Wednesday, December 15, 2010

உலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட இணையதளமான ஐஎம்டிபியின் சிறந்த பட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ இடம்பெற்றுள்ளது.
அதுவும் 10-க்கு 7.4 புள்ளிகளுடன் முதல் 50 இடங்களுக்குள் எந்திரன் வந்துள்ளது.

இது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும்.
ஐஎம்டிபி என்பது ஹாலிவுட்டின் பைபிள் என்று போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஐஎம்டிபியின் முதல் 50 பட வரிசையில் இந்தியாவிலிருந்து 7 படங்கள் இந்தப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. அவற்றில் எந்திரனுக்கு 39வது இடம் கிடைத்துள்ளது.

தமிழில் எந்திரன் என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும், தெலுங்கு இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனுக்கு இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய திரைப்படமும் எந்திரன்தான். சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வம அறிவிப்பின்படி இதுவரை ரூ 380 கோடிகள் வசூலித்துள்ளது மூன்று மொழிகளிலும்.

படத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக் கலைஞர்கள் பாராட்டினர். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும்,தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது என்றும் பாராட்டினார்.

இத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐஎம்டிபியின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம் பிடித்துள்ளது.

இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.10-க்கு 9 புள்ளிகள் அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.

(நன்றி தட்ஸ்தமிழ் )

21 comments:

vasu balaji said...

அய்ய:))

Vee said...

Is it so?
Check this please.

http://www.imdb.com/chart/top

T.V.ராதாகிருஷ்ணன் said...

இந்த ஆண்டுக்கான பட வரிசை

வருகைக்கு நன்றி Vee

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/12/14-rajini-endhiran-imdb-top-50-list.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

karthik said...

http://www.imdb.com/search/title?year=2010,2010&title_type=feature&num_votes=1000,&sort=user_rating,desc

பிரசன்னா கண்ணன் said...

Endhiran was under the "Best Feature Films Released In 2010 With At Least 1,000 Votes" category & not in the all time "TOP 250" list..
Personally i think Endhiran is not at all deserved for that list too..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//karthik said...
http://www.imdb.com/search/title?year=2010,2010&title_type=feature&num_votes=1000,&sort//

Thanks Karthik
pppli is in 18th place

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prasanna

Rafeek said...

சில டோப்பு..வயத்தெரிச்சல்.. மற்றும் முட்டாள் ஜீவி பதிவர்கள்.. இப்போதாவது மக்கள் ரசனையில் சேருவார்களா? இல்லை இன்னும் துன்பவியல் துயரவியல்னு அவுங்க கண்ணை மூடிகிட்டு உலகம் இருட்டுனு சொல்லுவாய்ங்களா? :)

Chitra said...

Great news! :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rafeek

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
Great news! :-)//

வருகைக்கு நன்றி Chitra

Philosophy Prabhakaran said...

// Endhiran was under the "Best Feature Films Released In 2010 With At Least 1,000 Votes" category & not in the all time "TOP 250" list.. //

http://www.imdb.com/chart/top - all-time TOP 250

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/12/14-rajini-endhiran-imdb-top-50-list.html - top films of 2010

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், தகவலுக்கும் நன்றி பிரபாகரன்

ஆதவா said...

http://www.imdb.com/chart/2010s

எந்திரன் லிஸ்ட்ல இல்லை..
மை நேம் இஸ் கான் இருக்கிறது!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதவா said...
http://www.imdb.com/chart/2010s

எந்திரன் லிஸ்ட்ல இல்லை..
மை நேம் இஸ் கான் இருக்கிறது!!//



Pl.see

http://www.imdb.com/search/title?year=2010,2010&title_type=feature&num_votes=1000,&sort=user_rating,desc

ஹேமா said...

ஐயா...உங்கள் "பயணம்"என்கிற கவிதை இப்போ இலண்டன் GTBC வானொலியில் படித்திருந்தார்கள்.
கேட்டேன்.உடன் அறியத்தருகிறேன்.
சந்தோஷமாயிருக்கு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
ஐயா...உங்கள் "பயணம்"என்கிற கவிதை இப்போ இலண்டன் GTBC வானொலியில் படித்திருந்தார்கள்.
கேட்டேன்.உடன் அறியத்தருகிறேன்.
சந்தோஷமாயிருக்கு !//

என் கவிதை படிக்கப் பட்டதை விட அதை உடனே மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு என் வணக்கங்கள்

Priya Sreeram said...

that's nice !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி priyasreeram