M.G.R., படங்கள் என்றாலே...பொதுவாக பாடல்கள் இனிமையாக இருக்கும்.,அத்துடன்..சில அருமையான கருத்துக்கள்,அறிவுரைகள் எல்லாம் இருக்கும் அவற்றில் சில இப்பதிவில்.
மலைக்கள்ளன் படத்தில்..'எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்' பாடலில் வரும் வரிகள்.
'சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்'
மகாதேவி படத்தில்'தாயத்து..தாயத்து'பாடலில்
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா-இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா-தம்பி
விவரம் புரிந்து நடந்துக் கொள்ளடா -உலகம்
திருந்த மருந்து சொல்லடா'
திருடாதே படத்தில்-திருடாதே பாப்பா பாடலில்
'கொடுக்கற காலம் நெருங்குவதால் எடுக்கற அவசியம் இருக்காது
இருக்கிற தெல்லாம் பொதுவாய்ப் போன பதுக்கற வேலையும் இருக்காது
உழைக்கற நோக்கம் உறுதியாயிட்டா
எடுக்கற நோக்கம் வளாராது'
தாய்க்கு பின் தாரம் படத்தில்..
தரையைப்பார்த்து நிற்குது கதிரு
தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு
அடக்கமுள்ளது அடங்கிகிடக்கது வீட்டிலே -சில
ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
சின்னச்சின்ன கைகளை நம்பி பாடலில்
'அன்னையிடம் நீ
அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ
அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால்
ஊரை வாங்கலாம்
ஊரை வாங்கினால்
பேரை வாங்கலாம்'
விவசாயி படத்தில்
'இருந்திடலாம் நாட்டில் பல அன்னக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்னப்படி
எங்கும் பறக்க வேண்டும் ஒரு சின்னக்கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி'
பாகம் 2 தொடரும்.
8 comments:
பாரட்டப்படவேண்டியவர் வாலி
மற்றும் அனைத்து கவிஞர்களும்தான்.
ம்ஹும்.. அது ஒரு காலம்.. இப்ப குத்து பாட்டு இல்லேன்னா யாரும் நடிக்கிறது இல்லை. இப்ப எழுதிற/படிக்கிற பாட்டு தமிழ் பாட்டுனு கண்டு பிடிக்க நாலு நாள் ஆகும்
//குடுகுடுப்பை said...
பாரட்டப்படவேண்டியவர் வாலி//
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
//குடுகுடுப்பை said...
மற்றும் அனைத்து கவிஞர்களும்தான்.//
M.G.R.,தனக்கு இப்படித்தான் வேண்டும் என கவிஞர்களை பாடல் எழுதச் சொல்வாராம்
//நசரேயன் said...
இப்ப எழுதிற/படிக்கிற பாட்டு தமிழ் பாட்டுனு கண்டு பிடிக்க நாலு நாள் ஆகும்//
நாலு நாட்கள்லே கண்டுபிடிச்சுடுவீங்களா?
எனக்கு கண்டேபிடிக்க முடியாதுங்க..
வருகைக்கு நன்றி,மீண்டும் வாருங்கள்.
*************** நாலு நாட்கள்லே கண்டுபிடிச்சுடுவீங்களா?
எனக்கு கண்டேபிடிக்க முடியாதுங்க..******************
உங்களுக்கு கேள்வி ஞானம் பத்தல. அதுக்கு கவிஞர குறை சொல்லக்கூடாது.
//மணிகண்டன் said...
*************** நாலு நாட்கள்லே கண்டுபிடிச்சுடுவீங்களா?
எனக்கு கண்டேபிடிக்க முடியாதுங்க..******************
உங்களுக்கு கேள்வி ஞானம் பத்தல. அதுக்கு கவிஞர குறை சொல்லக்கூடாது.//
;-)))))
Post a Comment