Wednesday, September 10, 2008

பகுத்தறிவாளன் என்பவன் யார்?

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" ஆய்ந்து...ஆராய்ந்து..அதுதான் பகுத்தறிவு.

எந்த ஒரு செயலைச் செய்தாலும்..அதனால் கேடு விளையுமா...நன்மை விளையுமா..என்று பகுத்து அறிந்து பார்ப்பவனே பகுத்தறிவாதி.
மின்சார கம்பியைத் தொட்டால்.."ஷாக்"அடிக்கும்..என்பது நம் நம்பிக்கை..ஆனால் மின்சாரவெட்டு இருக்கும்போது கம்பியைத் தொட்டுவிட்டு ஷாக் அடிக்கவில்லை பாரு என்று சொல்வதில் சாமர்த்தியம் என்ன இருக்கிறது? மின்சாரம் வரும்போது அதை செய்து காட்டி சொன்னால் ஷாக் அடிக்கும் என்னும் தன் நம்பிக்கையை அவன் விட்டு விடுவான்.

கடவுள் இருக்கிறார் என்பவன் ஆத்திகவாதி....இல்லை என்பவன் நாத்திகவாதி...

கோவிலுக்கு செல்பவன் ஆத்திகவாதி..மற்றவர்கள் நாத்திகவாதி என்பது சரியில்லை.நான் கோவிலுக்கு செல்வதில்லை..அதனால் ஆத்திகவாதி இல்லை என்றாகிவிடுமா? நான் கடவுளை நம்புவன்.கோவிலில்தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பாதவன். கடவுளிடம் இதைத்தா...அதைத்தா..என வேண்டாதவன்..ஏனெனில்...அவன் இருக்கிறான்..என்பதால்..அவனுக்கு எனக்கு என்ன தேவை? எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என அவன் அறிவான்.இதை நீ நம்ப வேண்டும்.எனக்கு அந்த நம்பிக்கை இருப்பதால் நான் அவனை வேண்டாதவன்.
ஆனால் ஒருவனே தேவன்... என எண்ணுபவன்..அவன் உருவம் இல்லாதவன்..இயற்கைதான் அவன் என்பவன்...இப்படி நான் சொல்வதால் நான் பகுத்தறிவற்றவன் என்று கூறிட முடியுமா?இறைவன்...எனப்படுபவன்..யார்..என்பதை பகுத்தறிந்து நம்புவதாகவே எண்ணுகின்றேன்.

அதனால்..ஆத்திகவாதி பகுத்தறிவாளன் இல்லை என்பதையும்...நாத்திகவாதி பகுத்தறிவாளன் என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.சிந்திக்கும் திறனுள்ளவன் மனிதன்.ஆகவே..அவனுக்கு பகுத்தறியும் குணம் இயற்கையிலேயே அமைந்து விடுகிறது.

நாத்திகவாதிகள்...தாங்கள்தான் பகுத்தறிவாளர்கள் என்பதை ஏற்க முடியாது.

மேலும்..பார்ப்பனர்கள் எனப்படுபவர்..அனைவரும் ஆத்திகவாதிகள்..பகுத்தறிவாதிகள் இல்லை..என்பவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி பகுத்தறிந்துள்ளனர்.

இப்படி சொல்ல..அவர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ..அவ்வளவு உரிமை உடன் தங்கள் அறிவை பகுத்தறிந்து..ஆண்டவன் இருக்கிறான் என ஆத்திகவாதி எண்ணுகிறான்.அதற்கு அவனுக்கு உரிமை உண்டு.அவன் எண்ணம் அவனைப் பொறுத்த அளவில் சரி.அது அவன் நம்பிக்கை.அதில் நாம் ஏன் தலையிட வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை..சிந்திக்கும் அனைவரும் பகுத்தறிவாளரே!! இதில் ஒரிஜனல் பகுத்தறிவுவாதி...போலி பகுத்த்றிவு வாதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

19 comments:

வால்பையன் said...

கோவிஜி உங்ககிட்ட ஏதாவது சண்டை போட்டாரா

கோவி.கண்ணன் said...

//வால்பையன் said...
கோவிஜி உங்ககிட்ட ஏதாவது சண்டை போட்டாரா
//

சூப்பர அப்பு !
:)

நம்ம இராதகிருஷ்ணன் ஐயா என்கிட்ட சண்டையா ? வேறு ஆளைப் பாருங்கோ !

Kanchana Radhakrishnan said...

//வால்பையன் said...
கோவிஜி உங்ககிட்ட ஏதாவது சண்டை போட்டாரா//


வால்பையன்...வாலை சுருட்டிக்கிட்டு சும்ம இருங்க..எனக்கும்..கோவி க்கும் கலகம் பண்ணாதீங்க
:-)))

Kanchana Radhakrishnan said...

//நம்ம இராதகிருஷ்ணன் ஐயா என்கிட்ட சண்டையா ? வேறு ஆளைப் பாருங்கோ !//

அதுதானே....

Kanchana Radhakrishnan said...

