Sunday, December 19, 2010

ஐந்தறிவும் ..ஆறறிவும்..(கவிதை)

உயர்ந்தோர் தாழ்ந்தோர்


பேதமில்லை

மச்சு வீடு குச்சு வீடு

பாகுபாடில்லை.



செய்த பாவம் தீர

இறை வழிபாடில்லை

மெய்யை பொய்யாக்க

நீதிமன்றங்கள் இல்லை.



உண்டு உண்டு உறங்கும்

சோம்பேறிகள் இல்லை

ஒருவருக்கொருவர்

கூழைக் கும்பிடு இல்லை



பதவிக்காக தலைவர்

புகழ் பாடுவாரில்லை

ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்

ஆறறிவு எங்களுக்கு இல்லை

22 comments:

தேவன் மாயம் said...

ஆறறிவு இல்லை.... சவுக்கு!

Priya Sreeram said...

good one !

Ram said...

ஆறறிவு கொண்டாதாலே சரியெது தவறெது என்று உங்களால் உணர்ந்து இப்படி ஒரு பதிவு போட முடிந்தது அல்லவா.??? இதிலிருந்தே நீங்கள் ஆறறிவு படைத்தவர் என்பது புரிகிறது.. ஏனென்றால் ஆறறிவு படைத்தவற்கே குறைகள் கூற தெரியும், தம் வாழ்க்கையில் நிம்மதி கொள்ள தெரியாது.. ஆறறிவு ஜீவனாக இருப்பதை எண்ணி மகிழ்வுறுங்கள்.. ஐந்தறிவை பெருமைபடுத்தாமல் நமக்கு கிடைத்திருக்கும் இவ்வரப்ரசாதத்தை எப்படி உபயோகம் செய்வது என்பதை பற்றி யோசிக்கலாமா.???

ஈரோடு கதிர் said...

ஆறறிவு இருப்பதாக நாம மட்டும்தான் சொல்லிக்கிறோம், அத ஒரு நாய் கூட இன்னும் அங்கீகரிக்கல :)
(நன்றி பாரதிகிருஷ்ணகுமார்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தேவன் மாயம் said...
ஆறறிவு இல்லை.... சவுக்கு!//



வருகைக்கு நன்றி டாக்டர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Priya Sreeram said...
good one !//

நன்றி priya sreeram

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தம்பி கூர்மதியன் said...
ஆறறிவு கொண்டாதாலே சரியெது தவறெது என்று உங்களால் உணர்ந்து இப்படி ஒரு பதிவு போட முடிந்தது அல்லவா.??? இதிலிருந்தே நீங்கள் ஆறறிவு படைத்தவர் என்பது புரிகிறது.. ஏனென்றால் ஆறறிவு படைத்தவற்கே குறைகள் கூற தெரியும், தம் வாழ்க்கையில் நிம்மதி கொள்ள தெரியாது.. ஆறறிவு ஜீவனாக இருப்பதை எண்ணி மகிழ்வுறுங்கள்.. ஐந்தறிவை பெருமைபடுத்தாமல் நமக்கு கிடைத்திருக்கும் இவ்வரப்ரசாதத்தை எப்படி உபயோகம் செய்வது என்பதை பற்றி யோசிக்கலாமா.???//


கவிதையைப் படித்து உணர்ந்து பெயருக்கேற்ப கூர்மதியுடன் அறிவுரை வழங்கியமைக்கு நன்றி தம்பி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
ஆறறிவு இருப்பதாக நாம மட்டும்தான் சொல்லிக்கிறோம், அத ஒரு நாய் கூட இன்னும் அங்கீகரிக்கல :)
(நன்றி பாரதிகிருஷ்ணகுமார்)//

வருகைக்கு நன்றி கதிர்

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க.... :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

vasu balaji said...

ரிப்பீட்டேய்

Philosophy Prabhakaran said...

தம்பி கூர்மதியான் சொன்ன கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி philosophy prabhakaran

Ram said...

@ philosophy prabhakaran : எவ்விதத்தில் என்பதை அறியலாமா..??? உங்களின் மாற்று கருத்து என்ன.???(கொஞ்சம் குப்புற படுத்து யோசிச்சு பேசினா உடனே தப்பு சொல்லிடுறாங்க.. இவரு ப்ளாக்குல போய் ஒரு பெரிய குண்டா போடணும்..)

@T.V.ராதாகிருஷ்ணன்: பிரபாகரன் என் கருத்துகளை ஆமோதித்ததில் உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோசம்..???

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தம்பி
கூர்மதியன்

ஹேமா said...

கதிர் .... சொன்னதுதான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// தம்பி கூர்மதியன் said
@T.V.ராதாகிருஷ்ணன்: பிரபாகரன் என் கருத்துகளை ஆமோதித்ததில் உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோசம்..???//

தம்பி..நம்வீட்டுக்கு வந்தவங்களை 'வாங்க; ன்னு சொல்றதில்லையா?

அதுபோல நம்ம வலைப்பூ பக்கம் வந்தவருக்கு 'நன்றி' சொன்னாக் கூட ஒரு தப்பா..
நல்லா இருக்குப்பா உன் நியாயம்

Unknown said...

நல்ல கவிதை ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்

Ram said...

@T.V.ராதாகிருஷ்ணன்:வீட்டுக்கு வரவங்கள வரேவற்கிறது தப்பில்ல, ஆனா அவங்க மனசுல என்ன இருக்குன்னு பாக்கனும் இல்லையா.??? உங்க வீட்டில் ஏற்கனவே இருக்கும் ஒருவரை மற்றொருவர் கொல்ல வீட்டினுள் வந்துள்ளார்.. நீங்கள் அவரை வரவேற்று உபசரிப்பு நடத்துகிறீர்கள்.. அதை தான் ஏன் என்றேன்.. (சுப்... யப்பா.. என்ன நல்லவன்னு காட்ட என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு.. தண்ணிய கொடுங்கப்பா..)