இன்று பதிவு ஏதும் போடவில்லையே..என்ன எழுதலாம் என்று நினைத்தபோது...பைரவன் ஞாபகம் வந்தது..ஆம்..நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் ஞாபகம்..
அவர் தன் மனைவியிடம் தான் வேலை செய்யுமிடம் மன்னார் & கம்பனி என்று சொல்லி தினமும் காலையில் டிபனை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்.ஒரு பூங்காவில் அமர்ந்திருந்து விட்டு மாலை வீடு திரும்புவார்.ஒரு நாள் இந்த விஷயம் மனைவிக்கு தெரியவர..அடுத்த பொய்யாக..தான் ஒரு எழுத்தாளன் என்று கூறுவதுடன், தன் புனைப் பெயர் பைரவன் என்று சொல்வார்.
ஒருநாள் பேப்பரில் பைரவனுக்கு பாராட்டு விழா என்ற செய்தியைப் பார்த்ததும்..அவள் மனைவி அவருக்கு பாராட்டு விழாவா? என வினவ...'ஆமாம்..நான் வேண்டாம்னு தான் சொன்னேன்..கேட்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க..'என்பதுடன்..அப்பாராட்டு விழாவிற்கு மனைவியை வரவேண்டாம் என்பார்.அவர் மனைவியோ ..தன் கணவர் பற்றி பெருமையாகக்கூறி..தனது தோழிகளுடன் விழாவிற்குப் போவார்..ஆனால் அங்கே..பைரவன் என்னும் வேறு ஒருவருக்கு விழா நடக்கும்.அப்போதுதான் தன் கணவர் சொன்ன பொய் தெரியவரும்.கோபத்துடன் வீட்டில் காத்துக்கொண்டிருப்பவரிடம்...தங்கவேலு ஒரு மாலையை கடையில் இருந்து வாங்கி வந்துவிட்டு சமாளிப்பார்.கடைசியில் தன் குட்டு வெளிவந்தது தெரிந்துவிடும்.அடுத்த நாள் அவர் மனைவி
அவரை ஒரு அறையில் பூட்டிவைத்து கதை எழுதச் சொல்வார்.
இந்த காமெடியை மிஞ்சிய ஒன்று இதுவரை தமிழ் படங்களில் வரவில்லை என்பது என் எண்ணம்.
இன்றும்..நண்பர்கள் பேசும்போது..எங்கே மன்னார் & கம்பனிலே வேலைசெய்யறியா? என கிண்டல் செய்வதுண்டு.
தங்கவேலு ..ஒரு பிறவி காமடியன்.அவர் ஆரம்ப காலங்களில் வயதான பாத்திரங்களிலேயே நடித்தார்.பலருக்கு அவர் வயதானவர்தான் என்ற எண்ணம் இருந்தது.பிறகு மாதர் குல மானிக்கம் ,ரம்பையின் காதல் போன்ற படங்கள் வந்து அவர் இளைஞர்தான் என்று சொன்னன.
தேன் நிலவு,இதயத்தில் நீ,பாசமலர் இப்படி பல படங்கள் இவர் திறமையை பறைசாற்றின.
கல்யாணபரிசு..பைரவன் போல் ..நம் ஞாபகத்தில் மறக்க முடியாத மற்றோரு படம்..தெய்வப்பிறவி..இதில் இவர் பண்ணும் கதாகாலெட்சபம் அருமை.
தங்கவேலு...கடைசி வரை நாடகங்களில் நடிப்பதையும் விடவில்லை.
தன் மனைவி எம்.சரோஜாவுடன் சேர்ந்து நம்மை மகிழ வைத்தவர்.என்.எஸ்.கிருஷ்ணன்..மதுரம் ஜோடிக்கு பிறகு திறையுலக காமெடி ஜோடி இவர்களுடையது.கடைசிவரை..காமெடியன் என்பவர் பொதுவானவன்..மக்கள் அனைவருக்கும் வேண்டப்பட்டவனாய் இருக்க வேண்டும் என யார் மனதையும் புண்படுத்தாமல்..எந்த கட்சியிலும் சேராமல்..வாழ்ந்தவர்.
20 comments:
நல்ல நினைவு கூறல்
நல்ல பதிவு!
அதைப் போலவே, அவர் மற்றவரை தூற்றுவதுப் போன்ற வசனங்களை பேசவே மாட்டாராம்!
"மண்ணிக்கணுமா? மண்ணு எப்பிடி நிக்கும்?" என்று அவர் ஒரு படத்தில் ஜோக் அடிப்பார். அநேகமாக கடி ஜோக்குகளுக்கு முதல் விதை போட்டவர்களில் தங்கவேலுவும் ஒருவர்.
// முரளிகண்ணன் said...
நல்ல நினைவு கூறல்//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முரளிகண்ணன்
// விகடகவி said...
நல்ல பதிவு!
