Friday, May 13, 2011

மூக்கறுபட்ட காங்கிரஸ்...




தமிழ்நாட்டில்...நாங்கள் எந்த திராவிடக்கட்சியுடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று..தனிப்பட்டமுறையில் தன்னால் ஏதும் முடியாவிடினும் , இப்படிச் சொல்வதில் மட்டும்..அனைத்து தமிழக கோஷ்டி காங்கிரஸ்காரர்களிடமும் ஒற்றுமை இருந்தது..

பலவேளைகளில் அது உண்மையோ..என சில அரசியல் தலைவர்களும் எண்ணியதுண்டு..

ஆனால்..இந்த முறை..

அந்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாலேயே தி.மு.க., மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

தி.மு.க., குடும்பக் கட்சியாகிவிட்டதும்..இலவசமாக அனைவருக்கும் டீ.வி.கொடுத்து..பாமரனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அறியவைத்ததும்...தி.மு.க., வின் ஹிமாலயத் தோல்விக்குக் காரணமாகிவிட்டன.

இப்போதும்..தில்லித் தலைவர்கள்..தோல்விக்கு ஊழல் மட்டுமே காரணமல்ல என்கின்றனர்..

எது எப்படியோ...தமிழகத்தில்..தி.முக., அ.தி.முக., என இரு கட்சிகளைவிட்டால் மாற்று இல்லை.

அதன்படி அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் செய்த தவறுகளை உணர்ந்து...

தி.மு.க., விடம் மக்கள் என்ன குறையை உணர்ந்தார்கள் என அறிந்து..

தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து..

தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றாது..நல்லாட்சியை அ.தி.மு.க., இம்முறையேனும் தரும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.

5 comments:

பிரபாகர் said...

சரியாய் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!... நம்பிக்கைதான் வாழ்க்கை...

பிரபாகர்...

Unknown said...

குடும்பத்துக்காக கட்சியை காவு கொடுத்துவிட்டார் கலைஞர்...

Darren said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
குடும்பத்துக்காக கட்சியை காவு கொடுத்துவிட்டார் கலைஞ//

Yes, you are 100% right.

Thenammai Lakshmanan said...

சரியா சொன்னீங்க டி வி ஆர். தவிர்க்க வேண்டியவற்றைத்தவிர்த்து. , கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தால் சிறப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

பிரபாகர்
கே.ஆர்.பி.செந்தில்
Dharan
தேனம்மை லெக்ஷ்மணன்