Wednesday, September 17, 2008

உங்களுக்குத்தெரியுமா?

நமக்கெல்லாம் பொன்னி அரிசியைத் தவிர வேற எந்த ரக அரிசியும் தெரியாது.அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா அவன் எல்லா அரிசியையும் சாப்பிட்டு முடிக்க 500 வருஷங்கல் ஆகுமாம்.ஆனா இன்னிக்கு இருக்கிற அரிசிகள் விரல் விட்டு எண்ணிடலாம்.ஸீரக சம்பான்னு ஒரு அரிசி...அது ருசி சொல்லமுடியாது.அப்பிடிப்பட்ட ருசி.அதுலே எத்தனை வகை தெரியுமா?ஈர்க்குச்சி சம்பா,ஊசி சம்பா,இலுப்பை சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ்சம்பா,கனகசம்பா,கோட்டைசம்பா,மல்லிகைசம்பா,மாப்பிள்ளைசம்பா,மூங்கில்சம்பா,பொய்கைசம்பா,பொட்டிச்சம்பா,வரகசம்பா,சின்னட்டிசம்பா,சீரகசீம்பா,சுண்டரப்புழுகுசம்பா,சூரியசம்பா,சொல்லச்சம்பா,ரங்கச்சம்பா,அரைச்சம்பா,பூலன்சம்பா,இடயப்பட்டிசம்பா,காச்சம்பா,அரைச்சம்பா,பூவானிசம்பா,டொப்பிச்சம்பா,பிரியாணிசம்பா,ஆனா இன்னிக்கு ...என்னிக்கு ரசாயண உரங்கள்வர ஆரம்பிச்சுதோ.. அன்னியிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது.

4 comments:

கோவி.கண்ணன் said...

//என்னிக்கு ரசாயண உரங்கள்வர ஆரம்பிச்சுதோ.. அன்னியிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது. //

என்ன செய்றது ? இயற்கை உரப் பற்றாக் குறைதான்.

கிரமப்புரங்களில் கழிவறை வந்துவிட்டதே !

:))))))))))

அமர பாரதி said...

//அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4லட்சம் இருந்ததாம்//

இது தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்பது போல கதையாகத்தான் இருக்கும்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவி

Kanchana Radhakrishnan said...

//இது தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்பது போல கதையாகத்தான் இருக்கும்//
நீங்கள் சொல்வது போல் வகைகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம்.ஆனால் சீரக சம்பா விஷயம் உண்மை அல்லவா?