அதைப் போலவே, அவர் மற்றவரை தூற்றுவதுப் போன்ற வசனங்களை பேசவே மாட்டாராம்!//
நீங்கள் சொல்வது உண்மை....வருகைக்கு நன்றி
// RATHNESH said...
"மண்ணிக்கணுமா? மண்ணு எப்பிடி நிக்கும்?" என்று அவர் ஒரு படத்தில் ஜோக் அடிப்பார். அநேகமாக கடி ஜோக்குகளுக்கு முதல் விதை போட்டவர்களில் தங்கவேலுவும் ஒருவர்.//
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும்..எனக்கு அவரது வசன உச்சரிப்பு ஞாபகம் வருகிறது.வார்த்தைகளை கடிச்சு யுப்ப மாட்டார்...சும்மா..பளீரென்ற உச்சரிப்பு.
வருகைக்கு நன்றி
தங்கவேலு என்ற நடிகருக்குள் இருந்த நல்ல மனிதரையும் நினைவு கூர்ந்தமை சிறப்பு.
முன்பு சென்னை தொகாவில் அவரின் மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் நினைவு தடுமாறி சிரமப்பட்டார். உடன் இருந்த சரோஜா உதவினார்.
//"மண்ணிக்கணுமா? மண்ணு எப்பிடி நிக்கும்?"//
//எனக்கு அவரது வசன உச்சரிப்பு ஞாபகம் வருகிறது//
நானும் இயல்பாகவே நினைத்தேன்.
//தங்கவேலு ..ஒரு பிறவி காமடியன்//
உண்மை உண்மை
//நல்ல பதிவு!//
ரிப்பீட்டே.....
//அதைப் போலவே, அவர் மற்றவரை தூற்றுவதுப் போன்ற வசனங்களை பேசவே மாட்டாராம்!//
இதை மட்டும்தான் இப்போ எல்லாரும் செய்றாங்க....:-((
//"மண்ணிக்கணுமா? மண்ணு எப்பிடி நிக்கும்?" //
மண் நிற்காது தான். மண்ணிக்கனும் என்பது தவறு மன்னிக்கனும் என்பதே சரி
காஞ்சனா! இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல நினைவு கூறல்..
// ச்சின்னப் பையன் said...
//நல்ல பதிவு!//
ரிப்பீட்டே.....//
ரிப்பீட்டே.....
//முகவை மைந்தன் said...
தங்கவேலு என்ற நடிகருக்குள் இருந்த நல்ல மனிதரையும் நினைவு கூர்ந்தமை சிறப்பு.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
//ARUVAI BASKAR said...
//தங்கவேலு ..ஒரு பிறவி காமடியன்//
உண்மை உண்மை//
ததாஸ்து
நீங்கள் அதில் உள்ள நகைச்சுவையை புரிந்துக்கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.
// மருதநாயகம் said...
//"மண்ணிக்கணுமா? மண்ணு எப்பிடி நிக்கும்?" //
மண் நிற்காது தான். மண்ணிக்கனும் என்பது தவறு மன்னிக்கனும் என்பதே சரி
காஞ்சனா! இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்//
தங்கவேலுவிடம் ஒரு வர் 'மன்னிக்கணும்;என்று சொல்வதற்கு..மண்ணிக்கணும் என்று சொல்வார். உடனே இவர் மண்ணு எப்படி நிற்கும் என்பார்.அதவது உச்சரிப்பு அந்த பாத்திரத்திடம் sariyaagaஇல்லை என்பதை காமெடி ஆக்கிவிடுவார்.
தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி
// Saravana Kumar MSK said...
நல்ல நினைவு கூறல்..//
வருகைக்கு நன்றி சரவணன்
அருமையான பதிவு..இதுபோல் மற்ற கலைஞர்கள் பற்றியும் எழுதுங்கள்
// Anonymous said...
அருமையான பதிவு..இதுபோல் மற்ற கலைஞர்கள் பற்றியும் எழுதுங்கள்//
வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி
மற்றொரு சிறந்த படம் அறிவாளி.
கற்றறியாத மனைவியுடன் அவர் படும் பாடு சரியான காமெடி.
அதில் அவர் மனைவியை பூரி செய்ய சொல்வார்.
அதான் தெரியுமே - அதுதாங்க தெரியாது .. இதுவும் மன்னார் & கம்பெனி போல் ஒரு சிறந்த நகைச்சுவை.
// இளைய பல்லவன் said...
மற்றொரு சிறந்த படம் அறிவாளி.
கற்றறியாத மனைவியுடன் அவர் படும் பாடு சரியான காமெடி.
அதில் அவர் மனைவியை பூரி செய்ய சொல்வார்.
அதான் தெரியுமே - அதுதாங்க தெரியாது .. இதுவும் மன்னார் & கம்பெனி போல் ஒரு சிறந்த நகைச்சுவை.//
அந்த நகைச்சுவையை மறக்கமுடியுமா?தங்கவேலு-முத்துலக்ஷ்மி இருவரும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவிற்கு நடித்திருப்பார்கள்.
Post a Comment