தமிழ்மணம் செயல்பட்டு வந்த வழங்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தமிழ்மணம் இணைய தளத்தின் தறவிறக்கம் மிகவும் தாமதாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனையைக் களைய பல வித முயற்சிகள் மேற்கொண்டும் எந்தப் பலனும் இல்லாத காரணத்தால் தமிழ்மணம் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலையை எட்டி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் தமிழ்மணம் செயல்பட்டு வரும் வழங்கி நிறுவனமே. அந் நிறுவனத்திடம் பல வகையில் இந்தப் பிரச்சனையை விளக்கியும் எவ்வித பலனும் இல்லாத காரணத்தால் தமிழ்மணத்தை வேறு வழங்கி நிறுவனத்தின் சேவைக்கு மாற்றும் முயற்சியில் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் இது முழுமையடையும் என்று நம்புகிறோம். தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைகள் களையப்பட்டு மீண்டும் ஒரு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என உறுதியளிக்கிறோம். அது வரை தற்போதைய சிரமங்களுக்கு பொறுத்தருள பதிவர்கள், வாசகர்களிடம் வேண்டுகிறோம்
வழங்கிச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், விளம்பரங்கள் மட்டுமே தமிழ்மணத்தின் வழங்கிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இதன் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்மணம், முதன்முறையாக நன்கொடையை எதிர்நோக்குகிறது. நன்கொடை குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி...
நிர்வாகம்
தமிழ்மணம்


தமிழ்மணம் தமிழின் முதன்மையான வலைத்திரட்டி ஆகும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத வகையில் வலைப்பதிவுகள் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய தளமாக தமிழ்மணம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை லாப நோக்கு இல்லாத நிறுவனமாக செயல்பட்டு வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தி வருகிறது.
தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு தடையில்லாத தரமான சேவையை வழங்க நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம்
நன்கொடைகளை பேபால் மூலமாக செலுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறோம்
தமிழ்மணத்திற்கு நன்கொடை வழங்குவது குறித்த கேள்விகளுக்கு தமிழ்மணம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் - admin@thamizmanam.com 

No comments:
Post a Comment