மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை செய்வோர்..புண்ணியமான வேலையைச் செய்கிறார்கள்..என்று நரேந்திர மோடி சொன்னதும்...அதற்கு எல்லா இடங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
அவர் சொன்னது சரியா..தவறா..என்ற கேள்விக்கே இடமில்லை.அப்படிப்பட்ட வார்த்தையை..ஒரு பார்ப்பன மோடி சொன்னார் என்பதால் வந்த எதிர்ப்பல்ல அது.அதே வார்த்தைகளை யார் கூறியிருந்தாலும் மனித நேயம் உள்ளவர் அனைவருமே பொங்கி எழுவர்.
ஆனால்...தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர் களுக்காகவே வாழ்கிறேன். என் நெஞ்சில் தைத்த முள் ..என்றெல்லாம் பேசும் தமிழக முதல்வர் ஆளும் தமிழ்நாட்டின் நிலை என்ன?
மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளியெடுக்கும் கொடுமையை ஒழித்து..,அத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பரிதாப ஜீவன்களுக்கு மறுவாழ்வு தரும் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை தமிழகம் முழுமையாக பயன்படுத்தி இருக்கிறதா?
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவரான சந்தோஷ் சவுத்ரி..தமிழகத்துக்கு 54 கோடிக்கும் மேலாக ஒதுக்கப்பட்ட நிதியில் ,கணிசமான நிதி இதுவரை பயன்படுத்தப் படவில்லை என்ற புகாரைக் கூறியிருக்கிறார்.
முதல்வர் வழக்கம்போலவே,,முந்தைய ஆட்சியைக் குறை சொல்வதுபோல..'92ம் ஆண்டு இத் திட்டம் அமுலுக்கு வந்தது முதல் ,இன்றுவரை பெரும்பகுதியை மனிதக் கழிவு அள்ளுவோரின் மறுவாழ்வுக்கு தி.மு.க.பயன் படுத்தி இருக்கிறது.'.என புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்துள்ளார்.
இப்படி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது நிறுத்தப்படும்வரை..இது போன்ற நல்காரியங்களுக்கு விமோசனமே இல்லை என்பதே சாமான்யரின் கருத்து.
அரசும்...தேர்தலை மாட்டும் மனதில் கொண்டு..இலவசங்களை வாரி வழங்குவதை விட்டு விட்டு..எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
அதை விட்டு விட்டு...தாழ்த்தப்பட்டோர் நலன் பற்றி பேசுவது..ஏட்டு சுரைக்காய் போலத்தான்.
10 comments:
:)
51 ஆண்டுகள் திமுக மட்டுமே ஆளவில்லை. அம்மா ஆட்சி, காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி எல்லாம் மாறி மாறி வந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது இங்கே அவலம் குறைவுதான்.
உங்களைப் போன்றே அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உடன்படுகிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவுகளை வீடுதோறும் வந்து கூடையில் அள்ளி தலையில் சுமந்து சென்றார்கள், தற்போதைக்கு அந்த இழி நிலை என்றாலும், நரகல் மிதக்கும். கழிவு நீர் தொட்டியில் இறங்கி வேலைசெய்பவர்களும் இருக்கிறார்கள், சில சமயம் அதில் விசவாயுவிற்கு பலியாவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
:(
// கோவி.கண்ணன் said...
:)
51 ஆண்டுகள் திமுக மட்டுமே ஆளவில்லை. அம்மா ஆட்சி, காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி எல்லாம் மாறி மாறி வந்திருக்கிறது.//
நானும் அந்த காரணத்தினால்தான்..அரசியல்வாதிகளே..என்று அனைவரையும்..61 ஆண்டுகள் என்றும் கூறியுள்ளேன்.மற்றபடி கலைஞர் மேல் குற்றம் சொல்லவேண்டும் என்ற நோக்கில் அல்ல.
// கோவி.கண்ணன் said...
:)
உங்களைப் போன்றே அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உடன்படுகிறேன்.//
அரசியல்வாதிகள் ஒருவர் மீது..ஒருவர் குறை சொல்லாமல், இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்.,என்பதே அவா..கோவி
இவ்விஷயத்தில்..நான் தனிப்பட்டு எந்த தலைவர் மீதும் குறை காண விரும்பவில்லை.:-(((((((((
/இப்படி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது நிறுத்தப்படும்வரை..இது போன்ற நல்காரியங்களுக்கு விமோசனமே இல்லை என்பதே சாமான்யரின் கருத்து./
excellent
வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி அனானி
பீ என்றொரு ஆவனப்படம் உள்ளது அதனை கண்டிப்பாக பீ அள்ளாத அனைவரும் பார்க்கவேண்டும். இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல நாம் அனைவருமே குற்றவாளிகள்தாம்
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
//குடுகுடுப்பை said...
பீ என்றொரு ஆவனப்படம் உள்ளது அதனை கண்டிப்பாக பீ அள்ளாத அனைவரும் பார்க்கவேண்டும்.//
ஆவணப்படங்கள் எப்போது யார் திரையிடுகிறார்கள் என்பதே தெரிவதில்லை.நீங்கள் சொல்லியுள்ள ஆவணப்படம் நான் இதுவரை பார்க்கவில்லை.
பாவம் சார். கொடுமையான வேல. தண்ணி அடிச்சவன் வாந்தி, பீ எல்லாத்தையும் எப்பவாது ஒரு நாள் அள்ளி போடவே கஷ்டமா இருக்கு. இதையே நாள் தோறும் பண்ணனும்னா. நினைச்சி பாக்கவே வேதனையா இருக்கு.
// மணிகண்டன் said...
பாவம் சார். கொடுமையான வேல. தண்ணி அடிச்சவன் வாந்தி, பீ எல்லாத்தையும் எப்பவாது ஒரு நாள் அள்ளி போடவே கஷ்டமா இருக்கு. இதையே நாள் தோறும் பண்ணனும்னா. நினைச்சி பாக்கவே வேதனையா இருக்கு.//
அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்
Post a Comment