ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, December 9, 2010
சினிமா நடிகரிடம்"அப்பாயிண்ட்மெண்ட்" கேட்ட முதல்வர்
சாதாரணமாக ஒரு நாட்டின் முதல்வர் தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரை சந்தித்து நிகழ்ச்சி பற்றி விளக்கி...அட போங்கப்பா..ன்னு நாக்கு வெளியே தள்ளிடும்.
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சின்னா நம்ம முதல்வர் உடனே வர சம்மதிச்சுடுவார்.
சம்பந்தப் பட்ட நடிகரோ..நடிகையோ ஒரு சிறு காட்சியில் திரையில் நடித்திருந்தால் கூட போதும் நம் முதல்வரை சந்தித்து விடலாம்..அந்த அளவுக்கு சாமான்யர் அவர்.
நாடே ஸ்பெக்ட்ரம்,ராஜா.விடாது மழை வெள்ளம்ன்னு கொதிச்சுக் கிட்டிருக்கும் போது//தம்பி பா.விஜய் எடுக்கும் .முதல்வர்
கதை வசனத்திலான 'இளைஞன்' படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரணும்னு ஆசைப்பட்டாராம்.அதை முதல்வர்கிட்டே சொன்னாராம்..
முதல்வரும் உடனே ரஜினியைத் தொடர்பு கொண்டு..'நீங்க ஃப்ரீயா..ஆடியோ விழாவிலே கலந்துக்க முடியுமா?'ன்னு கேட்டாரம்..அவரும் 'சரி'ன்னாராம்.
'அவருக்கு நன்றி கூறினார் முதல்வர் விழாவில்
அடடா. ..பொதுமக்கள் நலனுக்கான நிகழ்ச்சி..நாட்டிற்காக ஒரு நடிகரிடம் (ரஜினி ரசிகர்கள் மன்னிக்க..நானும் ரஜினி ரசிகன் தான்..ஆனால் முதல்வர் செய்தது சரியா..அப்படியே சரின்னாலும்..அதைச் சொல்லி ரஜினியை சங்கடப்படுத்தலாமா) அவரது வருகையை வேண்டியிருக்கிறார் முதல்வர்.
தவிர்த்து..சமயோசிதமாக ஒன்றை முன்னதாகவே வெளியிட்டு விட்டார்..'இந்த படம் 'தாய்" காவியத்திலிருந்து எடுக்கப்பட்டாலும்
பெரும்பாலும் மாற்றிவிட்டேன் என்று.மிஷ்கின் நிலை அவருக்கு இதைச் சொல்லத் தூண்டியுள்ளது.
இந்த இடுகையால் மக்களுக்கு சொல்ல விரும்புவது..இன்னும் ஐந்து/ஆறு மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருது..என்பதுதான்.
Labels:
நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இன்னும் கொஞ்சம் விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது...
ஒரு சினிமா கலைஞன் நாட்டுக்கு தலைவன் ஆனால் நாடு இப்படி தான் இருக்கும்...ஒரு விவசாயியை விட ரஜினியும், விஜயும் என்ன சாதித்து விட்டார்கள் என்று தெரியவில்லை..
சில விஷயங்களை விரிவா எழுதக்கூடாது..சும்மா..'கோடி' தான் காட்டனும்..
மற்ரதை படிக்கிறவங்களே புரிஞ்சுக்கணும் :)))
வருகைக்கு நன்றி பிரபாகர்
ரஜினி நடிகர் என்ற நிலையை கடந்து விட்டார் என்பதே யதார்த்தம்..
ஒரு மர்ம செய்தி...ரஜினி விவகாரமான நிலம் ஒன்று விற்றுஇருக்கிறார்.. அதற்கு கருணாநிதி உதவி இருக்கிறார்..அதற்கு கைமாறுதான் சேட்டைகள். இவனுங்க யாருமே நியாயவானுங்களோ.. பெரிய மனுசனுங்களோ.. கிடையாது.. நாம் மட்டுமே ஏமாளிகள்.
தேர்தல் படுத்தும் பாடு!
6ந்தேதி செய்தியைப் பார்த்ததும், என் டீவீட் (உங்க பதிவுக்கும் ஒத்த மொழின்னு நினைக்கிறேன்)...
@kekkepikkuni kekkepikkuni
இளைஞன் ஆடியோ: கலைஞர், ரஜினி, நமீதா சிறப்பித்தனர்; ரஜினி: மழை வெள்ள நேரத்துல, முதல்வருக்கு ஏராளமான பிரச்சினை இருக்கும்.. http://goo.gl/C6jB7
6 Dec via web
இன்னும் குறிப்பாச் சொல்லணும்னா, 'விழா'வுக்கு நமீதா அணிந்திருந்த உடையைப் பற்றிச் செய்தியும் வந்திருந்தது. மக்கள் வெளியே மழையில் வெள்ளத்தில் திண்டாடிக் கொண்டிருந்தனர்:-(
அப்படியா!
;)
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
//கெக்கே பிக்குணி said...
6ந்தேதி செய்தியைப் பார்த்ததும், என் டீவீட் (உங்க பதிவுக்கும் ஒத்த மொழின்னு நினைக்கிறேன்)...
@kekkepikkuni kekkepikkuni//
நன்றி கெக்கே பிக்குணி
என்னப்பா இது அவர் தான் ஒரு இம்சை அரசன்னு தெரிஞ்சும் அவர போய் - என்ன ஏதுன்னு கேட்டுகிட்டு?
நன்றி விக்கி உலகம்
Post a Comment