Monday, December 13, 2010

குறள் இன்பம் - 4

வள்ளுவரின் சொல் விளையாட்டு..சொல்லழகுக் கொண்ட தொடர் வரிசையில் இன்று நான்கு குறள்களைப் பார்க்கலாம்.



முதலாவதாக தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் ஒன்பதாம் குறள்



தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்



படிக்கும் போதே எவ்வளவு இனிக்கிறது..



நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்..ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பதே பொருள்.



அடுத்ததாக..அறிவுடமை அதிகாரத்தில் எட்டாவது குறள்..அஞ்சுவது வைத்தே அயரவைக்கும் குறள்



அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவ

தஞ்சல் அறிவார் தொழில்



அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அஞ்ச வேண்டுவதற்கு அறிஞர்கள் அஞ்சுவார்கள்



அடுத்த குறள் அவா அறுத்தல் அதிகாரத்தில் இரண்டாம் குறள்..



வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்...



யாரை வேண்டினாலும் இப்படி ஒரு அருமையான குறளை படிக்க வேண்டியது அவசியம்.



விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என எண்ணும் அளவிற்கு ஏற்படும் துன்ப நிலை..ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்...என்பது பொருள்.



அடுத்து நாம் அனைவரும் பற்று வைத்திருக்கும் குறள்..இதைப் பற்றாமல் இருக்க முடியாது.எட்டு வார்த்தைகள் குறளில் ஏழு வார்த்தைகள் பற்று..வரும்..

அடடா..என்னே அருமை



பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு



பற்றில்லாதவன் எவனோ அவனிடம் பற்றுக் கொள்ள வேண்டும்.நம் பற்றுகளை விட்டொழிக்க அப்பற்றே நமக்கு துணையாகும்.

14 comments:

vasu balaji said...

அருமை சார்.

Chitra said...

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என எண்ணும் அளவிற்கு ஏற்படும் துன்ப நிலை..ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்...என்பது பொருள்.


......அருமையாக சொல்லி இருக்கிறார்.
சிறப்பாக பகிர்ந்த உங்களுக்கு, மனமார்ந்த நன்றிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

R. Gopi said...

எல்லாமே நல்லா இருக்கு சார்

Priya Sreeram said...

super a irukku-

சிநேகிதன் அக்பர் said...

//நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்..ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பதே பொருள்.
//

பதிவுலகத்தை சொல்றீங்களா சார்? :)

அனைத்துமே கடைபிடிக்க வேண்டியவை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Gopi Ramamoorthy said...
எல்லாமே நல்லா இருக்கு சார்//


நன்றி Gopi Ramamoorthy

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Priya Sreeram said...
super a irukku-//

நன்றி Priya Sreeram

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
//நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்..ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பதே பொருள்.
//

பதிவுலகத்தை சொல்றீங்களா சார்? :)

அனைத்துமே கடைபிடிக்க வேண்டியவை.//

வருகைக்கு நன்றி அக்பர்

ஹேமா said...

எல்லா வகையான வாழ்வியலையும் எவ்வளவு சுலபமாகப் புரிந்து புரியவைத்திருக்கிறார்.
நன்றி உங்களுக்கும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா ...

Karthick Chidambaram said...

அருமை சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Karthick Chidambaram