Sunday, December 19, 2010

விஜய்...வருவார்..ஆனால்..வரமாட்டார்..

சமீப காலமாக..ரஜினி அரசியலுக்கு வருவாரான்னு..முத்து படம் வந்ததிலே இருந்து வாயத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் சினிமா ரசிர்களுக்கு..சேர்ந்தாற் போல விஜய் நடித்த படங்கள் தோல்வியுற்ற போது..விஜய்யின் நடவடிக்கைகளும்..பேச்சும் விஜய் அரசியலுக்கு வருவாரா என ஒரு கிளைக்கதைக்கான சுவாரசியத்துடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

அதற்கேற்றார் போல விஜய்..ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார்..

அங்கு என்ன ஆச்சுன்னு தெரியலே..இடையில்..கலைஞர் குடும்ப கம்பெனியின் நெருக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே ஜெ வை ஒரு திருமண விழாவில் சந்தித்ததும்..அ.தி.மு.க., வில் சேருவார் என்றனர் சில ஊடகங்களும்,ரசிகர்களும்.

விஜய்..தனது ,காவலன்' படம் வெளிவந்த பின் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும்..தேர்தலில் அக்கட்சி போட்டியிடுமா என்றும், தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., வுடன் கட்சி இணையும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

அனைத்து யூகங்களும்..விஜய் நடித்த படம் வெளியிடுவதற்கான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றும் ,அனைத்தும் வம்சம் அண்ட் கோ., பொறுப்பில் வளைத்துப் போடப்பட்டுவிட்டன என்றதும்..மாறின.

விஜய் யின் தந்தை ஜெ வைப் போய்ப் பார்த்தார்..

பின்னர்..எனக்குக் கலைஞரைத் தெரியும்,ஆனால் தி.மு.க., வைத் தெரியாது..
ஜெ வைத் தெரியும் அ.தி.மு.க.வைத் தெரியாது..என்று சந்திரசேகரிசம் பேசினார்..

ஆனால் நடுவில் நடந்ததென்ன என்று தெரியவில்லை..திடீரென..விஜய் 50 படங்கள் நடித்துள்ளார்..இன்னும் 30 படங்கள் அவர் நடிக்க வேண்டும் என எண்ணம்.அதற்கு பின்னரே அரசியல் பற்றி எண்ணுவார் என்பது போல தந்தை அறிக்கை வெளியிட்டுள்ளார்..

உஷ்..வாயை மூடுங்கப்பா..சொல்லிட்டார் இல்ல..என்கிறாரா விஜய்..

எது எப்படியோ..இப்போது கட்சி பற்றி எந்த முடிவெடுத்தாலும் அது தன் திரைவாழ்க்கையை பாதிக்கும் என தெரிந்துக் கொண்டுவிட்டர் போல இருக்கிறது.

இனி தன் கவனத்தை நல்ல திரைப்படங்களில் நடிப்பதில் செலுத்தட்டும்..
ஒரு ரிவைண்ட்




டிஸ்கி- விஜய்யின் இந்த முடிவால்..காவலனுக்கு தியேட்டர் கிடைத்து பொங்கலுக்காவது படம் வரும் என எதிர்பார்க்கலாம்.
விஜய் -அரசியல்

6 comments:

Philosophy Prabhakaran said...

அவர் வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன... நாம நம்ம பொழப்ப பாப்போம்ங்கண்ணா...

தமிழ் உதயம் said...

அவர்களது பேராசைகளுக்கு எந்த கட்சியும், இடம் தராததால் சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்ங்கிற கதையாயிடுச்சு.

Priya Sreeram said...

edhu eppadiyo-- i dont think the common man will be benefitted either ways !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
அவர் வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன... நாம நம்ம பொழப்ப பாப்போம்ங்கண்ணா...//

வருகைக்கு நன்றி பிரபாகரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் உதயம் said...
அவர்களது பேராசைகளுக்கு எந்த கட்சியும், இடம் தராததால் சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்ங்கிற கதையாயிடுச்சு//


அதைத்தான் சொல்ல வருகிறேன்.சில ஆதாயங்களை எண்ணி, எண்ணாமல் காலைவிட்டார்.
இப்போது காலை விட்டால் போதும் என்ற நிலை
வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Priya Sreeram