ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Saturday, December 11, 2010
மனிதனுக்கு ஒரு விஷயம்
மானிடரே..நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை.தெய்வத்தின் இஷ்டப்படி
உலகம் நடக்கிறது.'தெய்வமே சரண்'என்று நம்பி எவன் தொழில் செய்கின்றானோ..
அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாக பயன் பெறும்.மனிதன்
தன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு பலியாக கொடுத்துவிட வேண்டும்.அதுவே யாகம்.அந்த
யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம்..வலிமை,விடுதலை,செல்வம்,ஆயுள்,புகழ் முதலிய
எல்லா விதமான மேன்மைகளும் கொடுக்கும்.இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில்
சொல்லப்படுகிறது.இதனை அறிந்தால் பயமில்லை.ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான
தெய்வ பக்தி சுபாவம்.ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப்
பயமில்லாமல் செய்து மேன்மை பெற்று மற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய
இந்த பூ மண்டலத்துக்கு நன்மை ஏற்படாது.உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு
வசப்பட்டுச் சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அகங்காரத்தை
வெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமர நிலை அடையும்.தன்னை மற.தெய்வத்தை நம்பு
..உண்மை பேசு..நியாயத்தை எப்போதும் செய்.எல்லா இன்பங்களையும் பெறுவாய்.இப்போது
பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகிறன.அந்த புதிய யுகம் தெய்வபக்தியையே
மூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது.ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை
பெறுவார்கள்.இது சத்தியம்.இதை எட்டு திசைகளிலும் முரசு கொண்டடியும்.இதுவே நான்
சொல்லக்கூடிய விஷயம்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
பாரதி தீர்க்கதரிசி. ஒரு வேளை ஹிந்து மாதிரி பத்திரிகைகளைச் சொல்லியிருப்பார்;)
//வானம்பாடிகள் said...
பாரதி தீர்க்கதரிசி. ஒரு வேளை ஹிந்து மாதிரி பத்திரிகைகளைச் சொல்லியிருப்பார்;)///
:))))
வருகைக்கு நன்றி chitra
ம்ம்....நல்லதையே சொல்லியிருக்க்கிறார் !
வருகைக்கு நன்றி superstar racing
வருகைக்கு நன்றி ஹேமா
பாரதிக்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறீர்கள்... சூப்பர்...
நன்றி philosophy prabhakaran
பாசிடிவ் சிந்தனையை தூண்டும் பதிவு... நன்றி
well said n thought provoking !
//பார்வையாளன் said...
பாசிடிவ் சிந்தனையை தூண்டும் பதிவு... நன்றி//
நன்றி பார்வையாளன்
//Priya Sreeram said...
well said n thought provoking !//
நன்றி Priya sreeram
நெற்றி அடி பதிவு சூப்பர்.................
//நாஞ்சில் மனோ said...
நெற்றி அடி பதிவு சூப்பர்.................//
வருகைக்கு நன்றி நாஞ்சில் மனோ
Post a Comment