ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Friday, December 3, 2010
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(3-12-10)
பாரதிதாசன் மீது இருந்த பற்றுதலால் ராசகோபாலன் என்னும் தன் பெயரை..பாரதிதாசனின் பெயரான கனக சுப்பு ரத்தினத்திலுருந்து..சுப்புரத்தினத்தை எடுத்து..சுப்புரத்தினதாசன் என்பதை சுருக்கி சுரதா என்ற பெயரிட்டுக் கொண்டவர் உவமைக் கவிஞர் என்று போற்றபட்ட சுரதா,இவரின் உவமை ஆளுமை சிறந்தது.இடுகாடு பற்றி இவரின் வரிகள்..
இங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை..ஆனால் இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை
2)என் நண்பர் ஒருவர் அவரது மகள்..கேள்விகளுக்கு எல்லாம் தன்னால் பதில் சொல்லமுடிவதில்லை என்றார்.அவர் தன் ஐந்து வயது மகள் பற்றி மிகைப்படுத்தி உரைக்கிறாரோ என எண்ணி. .அப்படி அவள் கேட்டது என்ன? என்றேன்.
நண்பர் சொன்னார்..'கெட்டவர்களையெல்லாம் காட் (GOD) பனிஷ் செய்வார்,,நல்லவர்களுக்கு உதவுவார் என்றேன்..உடனே அவள்..'காந்தி நல்லவர்தானே..அவருக்கு ஏன் கோட்ஸே சுடும் போது உதவி செய்யாமல் பனிஷ் செய்தார் என்கிறாள்' என்றார்.
காரணமில்லாமல் கடவுள் எதையும் செய்ய மாட்டார்..சரி..சரி..நான் வருகிறேன் என நடையைக் கட்டினேன்.
3)இந்தியாவின் தேசிய விலங்கு,தேசிய பறவை ஆகியவை நமக்குத் தெரியும்.தேசிய மரம் எது தெரியுமா? பல நூற்றாண்டு காலம் வாழும் தன்மையும்,மழை,வறட்சியால் அதிகம் பாதிக்கப் படாத மரமுமான ஆலமரமே நம் தேசிய மரம் ஆகும்
4)நம் பொருளாதாரநிலையை பிரதிபலிக்கும் நாட்டின் உற்பத்திதான் மக்களின் முதல் எதிரி என்றும்..அதன் அடிப்படையிலேயே தனிநபர் வருமானம் கணக்கிடப் படுவதாகவும்..அதனால்..இந்தியர்கள் வறுமையில் இருந்தாலும்..இதன் அடிப்படையில் வளமாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது என்றும், வறுமைக் கோட்டை கணக்கிடும் முறை சரியில்லை என்றும் மணி சங்கர ஐயர் தெரிவித்துள்ளார்.எனக்குத் தெரிந்து..இவர் பேசியுள்ள அர்த்தமுள்ள முதல் அறிக்கை இதுவாய் தான் இருக்கும்
5)இந்தியாவில் செல்ஃபோன் டவர்கள் 3லட்சத்து முப்பதாயிரம் உள்ளனவாம்.தமிழகத்தில் மட்டும் 30000 சென்னையில் 8000 டவர்கள் உள்ளனவாம்.
6)விக்கிவீக்ஸ் இணையதளம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம் தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது என்று ஹிலாரி கிளிண்டன் கேலி செய்ததை அம்பலப் படுத்தியுள்ளது.
7)பிரதமர் சொல்வதை மத்திய அமைச்சர்கள் கேட்பதில்லை,சட்டை செய்வதில்லை என்ற புலம்பல் இப்போது அடிக்கடி கேட்கிறது.பிரதமர் செயலிழந்து விட்டாரா..அல்லது கூட்டணி அமைச்சர்கள் சக்தி கூடிவிட்டதா? வாழ்க இந்திய ஜனநாயகம்
8) ரஷ்யா வித் லவ் என்னும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் சீன்கானரி பயன்படுத்திய பிஸ்டல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டதாம்.அவர் பயன் படுத்திய இந்த பிஸ்டல் 1.79 கோடிக்கு ஏலம் போனதாம்..ஆமாம் இதை ராஜபக்ஷே யிடம் முன்னதாக யாரேனும் சொல்லிவிட்டார்களோ?
9)போபால் விஷவாயு கசிவு நடந்து ஆயிரக்கணக்கானோர் பலியான நாள் இன்று..இதில் மூவாயிரம் பேர் அன்றிரவே இறந்தனர்..பல்லாயிரக்கணக்கானோர்..படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்தனர்.:((
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
போபால் 27 வருட தேசிய அவமானம் ...
போபால் விஷவாயு கசிவு நடந்து ஆயிரக்கணக்கானோர் பலியான நாள் இன்று..இதில் மூவாயிரம் பேர் அன்றிரவே இறந்தனர்..பல்லாயிரக்கணக்கானோர்..படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்தனர்.:((
.......இதை ஒரு சாதா"ரண" சம்பவமாக அரசியல்வாதிகளும் பெரும்பான்மையான மக்களும் எடுத்துக் கொள்ள பழகி விட்டது, அதை விட கொடுமையாக இருக்கிறது. மனதையும் ரணமாக்குகிறது.
குழந்தையின் கேள்வியும் பதிலும் சிந்திக்க வைக்கிறது !
.'காந்தி நல்லவர்தானே..அவருக்கு ஏன் கோட்ஸே சுடும் போது உதவி செய்யாமல் பனிஷ் செய்தார் என்கிறாள்' என்றார்.
அந்தக் குழந்தைக்கு சொன்னால் புரியுமா ,காந்தியை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டதே அவருக்கு இறைவன் செய்த பெரிய உதவி என்று.
வருகைக்கு நன்றி
கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கு நன்றி ஹேமா
வருகைக்கு நன்றி goma
வருகைக்கு நன்றி
chitra
குழந்தை விஷயம் சிந்திக்க வேண்டியதுதான்!
வருகைக்கு நன்றி எஸ்.கே
சுரதாவைப் பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் படித்ததில்லை.... நல்ல வரிகள் அவை!!!!
//ஆலமரமே நம் தேசிய மரம் ஆகும்//
தமிழ்நாடு மாநிலத்தின் மரம் 'பனைமரம்' ஆகும்.
- சிமுலேஷன்
ஆலமரம் - எனக்கு புதிய விசயம்.............
சூப்பர் சுண்டல்.
வருகைக்கு நன்றி சிவா என்கிற சிவராம்குமார்
வருகைக்கு நன்றி Simulation
வருகைக்கு நன்றி
Bala
வருகைக்கு நன்றி
வழிப்போக்கன் - யோகேஷ்
Post a Comment