இன்று கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் விவரம்..இன்று அண்ணனின் பிறந்தநாள்.
இன்று தமிழக மக்கள் அனைவரும் புண்ணியம் செய்துள்ள நாள்
நாத்திகவாதிக்கும் இறைவன் காட்சியளிக்கப் போகிறான்.
என் கனவில் அண்ணா வந்து தினசரி கேட்டுக் கொண்டிருந்தார்.
'தம்பி நான் உன்னை விட்டுப் பிரிந்து..ஆண்டுகள் பல கடந்தும்..என் மன
வேதனையை நீ போக்கிடவில்லை.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பதாலேயே..ஒன்றே குலம்..ஒருவனே தேவன் என்று நான் உரைத்தேன்.
அவன் சிரிப்பைக் காண வேண்டும் என்றுதான்..ரூபாய்க்கு ஒரு படி அரிசி
போட்டிட எண்ணினேன்..ஆனால் அத்திட்டத்தை அன்று நடைமுறைப்படுத்த
முடியவில்லை..அந்த முள் என் இதயத்தில் தைத்துள்ள நிலையில்..உன்னிடம்
அவர்களை ஒப்படைத்து சென்றேன்.நீ இதுநாள் வரை அதை போக்கிட வில்லை'
என்றிட்டார்.
ஐயகோ..அண்ணா என்னிடம் ..என்னை நம்பி..இவ்வளவு பெரிய பொறுப்பை
ஒப்படைத்துப் போகிறாயே..அதை நான் எப்படி நிறைவேற்றுவேன்..உன் இதயத்தில்
தைத்துள்ள முள்ளை எப்படி அகற்றுவேன்...என்றிட்டேன்.
இன்றுதான் அந்த முள் அகற்றப்பட்டிருக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண நினைத்த அண்ணனின் கனவை இன்று
அவர் தம்பி நனவாக்கி உள்ளேன்.
இனி ஏழை சிரிப்பான்...இறைவனைக்காணலாம்.
(ஹி..ஹி..எப்பவும் போல கற்பனை பேட்டிதாங்க)
பின் சேர்க்கை-உப்பும் கிலோ 1ரூபாய். தமிழன் நன்றி உள்ளவனாக இருக்கத்தான்
அதன் விலையையும் கொடுத்துள்ளேன்.
8 comments:
//கேட்டுக் கொண்டிருந்தார்.
'தம்பி நான் உன்னை விட்டுப் பிரிந்து..ஆண்டுகள் பல கடந்தும்..என் மன
வேதனையை நீ போக்கிடவில்லை//
கேட்டுக் கொண்டிருந்தார்.
'தம்பி நான் உன்னை விட்டுப் பிரிந்து..ஆண்டுகள் பல கடந்தும்.. இன்னும் என்னை வந்து பார்த்து என் மன
வேதனையை நீ போக்கிடவில்லை
:)))))
இப்படி எழுதாதவரை மகிழ்ச்சியே !
கலக்குறிங்க !
இது வெறும் கற்பனை பேட்டி அப்படிங்கறதுனால சுவை கம்மி. ஒரிஜினல் கற்பனையை விட சுவை அதிகமா இருக்கற சில நிகழ்வுகள்ள கலைஞர் பேட்டியும் ஒன்னு.
வருகைக்கு நன்றி கோவி
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி அவனும் அவளும்
அருமையான பதிவு
நன்றி அனானி
ஆட்டோ... வாப்பா ஒரு இடத்துக்கு போகணும்....
// ச்சின்னப் பையன் said...
ஆட்டோ... வாப்பா ஒரு இடத்துக்கு போகணும்....//
நான் எஸ்கேப்
Post a Comment