Sunday, September 21, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.

2.கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை.

3.தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம்.

4.அந்த டாக்டர் முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது" ன்னு போட்டிருக்காரே

5.தலைமறைவா இருக்கும் தீவிரவாதியை பிடிக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்னு போலிஸ் கமிஷனர் சொல்றாரே..ஏன்?
வலை வீசி தேடச்சொல்லி உத்தரவாம்

6.இந்த இஞ்செக்ஷன் ரொம்ப வலிக்கும்...பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கங்க
அப்போ..முதல்லே பல் டாக்டரைப் பார்த்து பற்களை கட்டிக்கிகிட்டு வந்துடறேன் டாக்டர்

4 comments:

தறுதலை said...

கணவன்: உன்னை பக்கத்து வீட்டுக்காரி அரை லூஸுன்னு திட்டுனா
மனைவி: சும்மாவா விட்டீங்க?
கணவன்: எப்படி குரைச்சு சொன்னேன்னு சண்டை போட்டுட்டேன்.

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Kanchana Radhakrishnan said...

// Tharuthalai said...
கணவன்: உன்னை பக்கத்து வீட்டுக்காரி அரை லூஸுன்னு திட்டுனா
மனைவி: சும்மாவா விட்டீங்க?
கணவன்: எப்படி குரைச்சு சொன்னேன்னு சண்டை போட்டுட்டேன்.//

உடனே அவள் லொள்..லொள் னு..கத்த ஆரம்பிச்சுட்டா...


வருகைக்கும்..ஜோக்கிற்கும் நன்றி

சின்னப் பையன் said...

:-)))

Kanchana Radhakrishnan said...

nanri ;-)))))