எனது சபாவின் ஆண்டுவிழாவிற்கு சோ, மேஜர் நாடகங்களைப் போட்டதைச் சொன்னேன் அல்லவா?
அடுத்த ஆண்டுவிழாவை ஒரே நடிகரின் நாடகங்களை நடத்த முடிவெடுத்தோம்.அதுவும் நகைச்சுவை நாடகங்களாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம்.
அந்த சமயத்தில் காத்தாடி ராமமூர்த்தி யின் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் , situation comedy யில் அரசனாகத் திகழ்ந்த கே கே ராமன்/சாரதிஎழுதிய நாடகங்களைப் போட்டு வந்தனர்.எல்லா நாடகங்களுமே மாபெரும் வெற்றி நாடகங்கள்
"Goodbye to Love", "Matchless Matches" "Run away Husband" படி தாண்டிய பதி ஆகிய நாடகங்களை ஏற்பாடு செய்தோம்.
முதல் மூன்று நாள் நாடகங்கள் மக்கள் மகிழ நடந்து முடிந்தது.மூன்றாம் நாள் நாடகம் நடக்கையில் ராமமூர்த்திக்கு சிறு காய்ச்சல்.
அவர் நிலை கண்டு நான், "வேண்டுமானால் அடுத்த நாள் நாடகத்தை கேன்சல் செய்யலாமா?" என்றேன்
"வேண்டாம்..வேண்டாம்...ஆண்டுவிழாவிற்கு என்னை நம்பி நாடகங்கள் போட்டு இருக்கிறாய்.நான் நடித்து கொடுக்கிறேன்" என்று அடுத்த நாள் நாடகத்தை மிகவும் இயலாத நிலையில் நடித்து முடித்தார்.
அடுத்து இருபது நாட்களுக்கு அவரால் நாடகம் போட இயலாமல் மஞ்சள்காமாலை"நோயால் பாதிக்கப்பட்டார்.
உடல்நிலையையும் பாராது மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணிய காத்தாடியின் மனிதநேயம் இன்றும் என்னால் மறக்கமுடியாத ஒன்றாகும்

No comments:
Post a Comment