பகுத்தறிவாளர் பட்டம் வேண்டாம் என்று இவர்கள் ஏன் சொல்ல வேண்டும்..மனிதன் என்றாலே பகுத்த்றிவு உண்டு..இதுதான் இப் பதிவின் நோக்கம்...இது கோவிக்கும் பொருந்தும்...TBCDக்கும் பொருந்தும்.

Mahesh said...

நல்ல மேட்டரு... சத்தமாச் சொல்லுங்க.... விழ வேண்டியவங்க காதுல விழுதான்னு பாக்கலாம்

சின்னப் பையன் said...

:-))))

சின்னப் பையன் said...

சர்ச்சையை எதுக்கு ஆங்கிலத்துலே போட்டிருக்கீங்க?... இது என்ன வெளிநாட்டு சர்ச்சையான விஷயமா???....:-))

வால்பையன் said...

//சிந்திக்கும் அனைவரும் பகுத்தறிவாளரே!! //

போலியாக சிந்திப்பவர்கள் போலி பகுத்தறிவாளர்கள் தானே

Kanchana Radhakrishnan said...

//Mahesh said...
நல்ல மேட்டரு... சத்தமாச் சொல்லுங்க.... விழ வேண்டியவங்க காதுல விழுதான்னு பாக்கலாம்//


வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி மகேஷ்

Kanchana Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
:-))))//

:-))))

Kanchana Radhakrishnan said...

//ச்சின்னப் பையன் said...
சர்ச்சையை எதுக்கு ஆங்கிலத்துலே போட்டிருக்கீங்க?... இது என்ன வெளிநாட்டு சர்ச்சையான விஷயமா???....:-))//


நமக்குள்ள எதுக்கு சர்ச்சைன்னு தமிழ்லேயே சர்ச்சையை மாற்றிட்டேன்..திருப்திதானே சின்னவரே!!!:-))))

குமரன் (Kumaran) said...

அப்ப நானும் பகுத்தறிவுவாதி தானா? உண்மைப் பகுத்தறிவுவாதியா போலி பகுத்தறிவுவாதியா? ஓ. இந்த கேள்வியை இங்கே கேட்கக்கூடாதோ? :-) சரி சரி. கோவியார் கோவிக்காம சொல்லுவார்ன்னு தெரியும். :-)

Kanchana Radhakrishnan said...

//வால்பையன் said...
//சிந்திக்கும் அனைவரும் பகுத்தறிவாளரே!! //

போலியாக சிந்திப்பவர்கள் போலி பகுத்தறிவாளர்கள் தானே//


போலியாக சிந்திப்பவர்கள் என்று யாரும் கிடையாது.தவறாக சிந்திப்பவர்கள் அவர்கள்.தன் மனதில் ஒன்றும்..வெளியில் ஒன்றுமாக நடப்பவர்கள்/சொல்பவர்கள் கள்ள எண்ணத்துடன் செயல்படுபவர்களாகவே இருப்பர்.அது அவர்கள் மனதிற்குத் தெரியும்.போலி வாழ்வு வாழ்பவர்கள் பற்றிஎனக்குத் தெரியாது.

Kanchana Radhakrishnan said...

// குமரன் (Kumaran) said...
அப்ப நானும் பகுத்தறிவுவாதி தானா? உண்மைப் பகுத்தறிவுவாதியா போலி பகுத்தறிவுவாதியா? ஓ. இந்த கேள்வியை இங்கே கேட்கக்கூடாதோ? :-) சரி சரி. கோவியார் கோவிக்காம சொல்லுவார்ன்னு தெரியும். :-)//


இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வரக் காரணம் என்ன...சிந்தியுங்கள் நண்பரே!!!

அது சரி said...

அவங்க அப்படி சொல்லிருக்காங்க, இவங்க இப்படி சொல்லிருக்காங்க, இந்த சாஸ்திரம் இப்படி சொல்லுது அதனால அப்பிடி தான் செய்யணும்... இந்த மாதிரி மொக்கையா இல்லாம, ஏன் எதுக்குன்னு கேக்குற எல்லாருமே பகுத்தறிவுவாதிங்க தான்.

நாத்திகவாதிகள் மட்டும் தான் பகுத்தறிவு வாதிகள் இல்லை. கேள்வி கேட்பவர்கள் எல்லாரும் பகுத்தறிவு வாதிகளே.

நல்ல பதிவு ராதாகிருஷ்ணன் சார்!

Kanchana Radhakrishnan said...

// அது சரி said...
நல்ல பதிவு ராதாகிருஷ்ணன் சார்!//


வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி அதுசரி

Anonymous said...

பகுத்தறிவாளர் பட்டம் வேண்டாம்...போலி பகுத்தறிவாளர் ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு அடிச்ச்க்கிட்டு இருக்கும் போட்கு ஊடால இப்படி ஒரு பதிவா?

Kanchana Radhakrishnan said...

// Anonymous said...
பகுத்தறிவாளர் பட்டம் வேண்டாம்...போலி பகுத்தறிவாளர் ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு அடிச்ச்க்கிட்டு இருக்கும் போட்கு ஊடால இப்படி ஒரு பதிவா?//


:-)))))