இப்போதெல்லாம் பரவலாக பல அரசியல்வாதிகள் சொல்வது..'சட்டம் தன் கடமையைச் செய்யும்' ..
அப்படியென்றால் என்ன...
சட்டம் தவறு செய்பவரை முதலில் கைது செய்யும்..
கைது செய்யப்பட்டவர்..ஜாமினில் வெளிவருவார்..
வழக்கு நடைபெறும் ..பல ஆண்டுகள்..சில நூறு வாய்தாக்களுடன்..
சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டு...அவர் மேல் முறையீடு செய்ய சில மாதங்களையும் கொடுக்கும்..
மேல் கோர்ட்டில் குற்றவாளியாய் கீழ் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டவர்..மேல் முறியீடு செய்வார்..வழக்கு நடக்கும்..
இதில் சாதகமாய் தீர்ப்பு இல்லையெனில்..பெஞ்ச், உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் என வழக்கு தொடரும் ஆண்டு கணக்காய்..
இதனிடையில் சம்பந்தப்பட்டவர் அமரர் ஆகியிருப்பார்..அல்லது காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கவில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்படும்..
சட்டம் தன் கடமையைச் செய்த திருப்தியில் அனைவரும் இருப்பர்..
1 comment:
ஹி ஹி ஹி சரியா சொன்னீங்க!
Post a Comment