தில்லியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு வேறு மாநிலங்களிலிருந்து குடியேறியவர்கள் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்..கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம்..அவர் என்ன சொல்ல வருகிறார்..
தில்லியைத் தவிர வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் குற்றம் செய்பவர்கள் என்கிறாரா?
இந்தியர்களைப் பற்றி..இந்தியரான..இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட் இந்தியாவின் உள்துறை அமைச்சராக செயல் படுபவர் இப்படி சொல்லியுள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தது போல சந்துல சிந்து பாடியுள்ளார் பால்தாக்கரே
சிதம்பரம் உண்மையைத்தான் பேசியுள்ளார்..எனவே மும்பை,தில்லி இவற்றில் குடியேறும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு அனுமதி வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்றுள்ளார்..(வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு விசா வழங்குவது போல)
சிதம்பரம்..தன் பேச்சுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைக் கண்டும்..காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும்..சொன்னதை வாபஸ் வாங்கியுள்ளார்.
ஆனாலும்..அவர் கூற்று 'மண்ணின் மைந்தர்கள்" என்று சொல்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல உள்ளது.
ஒருவிதத்தில் இது பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சாகவே உள்ளது.
முன்னர் 'காவி தீவிரவாதம்' என்றார்.இப்போது அடுத்த சர்ச்சைக்குரிய பேச்சு.
ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பேசினால்..இறையாண்மைக்கு எதிரான பேச்சு என்று சொல்லும் அரசு..ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைப் பற்றி கேவலமாகப் பேசினால்..அதற்கு என்ன பெயரைச் சொல்லும்?
22 comments:
திரு சிதம்பரம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ...தெரியலையே யாராவது சொல்லுங்களேன்
ஒரு ஐந்து வருடங்கள் முன் வரை சிதம்பரம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த மனிதராக இருந்தார் ,!!,ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டார் ,உணர்சிகரமாக எல்லாம் பேச மாட்டார் ,(எங்கள் தொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை என்றாலும் ,பக்குவமான நல்ல மனிதர் என்றே எண்ணி வந்தேன் )எல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலோட போச்சு :(
//ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைப் பற்றி கேவலமாகப் பேசினால்..அதற்கு என்ன பெயரைச் சொல்லும்? //
அறியாமை .
ஒருவிதத்தில் இது பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சாகவே உள்ளது.
..... உண்மை. :-(
/இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு /
ஹி ஹி. இது கூட போயே போச்னு வந்து அப்புறம் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு வந்த கவனம்ல.
//goma said...
திரு சிதம்பரம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ...தெரியலையே யாராவது சொல்லுங்களேன்//
ஆம்..உண்மைதான்.அதையே நினைவூட்ட வேண்டும் நிலையில்தான் உள்ளார்
//dr suneel krishnan said...
ஒரு ஐந்து வருடங்கள் முன் வரை சிதம்பரம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த மனிதராக இருந்தார் ,!!,ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டார் ,உணர்சிகரமாக எல்லாம் பேச மாட்டார் ,(எங்கள் தொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை என்றாலும் ,பக்குவமான நல்ல மனிதர் என்றே எண்ணி வந்தேன் )எல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலோட போச்சு :(//
ஆம்..நானும் நிரம்ப மதிப்பு வைத்திருந்த அரசியல்வாதி அவர்
//Chitra said...
ஒருவிதத்தில் இது பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சாகவே உள்ளது.
..... உண்மை. :-(//
வருகைக்கு நன்றி Chitra
///வானம்பாடிகள் said...
/இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு /
ஹி ஹி. இது கூட போயே போச்னு வந்து அப்புறம் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு வந்த கவனம்ல.//
ஹி ஹி ஹி ஹி
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
//ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைப் பற்றி கேவலமாகப் பேசினால்..அதற்கு என்ன பெயரைச் சொல்லும்? //
அறியாமை .//
இல்லை..நீங்கள் நளினமான வார்த்தைகளை உபயோகித்துள்ளீர்கள்
||இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட் ||
காமடி பண்றீங்க சார்!!!!
ப.சி. சொன்னதில் உண்மையும் இருக்கிறது.
வெளியில் இருந்து சென்ற ஹிந்திய படைகள் காஷ்மீரில் கொலை, கற்பழிப்பு போன்ற ஹிந்தியாவின் தேசிய செயல்களை செய்து கொண்டுதானே இருக்கிறது...
ஹிந்தியா என்றாலே கொலை, கற்பழிப்பு, இனபடுகொலை, ஆதக்க வெறி போன்றவை அடையாளமாக இருக்கிறது, அதன் அமைச்சர் இப்படி பேசியது வியப்புக்குரியது அல்லவே...
//ஈரோடு கதிர் said...
||இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட் ||
காமடி பண்றீங்க சார்!!!!//
:))
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ் குரல்
கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி :)
//சிநேகிதன் அக்பர் said...
கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி :)//
வருகைக்கு நன்றி
//திரு சிதம்பரம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ...தெரியலையே யாராவது சொல்லுங்களேன்//
அவரு இந்தியன்.
//sEkkaaLi said...
//திரு சிதம்பரம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ...தெரியலையே யாராவது சொல்லுங்களேன்//
அவரு இந்தியன்.///
:)))
hmmm ! nalla kelvi !
வருகைக்கு நன்றி priya sreeram
சில மாநிலங்கள் மட்டும் முன்னேறினால் ஒரு நாடு முன்னேறிய நாடாக ஆகிவிடுமா?இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் கட்டுபாடற்ற குடியேற்றங்களை தடுக்கவேண்டும்.இல்லை என்றால் தமிழீழத்தில் தமிழர்கள் இன அழிப்பிற்கு ஆலாகி திரிவது போல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் சிறுபான்மை தேசிய இனங்கள் தங்களின் சொந்த மாநிலங்களிலேயே சிறுபான்மையினர் ஆகிவிடுவர்.ஏற்கெனவே பெறு நகரங்களில் மண்ணி மைந்தர்கள் சிறுபான்மையினராகிக்கொண்டு வருகின்றனர்
நன்றி KOTRAVAN
Post a Comment