1967ல் தி.மு.க., காங்கிரசிடமிருந்து தமிழக ஆட்சியைக் கைப் பற்றியதும்..அன்றைய முதல்வர் பக்தவத்சலம்..'நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன' என ஒரு அநாகரிக அறிக்கை அளித்தார்.
அந்த அளவிற்கு இல்லையாயினும்..கலைஞர் இம்முறை தேர்தல் முடிவுகள் வந்ததும்..'மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துவிட்டார்கள்' என்று சொன்னதும் சற்று அநாகரிகமாகவே தெரிகிறது.
இந்தக் கேள்விக்கான பதிலுக்கு முன் 2001 சட்டசபைத் தேர்தலுக்குப் போனால்..
அன்று போட்டியிட்ட கலைஞர்..'இதுவே நான் நிற்கும் கடைசித் தேர்தல்' என்று போகுமிடமெல்லாம் சொல்லி ஆதரவைத் திரட்டினார்.ஆனாலும் அ.தி.மு.க., வே ஆட்சிக்கு வந்தது.கலைஞர் 'ஜெ' போலவே எதிர்க்கட்சி தலைவராகி..சட்டசபைக்குப் போவதையேத் தவிர்த்தார்.
பின் 2006ல் மக்கள் மீண்டும் கலைஞரிடம் ஆட்சியைக் கொடுத்தனர்.
இப்போது 2011 தேர்தல்..
இதுவே கடைசித் தேர்தல் என்று சொன்னவர் அதற்குப் பின் இரு தேர்தல்களைச் சந்தித்து விட்டார்.
ஆனால்..இம்முறை கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டிய கட்டாயம்..
இருப்பினும் சூழ்நிலைகள் காரணமாக 119 இடங்களிலேயே தி.மு.க., நின்றது.தகுதிக்கு அதிகமாகவே காங்கிரஸிற்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது.அதற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி.
ஆகவே மக்கள் தி.மு.க., வைத் தேர்ந்தெடுத்தாலும்..தனிக்கட்சியாய் இம்முறை ஆளமுடியாது.
இந்நிலையில்..என்றுமே புத்திசாலி வாக்காளர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., வைத் தேர்ந்தெடுத்தனர்.
இனி தலைப்புக்கு வருவோம்..
பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவிய போதும்..கலைஞருக்கு வழக்கம் போல தோல்வியைத் தர மக்கள் விரும்பவில்லை.சட்டசபையில் அவர் தொண்டு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து..அவரை இதுவரை இல்லாத அளவிற்கு 50000 வாக்குகளுக்குமேல் வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பதவியில் இருந்தாலும் இல்லையாயினும் மக்களுக்கு தொண்டு செய்பவன் நான்..என அடிக்கடி சொல்லும் கலைஞர்..'மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துவிட்டார்கள்' என சொல்லலாமா?
அப்படி மக்கள் நினைத்திருந்தால்..அவருக்கு வெற்றிக்கனியை தந்திருக்க மாட்டார்கள்.
ஆளும் கட்சியில் இருப்பதைவிட..எதிர்க்கட்சியாய் இருந்தால்..மக்கள் பிரச்னைகளை அதிகம் பேசலாம்..
ஆகவே..மக்கள் அதிகப் பொறுப்பையே உங்களுக்குத் தந்துள்ளனர்.
வழக்கம் போல சட்டசபையை புறக்கணிக்காமல்..கூட்டங்களுக்குச் சென்று மக்கள் தொண்டு ஆற்றட்டும் கலைஞர்.
ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் என்பதை பழுத்த அரசியல்வாதியான அவருக்கு நாம் நினைவூட்ட வேண்டாம் என்றே தோன்றுகிறது.
5 comments:
நீங்கள் கூறுவது போல் எதிர்கட்சியாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தி.மு.க தான் எதிர்கட்சி கிடையாதே!....!!
முதல் மந்திரியாதான் பணியாற்றுவேன்னு சொல்றார் போல:))
//
Sultan said...
நீங்கள் கூறுவது போல் எதிர்கட்சியாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தி.மு.க தான் எதிர்கட்சி கிடையாதே!....!!
//உண்மை..ஆனால் அங்கீகரிக்கப் பட்ட எதிர்க்கட்சி இல்லையென்றாலும்..எதிர் வரிசையில் உட்கார வேண்டியவர்கள் தானே..ஆகவேதான் எதிர்க்கட்சி என்றேன்
வருகைக்கு நன்றி பாலா
அப்படி மக்கள் நினைத்திருந்தால்..அவருக்கு வெற்றிக்கனியை தந்திருக்க மாட்டார்கள்.ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே "கனி" மொழிய ஆண்டவன் கொடுத்து விட்டானே?ஜானகியின் குரலில் அந்தப் பாடல் நினைவில் வருகிறது.///ராசாவே உன்னை விட மாட்டேன்,களி தின்னாலும் ஒன்னோட தான் தின்பேன்.///
Post a Comment