மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட தேர்தல் முடிந்ததும்..ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிடலாம் என்பதால்...அவை தங்களுக்குத் தோன்றிய விதங்களில் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றன.இவற்றில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கக் கூடும் என பார்த்தால்..அதற்கு ஒரு தனி கருத்து கணிப்பு வேண்டும்.
ஆனால் இவற்றில் மேற்கு வங்கம் தவிர , மற்ற இடங்களில் இக் கணிப்பு தவறாகப் போகக்கூடும்.
இனி கருத்துகளைக் கேட்டு ஆகப் போவதென்ன..
அப்படியே தமிழகத்தைப் பொறுத்தவரை இக் கணிப்புகள் உண்மையாகுமானால்...ஒன்று மட்டும் நிச்சயம்..
தனித்து பெரும் கட்சியாய் அ.தி.மு.க., வே இருக்கும்.
தி.மு.க., பா.ம.க.,வுடனும், காங்கிரஸ் உடனும் கூட்டணி ஆட்சி அமைக்கலாம்..
ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்து..காங்கிரஸ் தி.மு.க., வை கழட்டியும் விட்டு விடலாம்..அல்லது இவர்கள் உறவில் விரிசல் வரலாம்.
அப்போது அக் கட்சி அ.தி.மு.க., வை நெருங்கலாம்.
ஆகவே தி.மு.க., காங்கிரஸை நம்பி செயல்பட்டால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் நிலைதான்.
பா.ம.க., நிலை என்ன என அக்கட்சியினருக்கே தெரியாது..சந்தர்ப்பத்திற்கேற்றபடி நடக்கும்.
எது எப்படியோ..
மிண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்காமல் இருந்தால்..சரி..
3 comments:
டபுள் ரைட்டு
மிண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்காமல் இருந்தால்..சரி..
..... சரியா சொன்னீங்க...
//மிண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்காமல் இருந்தால்..சரி.. //
எப்படியும் 5 வருடம் சென்றாவது தேர்தலைச் சந்தித்துதானே ஆக வேண்டும்.
Post a Comment