Thursday, April 26, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும்

அத்தியாயம் - 32

வெங்கடா 3 நாடகம் பற்றி எழுதுகையில், மற்றொரு செய்தியும் சேராவிடில், அப்பதிவு முழுமைப் பெறாது
2010ஆம் ஆண்டுதான் யூஏஏவின் கிளை ஒன்று அமெரிக்கா நாட்டில் சிகாகோ நகரில் துவக்கப்பட்டது.
என்னடா..இது? கார்ப்பரேட் கம்பெனி துவக்கியது போல யூஏஏ கிளை அமெரிக்காவிலா? புரளி விடுகிறேனா? என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதா?
நான் சொல்வது உண்மை.
யூஏஏ உலகின் பல நாடுகளில் தங்கள் நாடகங்களை நடத்தி வந்துள்ளனர்.அவர்கள் நாடகம் நடத்திய வெளிநாடுகள் பற்றியெல்லாம் பின்னால் வரும் பதிவொன்றில் சொல்லப்பட உள்ளது
.ஆனாலும் 2010 முதல் அமெரிக்காவில் இவர்கள் நாடகம் போடும் நகரங்களில் எல்லாம், முக்கிய சில நடிகர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் எல்லாம் அமெரிக்க வாழ் தமிழர்கள் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?
ஆனால் அதுதான் உண்மை
2010ல் சிகாகோவாழ் தமிழர்கள் சிலர், நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் திரிவேணி என்ற குழுவை நடத்தி வந்தார்.அவர்களுக்கு skype மூலம் மகேந்திரன் நடிப்புப் பயிற்சி கொடுத்தார்.அத்துடன் இல்லாது தான் நாடகம் நடத்தும் அமெரிக்கா நகரில் எல்லாம் தன் நாடகங்களில் இவர்களையும் நடிக்க வைத்தார். 
தமிழ்நாடகங்கள்பால் மகேந்திரனின் பற்றிற்கு மற்றுமொரு உதாரணம் இது. 

இப்போது சொல்லுங்கள் அந்த குழுவினரைச் சேர்ந்தவர்களை யூஏஏ2 குழுவைச் சேர்ந்தவர்கள் என அழைப்பதில் தப்பில்லையே.

No comments: