...
மன நலம் குன்றிய தந்தை
..அவன் மீது அளவில்லா பாசம் கொண்ட மகள்...
மகளை அவனிடமிருந்து பிரித்துச் செல்லும் மாமனார்
..மற்றும் குழந்தையின் சித்தி அமலாபால்..
குழந்தையை தந்தையிடம் சட்டப்படி போராடி ஒப்படைக்க நினைக்கும் வக்கீல் அனுஷ்கா
..சந்தானம்..
அவர்களுக்கு எதிராக வாதிடும் நாசர்
..
தந்தையுடன் இருக்கும் மன நலம் குன்றிய நண்பர்கள்
..
இப்படி அளவான பாத்திரங்களுடன்
ஒரு அருமையான திரைப்படத்தை அளித்த தயாரிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
விக்ரம்
....மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார்....தேசிய விருது கிடைக்கலாம்.
பேபி
..சாரா..திரையில் இருந்து அப்படியே எடுத்து கொஞ்சத் தோன்றுகிறது.நீதி மன்றக்காட்சியில் விக்ரமிற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு திறமையைக் காட்டியுள்ளார்.
அனுஷ்கா
...வக்கீலாக வந்து..திறமையுள்ளவர்கள் எந்தப் பாத்திரத்திலும் பிரகாசிக்கலாம் என மற்ற நடிகைகளுக்கு உணர்த்தியுள்ளார்.அமலாபாலும் ஓகே.
அருமையான
ஒளிப்பதிவு..
இப்படத்திற்கு
பாடல்களே தேவையில்லை..அதனால்..இசையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
திரைப்படத்தில்
குறைகளே இல்லையா..என்றால்...இருக்கிறது...ஆனாலும் நிறைகள் அதிகமிருப்பதால் குறைகள் மறக்கப் படுகின்றன.
கிளைமாக்ஸ்
அருமை..
அனுஷ்கா
, விக்ரம்...பாடல் காட்சி தேவையே இல்லை..இதனால் அனுஷ்கா பாத்திரத்தில் சற்று நசுங்கள் ஏற்படுகிறது.
மொத்ததில்
இப்படி ஒரு அருமையான படத்தைக் கொடுத்த இயக்குநர் பாராட்டுக்குரியவர்.
டிஸ்கி
- படம் பார்க்கையில் கே.எஸ்.ஜி.யின் கோகிலா (கை கொடுத்த தெய்வம்) சாவித்திரியின் அருமையான நடிப்பு நினைவிற்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை
2 comments:
சுருக்கமான விமர்சனம் ஐயா.பார்க்கும் ஆர்வம் தருகிறது !
வருகைக்கு நன்றி ஹேமா
Post a Comment