நண்பர் ஒருவர்..இவர் வனமும்..வனம் சார்ந்த இடத்திலும் பணி புரிபவர்..
அதீத புத்திசாலி எனலாம்..
இரு வார இதழ்களில் இவரின் தொடர் அறிவு சார்ந்த கட்டுரைகள் வருகின்றன.அவற்றைப் படித்து அவர் திறமையில் அதீத மகிழ்ச்சியடைந்தவன் நான்.
போன வாரத்தில்..ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாய் ஒரு வதந்தி வந்து..அது பற்றி புலனாய்வு நடந்துக் கொண்டிருக்கிறது அமெரிக்காவில்..
அந்தச் செய்தியின் தாக்கம் போல இருக்கிறது..நண்பருக்கு..
தான் இறந்தால் நண்பர்கள் வட்டத்தில் என்னவாகும் என அறிய ஆசை..
ஆகவே தான் இறந்துவிட்டதாக BUZZல் வதந்தியை பரப்புகிறார்.
விஷயம் அறிந்து அனைத்து நண்பர்களிடமும் அதிர்ச்சி...
சில நண்பர்கள் இப்போதுதானே அவரிடம் பேசினோம் என ஆச்சரியம்..
ஒருவேளை..இதைப் பார்த்து..இப்படி ஒரு கட்டுரை எழுதலாம் என்ற எண்ணமாயும் இருக்கலாம்..
ஆனாலும்..இப்படி நடந்துக் கொண்டது அவரது குரூர புத்தியைக் காட்டுகிறது..
அறிவாளிகள் என நாம் நினைப்பவர்கள் சில நேரங்களில் ஏன் அறிவிலியாய் இருக்கிறார்கள்.
நண்பரின் இச் செயலை வன்மையாய் கண்டிக்கிறேன்
2 comments:
நானும்...
எதெதில் வதந்தி என்று வேண்டாமா பாஸ்?...
இப்படியும் சிலர் !!!!
Post a Comment