சுதந்திரம் பிறப்புரிமை
மீன்களின் ஆர்ப்பாட்டம்
கண்ணாடித் தொட்டிக்குள்.
கைம்பெண்ணுக்கு
கணவன் சொத்து
மஞ்சள் குங்குமம் கடை
பிறைநிலவு நுதலில் தொடங்கி
வளர்பிறையாய் வளர்ந்து
பௌர்ணமி ஆனது தலை.
காற்று வாங்கப்போனேன்
காற்றின்றி
மூச்சற்று கிடந்தது பீச்சு!!!
விண்ணில் மாவின்றி
செம்மண் கோலம்
சந்தியா காலம்.
வெள்ளிக் காசுகள்
கொட்டும் சப்தம்
மங்கை உன் சிரிப்பு..
8 comments:
//சொந்த சரக்கும்... இரவல் சரக்கும்
சுதந்திரம் பிறப்புரிமை
மீன்களின் ஆர்ப்பாட்டம்
கண்ணாடித் தொட்டிக்குள்.
//
சூடு போடும் வரிகள் !
//கைம்பெண்ணுக்கு
கணவன் சொத்து
மஞ்சள் குங்குமம் கடை//
நல்லா இருக்குங்க.
சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க
சூப்பர் சரக்கு....
//கோவி.கண்ணன் said...
//சொந்த சரக்கும்... இரவல் சரக்கும்
சுதந்திரம் பிறப்புரிமை
மீன்களின் ஆர்ப்பாட்டம்
கண்ணாடித் தொட்டிக்குள்.
//
சூடு போடும் வரிகள் !//
இது என் சொந்த சரக்கு..அதனால் பாராட்டுக்கு நன்றி கோவி
// வடகரை வேலன் said...
//கைம்பெண்ணுக்கு
கணவன் சொத்து
மஞ்சள் குங்குமம் கடை//
நல்லா இருக்குங்க.//
பாராட்டுக்கு நன்றி
// வடகரை வேலன் said...
சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க//
படிச்சேன்..அருமையான பதிவு...விட்டுப்போன சிலவற்றை நான் பட்டியலிட்டுள்ளேன்..படிக்கவும்.
//ச்சின்னப் பையன் said...
சூப்பர் சரக்கு....//
சரக்குன்னு ஒரு வார்த்தை உங்களுக்கு வரக்கூடாதே
Post a Comment