Sunday, December 5, 2010

The Chaser (korean movie)

(இப்படம் 2008ல் வந்தது)
காவல்துறையில் பணியாற்றிவிட்டு பின் விலக்கப்பட்டு பெண்களை விருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் தொழில் ஈடுபட்டவர் ஜூங்ஹோ (yoon seok kim).சமீபகாலமாக அவரால் பிறரிடம் அனுப்பப்பட்ட பெண்கள்..காணாமல் போகின்றனர்.அவர்கள் தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தராமல் தன்னிடமிருந்து விலகிவிடுவதாக அவன் நினைக்கிறான்.அப்போது ஒரு பெண்ணை அனுப்பச் சொல்லி ஒரு வாடிக்கையாளறிடமிருந்து அழைப்பு வர..உடல் நிலை சரியில்லை என்று சொன்ன போதும் ஒரு பெண்ணை அனுப்புகிறான் அவன்.
சிறிது நேரம் கழிந்ததும் தான்..தான் முன்னர் அனுப்பி மறைந்த பெண்கள் எல்லாம்..சற்றுமுன் வந்த அலைபேசியில் அழைத்தவனிடம் தான் கடைசியாக அனுப்பப் பட்டவர்கள் என உணர்ந்து..அவன் அலைபேசி எண்ணைத் தவிர வேறு யேதும் தெரியாதவன் அவனைத் தேடி விரைகிறான்.

இதனிடையில்..அப்படி அழைப்பவன் ஒரு தொடர் கொலைகாரன்(jung-woo Ha) என்று தெரிகிறது. சுத்தியால் அடித்து கொலை செய்பவன் அவன்.படத்தில் 10 நிமிடம் அவன் அப்படி பெண்ணை அடிக்கும் காட்சி வருவதைப் பார்த்து திகைப்பு ஏற்படுவதுன்,,அதை ஜீரணிப்பதும் சற்று கடினமாக உள்ளதுஅவனை சட்டையில் ரத்தக்கறையுடன் பார்த்த ஜூங்ஹோ அவனைத் தொடர்கிறான்.இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்கின்றனர்.ஆனால் ஜங்க் மீது குற்றப்பத்திரிகை 12 மணி நேரங்களில் சாட்சிகளுடன் பதிவு பண்ண இயலாத நிலையில் அவனை விடுவிக்கின்றனர்.
கடைசியாக தன்னால் அனுப்பப்பட்ட பெண் உயிருடன் இருப்பாள் என்றே நம்புகிறான் யூன்.
முடிவு என்ன என்பதைச் சொன்னால் உங்களின் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால்..சொல்லவில்லை..
 இந்த அற்புதமான திரில்லர் படத்தை..சந்தர்ப்பம் கிடைக்கையில் (ஏற்படுத்திக் கொண்டு) பாருங்கள்.
இப்பட இயக்குநர் hongjin-Na .இது இவர் இயக்கிய முதல் படமாம்..நம்பமுடியவில்லை. காட்சியிலும் அவர் உழைப்பு பளிச்சிடுகிறது.ஒளிப்பதிவும் அருமை.கடைசிவரை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து விடுகிறார்.




7 comments:

Philosophy Prabhakaran said...

வடை எனக்கா...?

Philosophy Prabhakaran said...

ஐய்... எனக்குத்தான்...

Philosophy Prabhakaran said...

கதையை கேட்கும்போதே பார்க்கும் ஆர்வம் ஏற்படுகிறது... பார்க்க முயல்கிறேன்...

Chitra said...

Good thriller movie. :-)

சிவராம்குமார் said...

கண்டிப்பா பார்க்கலாம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
philosophy prabhakaran
Chitra
சிவா என்கிற சிவராம்குமார்

Unknown said...

பரபரக்கும் திரைகதை , ரத்தத்தை சில்லிட வைக்கும் காட்சி அமைப்பு , மிக சிறந்த ஒளிபதிவு தட தடக்கும் வேகம் ,மனதை கலங்க வைக்கும் மென் சோகம் இவை எல்லாம் கலந்த ஒரு திரில்லர் படம் பார்க்க விரும்புபவரா நீங்கள் ? அப்படி என்றால் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமிது !!
my review about this film http://t.co/l4nZALO