டு படங்கள் தவிர வேறெதுவும் நான் பார்த்த்தில்லை. முதன்முதலில் முள்ளும் மலரும் பார்க்கும் போது யாருய்யா இந்த டைரக்டர் என்று தேடவைத்தவர்...

இன்றுவரையிலும் உதிரிப்பூக்கள் தமிழ்சினிமாவில் உலகசினிமா என்பதை மறுக்க முடியாது, அதை மிஞ்ச இன்னும் ஒரு படம் கூட வரவில்லை என்பது வெட்கக்கேடு!!

Ashok D said...

மகேந்திரன் சிறந்த இயக்குனரே :)

ஈரோடு கதிர் said...

மகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத்து வருகிறார் என நினைக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி nagoreismail

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
குட் போஸ்ட்//

நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி dr suneel krishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பூங்குழலி said...
எனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும் காட்சி கூட வன்முறை தெரியாமல் மென்மையாக இருக்கும் .முள்ளும் மலரில் ஏதோ ஒரு பாடலுக்கு (செந்தாழம் பூவில் ?)ப்ரொடியூசர் பணம் தர மறுத்ததால் கமல் உதவியதாக மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார் //
வருகைக்கு நன்றி பூங்குழலி
ஆம்..நீங்கள் சொல்வது சரிதான்.
படம் ஓடாது என நினைத்த தயாரிப்பாளர் இயக்குனர் சொன்ன அப்பாடலை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.ஆனால் மகேந்திரன் பிடிவாத்மாக இருந்து அப்பாடலைஸ் சேர்த்தார்.
இதே தயாரிப்பாளர் அடுத்து மட்டமான ஒரு படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டது தனிக்கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஜி.ராஜ்மோகன் said...
தமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு!//

நன்றி ஜி.ராஜ்மோகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதவா said...
இயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுதியிருக்கலாம்.. மிக அருமையான இயக்குனர்.. ஆனால் ஓரிரண்டு படங்கள் தவிர வேறெதுவும் நான் பார்த்த்தில்லை. முதன்முதலில் முள்ளும் மலரும் பார்க்கும் போது யாருய்யா இந்த டைரக்டர் என்று தேடவைத்தவர்..//
வருகைக்கு நன்றி ஆதவா..
இந்தத் திரைப்பட இயக்குனர் தொடரே...சிறந்த இயக்குநர்கள் பற்றிய சிறுகுறிப்புகள்தான்.
அவர்கள் எடுத்த படம்..அவர்கள் பற்றிய குறிப்பு அவ்வளவே.
இவரைப் பற்றி தனியே வேண்டுமானல் இடுகை இடுகிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// D.R.Ashok said...
மகேந்திரன் சிறந்த இயக்குனரே :)//
நன்றி அசோக்..
ஆமாம்..எங்க ரொம்ப நாளாக் காணோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
மகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத்து வருகிறார் என நினைக்கிறேன்//

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி அசோக்