கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.
ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.
மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.
திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.
கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.
பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.
அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.
அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.
இது கல்கியின் பெருந்தன்மை.
(டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் தென்கச்சி சுவாமினாதன் கூறியது)
20 comments:
நல்ல தகவல்!
இரண்டு பேருமே "தி கிரேட்"...
இதே பெருந்தன்மை பெரியார் வழி வந்த கலைஞருக்கும் இருக்கும் அல்லவா? கலைஞர் - சாயாபாபாவை சந்திப்பை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள்
சூப்பர்... மகிழ்ச்சியை கொடுக்கும் சம்பவம்.
இதே பெருந்தன்மை பெரியார் வழி வந்த கலைஞருக்கும் இருக்கும் அல்லவா? கலைஞர் - சாயாபாபாவை சந்திப்பை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள்//
பெரியாருக்கு அடுத்தவனைப் பார்த்து பெருந்தன்மை வரும். ஆனால் கலைஞருக்கு தம் குடும்பத்தை பார்த்து மட்டும்தான் பெருந்தன்மை வரும்
// குட்டிபிசாசு said...
நல்ல தகவல்!//
வருகைக்கு நன்றி குட்டி பிசாசு
// வெண்பூ said...
இரண்டு பேருமே "தி கிரேட்"...//
வருகைக்கு நன்றி வெண்பூ
//Anonymous said...
இதே பெருந்தன்மை பெரியார் வழி வந்த கலைஞருக்கும் இருக்கும் அல்லவா? கலைஞர் - சாயாபாபாவை சந்திப்பை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள்//
இப் பதிவு..தனிப்பட்ட இருவர் பெருந்தன்மையைக் குறிக்கும் பதிவுதானே தவிர வேறு உள் நோக்கமில்லா பதிவு.குறை சொல்பவகள் சமுதாயத்தில் எங்கும் உள்ளனர்.குங்குமம் வைத்ததால்
கலைஞர் தன் கட்சிக்காரரை கிண்டல் செய்யவில்லையா? ஆனால் அதே கலைஞர்..மதுரையில் கேபிள் விஷன் தொடங்கும் முன் அழகிரி செய்த கணபதிஹோமத்தை கிண்டல் செய்யவில்லையே.தனக்கொரு நீதி பிறர்க்கொரு நீதி என நடக்காதவர் பெரியார்.
// சரவணகுமரன் said...
சூப்பர்... மகிழ்ச்சியை கொடுக்கும் சம்பவம்.//
வருகைக்கு நன்றி சரவணன்
//Anonymous said...
இதே பெருந்தன்மை பெரியார் வழி வந்த கலைஞருக்கும் இருக்கும் அல்லவா? கலைஞர் - சாயாபாபாவை சந்திப்பை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள்//
பெரியாருக்கு அடுத்தவனைப் பார்த்து பெருந்தன்மை வரும். ஆனால் கலைஞருக்கு தம் குடும்பத்தை பார்த்து மட்டும்தான் பெருந்தன்மை வரும்//
:_)))))))
நல்ல செய்தி, என்னைப் பொறுத்தவரை
நாத்திகம் , ஆத்திகம் இரண்டுமே வேண்டும். சுயபரிசோதனை மறக்கும் போது அடுத்தவரின் விமரிசனம் இருவருக்குமே பயன்படும்.
//குடுகுடுப்பை said...
நல்ல செய்தி, என்னைப் பொறுத்தவரை
நாத்திகம் , ஆத்திகம் இரண்டுமே வேண்டும். சுயபரிசோதனை மறக்கும் போது அடுத்தவரின் விமரிசனம் இருவருக்குமே பயன்படும்.//
எல்லாமே ஒரு நம்பிக்கைதானே....இதை நான் சொல்லலே...ஜக்கம்மா சொல்றா...குடுகுடுப்பை
மிக மிக அருமையானத் தகவல். பதிவிட்டமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):)
//rapp said...
மிக மிக அருமையானத் தகவல். பதிவிட்டமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):)//
வருகைக்கும்,பாராட்டுதலுக்கும் நன்றி ராப்
நான் கூட எனக்கு பிடிக்காத சீரியல் எல்லாம் பெருந்தன்மையா என்னோட மனைவிக்காக டிவில ஓட விடறேன். அத யாரும் சொல்லமாட்டேன்கறாங்க. இந்த நாட்டுல பிரபலம் ஆனவங்க பத்தி பேசினா தான் உண்டு. பப்பராச்சி கலாசாரம்.
//அவனும் அவளும் said...
நான் கூட எனக்கு பிடிக்காத சீரியல் எல்லாம் பெருந்தன்மையா என்னோட மனைவிக்காக டிவில ஓட விடறேன். அத யாரும் சொல்லமாட்டேன்கறாங்க. இந்த நாட்டுல பிரபலம் ஆனவங்க பத்தி பேசினா தான் உண்டு. பப்பராச்சி கலாசாரம்.//
:-)))))
அருமையான நல்ல பதிவு
varukaikku nanri anaani
இப்போதிருக்கும் தலைவர்களுக்கும் அந்த தன்மை இருக்கிறது, ஒரு எழுத்து தான் வேறுபாடு
பெ'று'ம் தன்மை, திருமணத்துக்கு தலைவர்களை அழைத்தால் அவர்களுக்கு தனியாக மொய் எழுதனுமாம்.
:)
//கோவி.கண்ணன் said...
இப்போதிருக்கும் தலைவர்களுக்கும் அந்த தன்மை இருக்கிறது, ஒரு எழுத்து தான் வேறுபாடு
பெ'று'ம் தன்மை, திருமணத்துக்கு தலைவர்களை அழைத்தால் அவர்களுக்கு தனியாக மொய் எழுதனுமாம்.
:)//
அதைவிட திருமணத்தை அரசியல் மேடையாக்கி..'என் தலைவனைப் பற்றி சொன்னா..நீ நாசமா போயிடுவே.'.என மணமக்களை வாழ்த்தி பேசும் போது எதிர் கட்சி தலையைப் பேசுவாங்களே!!
Post a Comment