Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..

சில சமயங்களில் சில விருதுகள் சிலருக்கு வழங்கப்படுவதால் அந்த விருதிற்கான பெருமை கூடும்.

அப்படிபட்ட நிலை இப்போது..

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.

தகுதியான நபருக்கு.விருது சற்று தாமதித்து கிடைத்துள்ளது.

மண் மணம் கமிழ எழுதுபவர் இவர்.

தங்கர் பச்சான் தயாரித்த 'சொல்ல மறந்த கதை' இவரது தலை கீழ் விகிதங்கள் நாவலே ஆகும்.

விகடனில் சமீபத்திய இவர் கதை 'நீலவேணீ டீச்சர்" படித்து..அதை பாராட்டி இடுகையிட்டேன்.

பின் சக நண்பர் சுரேகாவின் உதவியால் நாடனிடம் மின்னஞ்சலில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

என்ன ஒரு நட்பு நாடும் இனிமையான குரல் அவருடையது.மிகவும் மகிழ்ந்தார்.

இந்திய ஒருமைப்பாடு பற்றி நாஞ்சில் நாடன்

இந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல.குஞ்சாலாடு போல..அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல..பார்க்க உருண்டையாக,அழகாக..இளம் மஞ்சள் நிறமாக,முந்திரிப்பருப்பு,கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது.இது இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும்..ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துப் போகும் பொல பொலவென்று மாவாக - விகடனில்  -தீதும்..நன்றும் (நாஞ்சில் நாடன்)




வாழ்த்துகள் நாடன்
http://tvrk.blogspot.com/2010/03/blog-post_05.html

9 comments:

Philosophy Prabhakaran said...

என்னுடைய சார்பாகவும் வாழ்த்துக்கள்...

R. Gopi said...

பகிர்விற்கு நன்றி சார்

Muruganandan M.K. said...

எனது வாழ்த்துகளும் நாஞ்சில் நாடனுக்கு.

ராமலக்ஷ்மி said...

என்னுடைய வாழ்த்துக்களையும் இங்கே பதிகிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி philosophy prabhakaran

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Gopi Ramamoorthy

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
எனது வாழ்த்துகளும் நாஞ்சில் நாடனுக்கு.//

வருகைக்கு நன்றி
Dr.எம்.கே.முருகானந்தன் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராமலக்ஷ்மி said...
என்னுடைய வாழ்த்துக்களையும் இங்கே பதிகிறேன்.

பகிர்வுக்கு நன்றி.//

நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//sakthistudycentre.blogspot.com said...
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com//



வருகைக்கு நன்றி