Friday, December 24, 2010

ஆ(ற)ரத்தழுவினேன் (கவிதை),



கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா   ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

7 comments:

goma said...

ஓஹோ
இதுக்குப் பேர்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதா???

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
ஓஹோ
இதுக்குப் பேர்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதா???//



ஆமா..மீசை வைக்காதவங்களுக்கு எப்படி சொல்றது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பாலா

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை சார்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி prabhakaran

ஹேமா said...

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகுதானே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா