ஹைதராபாத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி, தனக்கு ஜாமீன் வழங்குவதற்காக நீதிபதிக்கு ரூ.100 கோடி லஞ்சம் தர முன்வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மற்றொரு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியான லட்சுமி நரசிம்ம ராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஜனார்தன ரெட்டியின் உறவினரான தசரதராமி ரெட்டி, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் தருவதற்கு ஏற்பாடு செய்யும்படியும், ஜாமீன் வழங்க ஒப்புக்கொண்டால் ரூ.100 கோடி தருவதற்கு தயாராக உள்ளதாகத் தன்னிடம் கூறியதாக லட்சுமி நரசிம்ம ராவ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
5 comments:
அடப்பாவமே.. ...ச்சீ... அடப்பாவிகளா...
பகிர்வுக்கு நன்றி... (த.ம. 2)
ம்... என்ன சொல்ல.
படிச்சவன் பாவம் பண்ணால் ஐயோன்னு போவான்-அன்றே எழுதி வைத்து விட்டான் பாரதி
படிச்சவன் பாவம் பண்ணால் ஐயோன்னு போவான்-அன்றே எழுதி வைத்து விட்டான் பாரதி
படிச்சவன் பாவம் பண்ணால் ஐயோன்னு போவான்-அன்றே எழுதி வைத்து விட்டான் பாரதி
Post a Comment