Sunday, December 26, 2010

பெரியாரின் பெருந்தன்மை



கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.

ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.

மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.

திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.

கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.

பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.

இது கல்கியின் பெருந்தன்மை.

12 comments:

Thamizhan said...

கல்கிக்குத் தமிழர்கள் தமிழின் பெருமை தெரியாமல் இருக்கிறார்களே என்று மிகவும் வருத்தமாம்.ஆகவே பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை போன்ற பெரியவர்களை அழைத்து சென்னைக் கடற்கரையில் பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம்.மக்களும் குவிந்து விட்டனர்.ஆனால் பேராசிரியப் பெருமக்கள் வரவில்லை.அங்கு வந்திருந்த இளம் பேச்சாளர் ஒருவர் மெதுவாகக் கோபப் படாதீர்கள் நானே அத்தனைத் தலைப்புகளிலும் பேசி விடுகிறேன் என்றாராம்."உன்னால் முடியுமா?" என்று கேட்டாராம்."தங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் முயற்சி செய்கிறேன்" என்றாராம். சுமார் இரண்டு மணி நேரங்கழித்துத் துள்ளிக் குதித்த கல்கி " நீ, அண்ணாதுரையல்ல ! அறிஞர் அண்ணாதுரை " என்றாராம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பகிர்வு .

சிநேகிதன் அக்பர் said...

பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

ஹேமா said...

மதிப்பிற்குரியவ்ர்கள் என்றுமே மதிப்பிற்குரியவர்கள்தான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

ரவி said...

பதிவும் அருமை. முத்தான முதல் பின்னூட்டமும் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தழல் ரவி

Reva said...

aayiram karam marithaalum aathavan maraivathilai.... arumai.
Reva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி revathi