Saturday, April 21, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 29

அத்தியாயம் -  29

2007ஆம் ஆண்டு கோபு-பாபு கதை வசனத்தில் மகேந்திரன் இயக்க அரங்கேறிய நாடகம்"மாதவா கேசவா".60 முறைகள் மேடையேறியது
எல்லாக் காரியங்களையும் எடுத்துப் போட்டுச் செய்யும் இரு கிராமவாசிகள்.அந்த கிராமத்தில் அவர்கள்தான் எல்லோருக்கும், எல்லாமும்.அவர்கள் பெயர் மாதவன், கேசவன்
அந்த ஊர் காவல் நிலையம் பூட்டுப் போடப்பட்டுக் கிடந்தது. ஊரில் காவல் நிலையத்திற்கான தேவைகள் இல்லை.ஏனெனில், அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், ஏட்டும் தான் , நல்லது செய்யும் அந்த இரண்டு கிராமவாசிகள்.
காவல் நிலையத்திற்கான தேவையில்லை என்ற நிலையில், அவர்கள் இருவரும் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறார்கள்.
குற்றங்களே  இல்லை என்பதால்தானே , மாற்றப்படுகிறோம் என்று எண்ணிய மாதவன், தங்கள் அவசியத்தை உணர வைப்பதாகக் கூறுகிறான்.அப்போது ஊரில் ஒரு கொலை நிகழ, மாதவன் சநேகிக்கப் படுகிறான்.கொலை செய்தது அவனா?  இல்லையெனில்அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதே மீதக்கதை.
நாடகத்தைப்பார்த்த இயக்குநர் விசு,"தந்தை முன்னின்று நடத்திய யுஏஏ வை இன்னமும் நடத்தி வருவது ஒரு கோயில் கட்டுவதற்கு சமம்,மகேந்திரா! உன் dedication உன் தகப்பனார் உனக்குப் போட்டுக் கொடுத்த Foundation" என்றார்
இந்த நாடகமும் யூஏஏ விற்கு விலா எலும்பு நொருங்கும் அளவிற்கான நகைச்சுவையை அள்ளிக் கொட்டியது என்றால் மிகையில்லை

No comments: