Friday, September 26, 2008

கிணற்றுத் தவளைகளின் கதை

ஒரு பாழடைந்த கிணற்றில் தங்கியிருந்த நீரில் பல தவளைகள் வறட்டு கத்தல் கத்திய படியே வாழ்ந்துக் கொண்டிருந்தன, இவர்களுக்குள் ஒரு கிழத்தவளை ஒன்றும் இருந்தது.அது தன் மனம் போன போக்கில் நடந்து..பாக்கி தவளைகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தது.
அவ்வப்போது சில தவளைகள் ஒன்றுக் கூடி அந்த மூத்த தவளையை அழிக்கப் பார்த்து ஏமாந்தன.நாளாக ஆக மூத்த தவளை தன் குடும்பத்தைப் பற்றியே கவலைப் பட ஆரம்பித்தது.
இச் சமயத்தில்..சில நாட்களுக்கு முன்..புதிதாக ஒரு தவளை..மூத்த தவளையை அழிக்கிறேன் என கிளம்பியது...அது அதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருந்த போதே..வேறோரு குட்டி தவளை..புதிய தவளைக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது.
இப்படியாக..அந்த தவளைகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே பாழும் கிணற்றுக்குள்ளேயே இருந்தன.
வெளியே ஒரு உலகம் இருக்கிறது எனத் தெரியாமல்.

3 comments:

குடுகுடுப்பை said...

எனக்கு ஒன்னும் புரியல சாமி, நீங்க மட்டும் எப்படி ஒரு நாளைக்கு ரெண்டு மூனு எழுதறீங்க்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லாம் நீங்க படிச்சு பின்னூட்டம் இட வேண்டும் என்ற ஆசையில்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
எனக்கு ஒன்னும் புரியல சாமி, நீங்க மட்டும் எப்படி ஒரு நாளைக்கு ரெண்டு மூனு எழுதறீங்க்//


கோவி பாருங்க செப்டம்பர் லே இதுவரைக்கும் 50 பதிவு..நான் 41 தான்..எனக்கு தலைவர் முன்னாலே இருக்கார்.