Saturday, January 19, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)




பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் காபி தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்ற சர்ச்சை இருப்பதும்..விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதும் நாம் அறிவோம்.

அப்படம் காபி என்றாலும்..நம் சட்டம் சில விஷயங்களில் சொல்லுவதை வைத்துப் பார்த்தால்..இப்படம் காபி யடிப்பதின் கீழ் வருமா எனத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு படத்தைப் பார்த்தவர்களுக்கு..இந்த காபி விவகாரம் உண்மையா..பொய்யா..எனத் தெரியும்..

சரி, விஷயத்திற்கு வருவோம்..

இன்று போய் நாளை வா படத்தை ரசித்ததில் 50 சதவிகிதம் கூட லட்டுவை ரசிக்கமுடியவில்லை.அதற்கான காரணம் பாக்கியராஜ் அவர்களின் திரைக்கதை அமைப்பு.

'லட்டு..' மக்களிடையே நன்கு ரீச் ஆகியுள்ளதே..எனக் கேட்பீர்களானால்..

அந்த பெருமை கண்டிப்பாக பாக்கியராஜின் கதைக்காகத்தான் எனலாம்.தவிர்த்து..பொங்கலுக்கு வந்த மிகப்பெரிய படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதும் காரணமாகக் கொள்ளலாம்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதைதான்.

நகைச்சுவை படங்கள் என்றால்..'காதலிக்க நேரமில்லை' 'அடுத்த வீட்டுப் பெண்' 'காசேதான் கடவுளடா' தரத்திற்கு படம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்களுக்கு..இப்படம் ஏமாற்றமே.

மற்றபடி..பெருமைப் பட்டுக் கொள்ளத் தக்க வகையில்..எந்த நடிகரும் இப்படத்தில் எதுவும் சாதித்துவிடவில்லை.

ரகு தாத்தாவை சின்னஞ் சிறிய பறவையால் என்ன செய்ய முடியும்?!

ஜஸ்ட்..பாஸ் மார்க்கில்தான் இப்படம் தேர்வாகுகிறது.

1 comment:

Jayadev Das said...


\\அப்படம் காபி என்றாலும்..நம் சட்டம் சில விஷயங்களில் சொல்லுவதை வைத்துப் பார்த்தால்..இப்படம் காபி யடிப்பதின் கீழ் வருமா எனத் தெரியவில்லை.\\ இதை நீங்கள் விளக்கவே இல்லையே?! சட்டப் படி இது காப்பியில்லை என்றாலும் உண்மையில் இது பாக்கியராஜின் கதையோட காப்பிதான்.

\\ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதைதான்.\\ அப்படிச் சொல்வதற்கில்லை, இப்படம் ஏதோ ஒரு விதத்தில் மக்களை ரசிக்க வைக்கிறது.

நல்ல விமர்சனம்.