2010 ஆம் ஆண்டே சென்று வா..
நீ எங்கள் நாட்டிற்கு பல நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாய்..
தமிழகத்தைப் பொறுத்தவரை..
தமிழக சட்டப் பேரவை,தமிழக செயலக வளாகம்,உலகத் தமிழ் செம்மொழி மகாநாடு,அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,தஞ்சைக் கோயில் 1000 ஆவது ஆண்டு விழா, செம்மொழிப் பூங்கா..இப்படி பல ஞாபகத்தில் இருக்க வேண்டிய நிகழ்வுகள்.
ஆனால் அதே நேரம் எங்கள் அரசியல்வாதிகளால்..நாடே தலை குனிய நேரிட்ட ஊழல்கள்..
வரலாற்றில்...இவ்வாண்டை புரட்டிப்பார்க்கும் எதிர்கால இளைஞர்களுக்கு நீ ஊழல் ஆண்டாகவேத் தெரியப் போகிறாய்.
குடம் பாலில் நஞ்சு செலுத்தப்பட்டு விட்டது.
அனைத்து மக்கள் சார்பிலும் உன்னிடம் நான் அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்..
இனி இந்திய அளவில்..நீ சாதித்தது என்ன...
அமெரிக்காவில் சென்று பணி புரிய வழங்கப்படும் H1B விசா பெற போட்டி குறைந்து விட்டது.சாதாரணமாக வருடத்திற்கு 65000 விசாக்கள் வழங்கப் படும்.ஆனால் அவை டிசம்பர் மாதத்திற்குள் காலியாகிவிடும்.ஆனால் இந் நிதி ஆண்டில் இன்னமும்11000 விசாக்கள் வாங்க ஆளில்லாமல் இருக்கிறது.இது நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நல்ல அறிகுறி.
2008ஆம் ஆண்டு முதல் பின்னணியில் உள்ள உலகப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரிய அளவில் உதவியுள்ளது.உன் ஆண்டில் இந்தியா இறக்குமதியில் உலக வர்த்தகம் 13.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.
200 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதியும், 350 பில்லியன் டாலர்கள் இறக்குமதியும் சேர்த்து 550 பில்லியன் டாலர்கள் பன்னாட்டு வர்த்தகம் உன் காலத்தில் தான் நடந்துள்ளது.இது மிகப் பெரிய அளவில் பன்னாட்டு வர்த்தகத்தை உயர்த்த உதவியுள்ளதாக மதிப்பீடுகள் சொல்கின்றன.
அதுமட்டுமா...அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாவதில் இந்தியாதான் உதவுகிறதே தவிர..அமெரிக்காவால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாவதில்லை என மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார்.மேலும் முதன்மை
முதலீட்டு நாடாகவும் அமெரிக்கா உள்ளது.உண்மையைக் கூறுவதானால்..அமெரிக்காவில் முதலீடு செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.இதுவும் உன் காலத்தில் அமைந்ததே.
அவ்வளவு ஏன்..ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும்...உலகே வியக்கும் வகையில் காமென்வெல்த் விளையாட்டுகள் உன் காலத்தில் தான்.
ஆகவே..குறைகளை மறந்து நிறைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு நீ செல்..உன்னை வாழ்த்தி விடை அளிக்கிறோம்.
2011...ஏ..நீ வந்து...இந்த ஆண்டு ஏற்பட்ட குறைகளை..களங்கங்களை முடிந்த அளவில் துடைத்து..எங்களுக்கு..அதாவது சாமான்யனுக்கு நல்லதை அள்ளித் தரும் நல்ல ஆண்டாய் அமைந்துவிடு.
உலக அளவில் ஐ.நா., சபை உன்னை சர்வதேச காடுகள் ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது.
டிஸ்கி -அனைவருக்கும் தமிழா தமிழா வின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
25 comments:
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஐயா.
Wishing u a very happy n wonderful 2011 !
நன்றி சண்முககுமார்
நன்றி இராகவன்
நன்றி Priya Sreeram
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் .
Happy New Year, TVR sir! :)
புத்தாண்டு வாழ்த்துகள் சார்.
நன்றி dr suneel krishnan
நன்றி வருண்
நன்றி Bala
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நன்றி ஜெட்லி...
புத்தாண்டு வாழ்த்துகள்!
நன்றி சிநேகிதன் அக்பர்
//அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாவதில் இந்தியாதான் உதவுகிறதே தவிர..அமெரிக்காவால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாவதில்லை என மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார்.//
எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்
நன்றி SUREஷ் (பழனியிலிருந்து
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நன்றி யோவ்
காஞ்சனா மற்றும் உங்களுக்கும் மனம் நிறைந்த 2011ன் இனிய வரவின் வாழ்த்துகள் !
நன்றி ஹேமா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி Venkat
வாழ்த்துகள்!
நன்றி பழமைபேசி
Post a Comment