வள்ளுவனின் சொல் விளையாட்டு, சொல்லழகு பற்றிய இத் தொடர் இடுகையில் இன்று நான்கு குறள்கள்..
கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் மூன்றாம் குறள்..நாடு என்பதை எவ்வளவு அழகாக மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார்
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்
இதே அதிகாரத்தில் ஆறாம் குறள்..
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்
ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் நான்காம் குறள்..தாளாண்மை,வேளாண்மை,வாளாண்மை..அடடா....என்ன சொல்நயம்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையுல் வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு இல்லை..
அதாவது..ஊக்கமில்லாதவர் யாராயிருப்பினும் அவர்கள் கோழைகள் என்கிறார்.
இடுக்கண் அழியாமையில் மூன்றாம் குறள்..இடும்பை என்பதே நான்கு முறை வந்து வள்ளுவனின் ஆற்றலைத் தெரிவிக்கிறது
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
இதைத்தான் பாரதி,,'காலா..உன்னை காலால் மிதிக்கிறேன் வாடா" என்றாரோ?
பாரதிதாசனோ..'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்றார்.
10 comments:
தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .
ஆழ்ந்து நயந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
அன்புடையீர்,
பதிவுக்கு மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
மன்னவாம்
என்பது எழுத்துப்பிழை.
மன்னாவாம் என்று சரி செய்க.
அன்புடன்,
ராதா
திசம்பர் 25, 2010
//R. said...
அன்புடையீர்,
பதிவுக்கு மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
மன்னவாம்
என்பது எழுத்துப்பிழை.
மன்னாவாம் என்று சரி செய்க.
அன்புடன்,
ராதா
திசம்பர் 25, 2010//
வருகைக்கு நன்றி ராதா
பிழை சரி செய்து விட்டேன்..நன்றி
//முகவை மைந்தன் said...
ஆழ்ந்து நயந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.//
நன்றி முகவை மைந்தன்
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .//
நன்றி நண்டு @நொரண்டு
மனதில் பதிய வேண்டிய குறள்கள்.நன்றி !
நன்றி ஹேமா
பேடிக
என்பது
பேடிகை என்று அமைய வேண்டும்.
சரி செய்க என வேண்டும்
அன்புடன்
ராதா
வருகைக்கு நன்றி ராதா
பிழை சரி செய்து விட்டேன்..நன்றி
Post a Comment