Friday, January 25, 2013

விஸ்வரூபம் - விமரிசனம்

                                     


நான் தற்போது அமெரிக்காவில் இருப்பதால்..24 ஆம்தேதியே இரவு எட்டு மணிக்கு விஸ்வரூபம் பிரீமியர் ஷோ பார்க்கமுடிந்தது.

கதையை எழுதினால்தான் விமரிசனம் என்றால் இது விமரிசனம் அல்ல.

விஸ்வனாதன் என்னும் ஒரு பார்ப்பன கணவன்..நடனமாடிக்கோண்டு காலத்தைத் தள்ளுகிறான்.அவன் மனைவி நியூக்கிளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்றவள்.அவள் வேலை செய்யும் நிறுவன முதலாளியை விரும்ப, விவாகரத்திற்கு வழி தேடுகிறாள்.ஆகவே, தன் கணவனைப் பற்றி அறிய, தனியார் துப்பறியும் நிபுணரை கண்காணிக்கச் சொல்கிறாள்.அப்போது தன் கணவன் பிராமின் அல்ல முஸ்லிம் என அறிகிறாள்.\

அதற்குப் பிறகு..நாம் பார்க்குக் காட்சிகளே...இப்படத்தைப் பற்றிய சர்ச்சைக்குக் காரணங்கள்.ஆனால்..உண்மையில்..இஸ்லாமை பழித்தோ..இஸ்லாமிய சகோதரர்களை மட்டமாகவோ காட்டவில்லை என உறுதியாகக் கூறுகிறேன்.

கமல்....

ஆம்..இந்தப் பெயருக்கு அர்த்தம்  சாதனை நாயகன் என்றிருக்குமோ..

தமிழ்ப்படம் ஒன்று ஹாலிவுட் தரத்திற்கு எடுக்க நினைத்திருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவ்வளவு மெனக்கெட்ட கமல்..இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி...நம்மை எந்த கேள்வியையும் கேட்கவிடாமல் செய்திருக்கலாம்.ஆம்..விடை தெரியா பல கேள்விகள் இப்படத்தில் நமக்குத் தோன்றுகிறது (ஒரு வேளை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரோ)
 .

படத்திற்கு பலம் கமலின் நடிப்பு, மற்றும் படத்தொகுப்பு.

மற்றபடி, நடித்துள்ள அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.ஆங்காங்கு சற்றே  இதழ் சற்று விரியும் நகைச்சுவை வசனத்தில்..அதே சமயம் அவை சற்று விரசமாகவும் இருப்பதை மறுக்கமுடியாது.

படத்தின் கலை இயக்குநருக்கு பாராட்டு.

இப்படத்திற்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ...அமைப்புகள் தான் காரணம் எனத் தோன்றுகிறது.

படத்தில் கமலைத் தவிர, நமக்கு பரிச்சியமானவர் ஆண்ட்ரியா மட்டுமே! கதாநாயகி பூஜாகுமார் அழகாகவும் இருக்கிறார்..அசட்டுத்தனமாகவும்,அதே சமயம் புத்திசாலியாகவும் நன்கு நடித்துள்ளார்.வில்லன் ஒமர் பாத்திரத்தில் ராகுல் போஸ் கச்சிதம்.

ஹாலிவுட் தரத்தை எண்ணியவர்..கடைசி சில காட்சிகளில் மசாலா பட லெவெலுக்கு ஏன் சென்றார்..புரியவில்லை.

படம் கண்டிப்பாக ஓடும்..ஓட வேண்டும்..

இப்படம் ஓடவில்லையெனில்..இனி..கமலும்..சாதிக்க வேண்டும் என்னும் வெறியை அடக்கி விட்டு...மைசூர் பா தின்னலாமா? என்று படமெடுக்கலாம்.

60 மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் படம் தேறிவிடும்.

டிஸ்கி - டி டி எச் செலவிற்கு நான் படம் பார்த்துள்ளேன்.ஆம்..இப்படத்தைப் பார்க்க நான் ஏறக்குறைய 800 ரூபாய் டிக்கெட் வாங்கியுள்ளேன்.ஹி..ஹி..டிக்கெட் 16 டாலர்..

5 comments:

Unknown said...

படத்தை நாங்கள் பார்க்கவில்லை எனவே விமர்சனம் செய்ய முடியாது....ஆனால் ஒரு விஷயம் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை நம் நாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை.மாற்று கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பது வேறு விஷயம்.ஆனால் நீ சொல்லக்கூடாது என்று தடுக்க எவருக்கும் உரிமையில்லை.....

உதயம் said...

பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

வேகநரி said...

//படம் கண்டிப்பாக ஓடும்..ஓட வேண்டும்..//
அதே தான். மத அஜராகவாதிகளுக்கெதிராக இந்த படத்தை ஓட வைக்க வேண்டும்.

இன்று ஜிஹாத்தின் பேரில் எத்தனை பேர் கொல்லபட்டார்கள் அல்லது அதிஷ்டவசமாக எவரும் இன்று கொல்லபடவில்லை என்பது நாளைய செய்திவந்த பின்பு தான் தெரியும்

வெத்து வேட்டு said...

எல்லா முஸ்லீமும் தாங்கள் அரபிக்கு பிறந்தவர்கள் என்று நினைப்பதால் "நம்பள்கி..நிம்பள்கி" எல்லாம் OK

ReeR said...

அருமையான விமர்சனம்...

நன்றி

www.padugai.com

THanks