Wednesday, December 22, 2010

2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..

2010ஆம் ஆண்டு வந்த படங்களில் எனக்குப் பிடித்த சில படங்கள்..தமிழ்ப்படம்...தமிழ் சினிமாக்கள் பற்றி கிண்டல் அடிக்கும் படம்..சிவா நடிக்க..சி.எஸ்.அமுதன் இயக்கம்..ஒரே தொழில் இருந்து..அதை நக்கலடிப்பது சற்று மிகையாகப் பட்டாலும்..சற்று வாய் விட்டு சிரிக்க வைத்த படம்அங்காடி தெரு..பெரிய..பெரிய கடைகளில் வேலை செய்வோர்..இவ்வளவு துன்பத்துக்கு ஆளாகிறார்களா என வியக்கவைத்து..மனதையும் கனக்க வைத்த படம்..அருமையான திரைக்கதை அமைப்பு..சிறப்பான வசனங்கள்..வெல்டன் வசந்த பாலன்.மகேஷ்,அஞ்சலி நடித்த படம்.விண்ணைத் தாண்டிவருவாயா...சிம்பு,திரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த சற்றே வித்தியாசமான படம்..படமாக்கிய விதம்,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு என எந்த ஒரு துறையிலும் குறை சொல்ல முடியா படம்..கிளைமாக்ஸ் அருமை..களவாணி..விமல், ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் வந்த படம்..கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அருமையான கதையுடன் காட்டியிருப்பது படத்தின் வெற்றிக்கு காரணம்மதராசபட்டிணம்..சுதந்திரத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி..காதல்..என வந்த படம்..அந்த நாளைய சென்னையை அழகாக அமைத்த ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டுகள்.ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள்..ஆர்யா, ஏமி ஜாக்சன் (!!) நடிப்பு.விஜய் இயக்கம்..அருமையான இயக்கம்வம்சம்..அறிவுமதி,சுனைனா நடித்த மற்றொரு கிராமப் படம்..இரு கிராமங்களிடையே சண்டை..காதல் என படம் பழய பல்லவியாய் இருந்தாலும்..எடுத்த விதம் படத்தை ரசிக்க வைத்தது.நன்றி இயக்குர்'பசங்க' பாண்டிராஜன்பாஸ் என்ற பாஸ்கரன்..ஆர்யா,நயன்தாரா, சந்தானம் நடித்தது.நகைச்சுவையுடன் ஆன கதை அமைப்பு படத்தை எனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக்கியது.தவிர்த்து..விளம்பரம்,வசூல் என வெற்றி பெற்ற படம் சூர்யாவின் நடிப்பில் வந்த சிங்கம், கார்த்தி நடித்து வந்த இருபடங்களும் (பையா,நான் மகான் அல்ல)எந்திரன் இந்த ஆண்டு தமிழ் சினிமாக்களின் சூபர் ஸ்டார் நடித்த சூபர் படம்ஏமாற்றத்தை அளித்த படங்கள்..தனுஷ் நடிப்பில் வந்த குட்டி, மற்றும் உத்தமபுத்திரன்...தனுஷ் சற்று கவனமாய் இருக்க வெண்டும்..இல்லையேல்..விஜய் படங்களுக்கான கதி இவர் படங்களுக்கும் ஏற்படக் கூடும்.ராவணா..மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தந்த படம்.ஆயிரத்தில் ஒருவன்..மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்து சற்றே வியக்க வைத்த படம்..செல்வராகவன்..திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால்..தமிழ்ப்படங்களில் ஒரு உதாரணமாக திகழ்ந்திருக்க வேண்டிய படம்

கமலின் மன்மத அம்பு வருட இறுதிவாரம் வருவதால்..அதைப் பார்த்து..முடிவுகள் சொல்ல அடுத்த வருடம் ஆகுமாதலால் இந்த லிஸ்டில் அது சேரவில்லை.

நந்தலாலா..மிஸ்கினின் இயக்கத்தில் வந்த வெற்றி படமாக இருந்திருக்க வேண்டிய தோல்விப் படம்.நன்கு ஒடியிருக்க வேண்டும் என நான் நினைத்து தோல்வியைத் தழுவிய படங்கள்..நாணயம், தா, துரோகி

21 comments:

எல் கே said...

நல்ல தேர்வுகள்

goma said...

இதில் ’தமிழ்படம்’ தவிர வேறு எந்த படமும் நான் பார்க்கவில்லை விசிடி வாங்கி பார்த்துவிட வேண்டியதுதான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நான் திரைப்படம் பார்ப்பது மிக அரிது . இத்தன படங்கள் வந்துள்ளதா !!!.
:(

அருண்மொழிவர்மன் said...

வம்சம் திரைப்படம் பாண்டியராஜின் இயக்கத்தில் வெளியானது.

மாதேவி said...

நல்ல தேர்வுகள்.எந்திரன்,சிங்கம் பார்க்கவில்லை.

ஜி.ராஜ்மோகன் said...

"தமிழ்ப்படம்" எல்லாம் படம்னே சொல்ல கூடாது பாஸ்! அதெல்லாம் காவியம்!

கோவி.கண்ணன் said...

//இயக்குர் பூபதி பாண்டியனுக்கு//

இயக்குனர் 'பசங்க' பாண்டி ராஜன்

Priya Sreeram said...

nice roundup !

Best Online Jobs said...

100% Genuine & Guarantee Money Making System.(WithOut Investment Online Jobs).

Visit Here For More Details :

http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அருண்மொழிவர்மன் said
வம்சம் திரைப்படம் பாண்டியராஜின் இயக்கத்தில் வெளியானது.//

//கோவி.கண்ணன் said...
//இயக்குர் பூபதி பாண்டியனுக்கு//

இயக்குனர் 'பசங்க' பாண்டி ராஜன்//

வருகைக்கு நன்றி அருண்மொழிவர்மன், கோவி கண்ணன்.
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
திருத்திவிட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி எல் கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
இதில் ’தமிழ்படம்’ தவிர வேறு எந்த படமும் நான் பார்க்கவில்லை விசிடி வாங்கி பார்த்துவிட வேண்டியதுதான்//

பார்த்துவிடுங்கள் goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நான் திரைப்படம் பார்ப்பது மிக அரிது . இத்தன படங்கள் வந்துள்ளதா !!!.
:(//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

..// மாதேவி said...
நல்ல தேர்வுகள்.எந்திரன்,சிங்கம் பார்க்கவில்லை.//

:)))

பார்த்துவிடுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜி.ராஜ்மோகன் said...
"தமிழ்ப்படம்" எல்லாம் படம்னே சொல்ல கூடாது பாஸ்! அதெல்லாம் காவியம்!//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Priya Sreeram said...
nice roundup !//


வருகைக்கு நன்றி Priya sreeram

சிநேகிதன் அக்பர் said...

தேர்வுகள் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

ஹேமா said...

நல்ல அலசல்தான்.என்னதான் அலசினாலும் திருப்பி திருப்பி திருப்பி....!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
நல்ல அலசல்தான்.என்னதான் அலசினாலும் திருப்பி திருப்பி திருப்பி....!//

என்ன செய்வது..எப்படிப் பார்த்தாலும்..நல்ல படங்கள் என்பதற்கு இரு கை விரல்களே போதுமானதாய் உள்ளதே

கோவி.கண்ணன் said...

//இயக்குர்'பசங்க' பாண்டியராஜன்//

பாண்டிய ராஜன் இல்லை, இவரு பாண்டி ராஜன். இடையில் 'ய' வராது. ஆண்பாவம் பாண்டியராஜனும் பசங்க பாண்டி ராஜனும் வேற.