Tuesday, September 16, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி தன் மனைவிக் கூப்பிட்டு உடனே கடைக்குப் போய் 6 டம்ளர் வாங்கிவரச் சொன்னார்
மனைவி எதற்கு என்று கேட்க 'டாக்டர் தினமும் என்னை 10டம்ளர் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருக்கார்.
நம்ம வீட்ல 4 டம்ளர் தானே இருக்கு" என்றார்.

2.அண்ணாசாமி-(டாக்டரிடம்)எனக்கு இந்த ஜுரம் எப்படி வந்தது.
டாக்டர்-கொசுவாலேதான்.இந்தாங்க ..கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க
அண்ணாசாமி-அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவா பிடிச்சு இந்த கிரீமை தடவ முடியும்?

3.அமெரிக்க அதிபர் புஷ், பில் லேடனைப் பிடிச்சா 10 லட்சம் பரிசுன்னு அறிவித்தார்.
அண்ணாசாமி உடனே புஷ்ஷை தேடிப்போனார் 'எனக்கு 10லட்சம் தாருங்கள் என்றார்.புஷ்
எதற்கு எனக் கேட்க அண்ணாசாமி'எனக்கு பில் லேடன் ஐ பிடிச்சிருக்கு'என்றார்.

4.அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து
டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார்.
ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார்

10 comments:

சின்னப் பையன் said...

முடியல... என்னாலே முடியல.....

rapp said...

:):):) kalakkal

கோவி.கண்ணன் said...

இராதகிருஷ்ணன் ஐயா சாமி,

அண்ணாசாமி ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கிறது.

//4.அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து
டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார்.
ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார்//

10 டிக்கெட் வாங்காமல் இருந்தாரே !

சகாதேவன் said...

நான் ஒரு அண்ணாசாமி ஜோக் சொல்லவா?
அண்ணாசாமி ஒரு நாள் கடையில் புதிதாக ஒரு குடுவை மாதிரி ஒன்றைப் பார்த்தார். அது என்ன என்று கேட்டார். கடைக்காரர், இதுதான் தெர்மாஸ் ஃப்ளாஸ்க். சூடானதை ஊற்றினால் சூடாகவும் ஜில்லானதை ஊற்றினால் ஜில்லாகவும் வைத்திருக்கும், என்றார்.
உடனே ஒரு ஃப்ளாஸ்க்கை வாங்கிக்கொண்டு வந்தார். மறுநாள் ஆபீஸ் செல்கையில் வேண்டியதை ஊற்றிச் சென்றார். மானேஜர் அவரிடம் என்ன புதிதாக ஏதோ கொண்டு வந்திருக்கிறீர் என்றார். ஃப்ளாஸ்க் என்றும் கடைக்காரர் சொன்ன அதன் உபயோகத்தையும் சொன்னார்.

என்ன ஊற்றியிருக்கிறீர்னு கேட்டார் மானேஜர். அண்ணாசாமி சொன்னார்,

காலை 11 மணிக்கு காபி வேண்டும். மதியம் சாப்பிட்டதும் பெப்ஸி வேண்டும். அதனால் ஒரு கப் சூடான காபியும், ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு அரை லிட்டர் பெப்ஸியும் ஊற்றியிருக்கிறேன்.

எப்படி?

சகாதேவன்

Kanchana Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
முடியல... என்னாலே முடியல.....//

:-))))

Kanchana Radhakrishnan said...

// rapp said...
:):):) kalakkal//

nanri rapp

Kanchana Radhakrishnan said...

// கோவி.கண்ணன் said...
இராதகிருஷ்ணன் ஐயா சாமி,

அண்ணாசாமி ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கிறது.//

Paraattukku nanri kovi

Kanchana Radhakrishnan said...

குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படக்கூடாது என..நான் அண்ணாசாமி ஆக்கியதற்கான காரணத்தைப் புரிந்துக்கொண்டு நீங்களும் ஒரு அருமையான ஜோக் சொன்னதற்கு நன்றி சகாதேவன்

Anonymous said...

:-)))))

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri anaani