Thursday, December 16, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (17-12-10)


1) 15 மாடிகள் கொண்ட ஹோட்டல் கட்டிடத்தை ஆறே நாட்களில் கட்டி முடித்துள்ளனர் சீன கட்டிடத் தொழிலாளர்கள்.வெளி சத்தம் உள்ளே கேட்காத சவுண்ட் ஃப்ரூஃப் கட்டிடம் இது.தீ பிடித்தாலும் பாதிக்கப்படாத கட்டிடம்.ஒரு நாளைக்கு 16 மணிநேரம் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உழைத்து கட்டட்பட்ட கட்டிடம் இது.அதன் புகைப்படம் தான் மேலே..

2)ஜீனிதா நாதன்..இவர் கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்.கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ள தமிழ்ப்பெண் இவர்.அதைவிட ஒரு சிறப்பு இவ்ர்..திருக்குறளின் பெயரில் உறுதிமொழி எடுத்துள்ளார்.மற்றவர்கள் கடவுள் பெயரில் உறுதிமொழி ஏற்றனர்.'பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் வாழ்வின் நெறிகளை சிறப்பாக சொல்கிறது.கல்வியின் பெருமைகளையும், நீதியையும் இத்தனை சிறப்பாக எந்த நூலும் சொன்னதில்லை' என்கிறார் இவர்

3)இந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு தருணங்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளாசிய இரட்டை சதம் இடம் பெற்றுள்ளதாம்

4)ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 300 கிராம்.பெண்ணின் இதயம் 250 கிராம். இதயத்தின் அளவு நீளவாக்கில் 15 செண்டிமீட்டரும், குறுக்கு வாக்கில் 10 செண்டிமீட்டரும் ஆகும்.ஆகவே இனி காதலர்கள் காதலியில் இதயம் இல்லாதவள் என்று சொல்லாதீர்கள்..இதயம் சிறுத்தவளே என்று சொல்லுங்கள்.

5)சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் விஜயகுமார் வாக்கிங் செல்கையில் சேவல் ஒன்று கொத்திவிட்டது.உடன் அவர் போலீஸில் புகார் செய்ய அவர்கள் சேவலைக் கைது செய்து..இருநூறு அபராதம் விதித்தனர்.சாலையில் செல்கையில் எந்த ஒரு விலங்கு நம்மை தொந்தரவு செய்தாலும் போலீசில் புகார் தெரிவிக்கலாமாம்.அதுசரி..விஜயகுமார் என்னும் பெயர் உள்ளவங்களுக்கு இது போதாத காலமா!!

6)நம் எழுத்து படிக்கப் படுகையில் மகிழ்கிறோம்.அதை எடுத்து நாம் எழுதியதாக வானொலியில் படிக்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.அதுவும் லண்டன் வானொலியில் என்றால் மகிழ்ச்சியின் மடங்கு அதிகரிக்கிறது.ஆனால் அதை நாம் கேட்காமல்..வேறு  ஒருவர் கேட்டு..மகிழ்ந்து..நம்மிடம் தெரிவிக்கையில் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதெல்லாம் என்ன என்கிறீர்களா..நான் எழுதிய பயணம் என்னும் கவிதை லண்டன் வானொலியில் படிக்க அதைக்கேட்டு மகிழ்ந்து..உடன் எனக்கு அறிவித்த பதிவர் சகோதரி ஹேமா விற்கு என் வாழ்த்துகள்.
இதோ அவரின் பின்னூட்டம்

ஹேமா said...


ஐயா...உங்கள் "பயணம்"என்கிற கவிதை இப்போ இலண்டன் GTBC வானொலியில் படித்திருந்தார்கள்.

கேட்டேன்.உடன் அறியத்தருகிறேன்.

சந்தோஷமாயிருக்கு !

15 comments:

Philosophy Prabhakaran said...

ஜீனிதாநாதனுக்கு வாழ்த்துக்கள்...

சச்சினுக்கும்...

உங்களுக்கும்...

Philosophy Prabhakaran said...

ஆஹா... தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டலோடு வடையும் கிடைத்துவிட்டதே...

Priya Sreeram said...

good information ! and congrats to u--- loved ur Payanam Kavidai ! it deserves the mention !!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நன்று .
வாழ்த்துக்கள் .

ஆனந்தி.. said...

தகவல்கள் எல்லாம் மிக்க அருமை...அதுவும் விஜயகுமார்,சேவல் விஷயம் புதுசு அண்ட் சிரிப்பை வரவழைத்தது...உங்கள் கவிதை படித்தேன் அருமை...வாழ்த்துக்கள்..

Chitra said...

தகவல்கள் பகிர்ந்தமைக்கு, நன்றிங்க.

suneel krishnan said...

வாழ்த்துக்கள் சார் !:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
ஆஹா... தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டலோடு வடையும் கிடைத்துவிட்டதே...//



தங்கள் வருகைக்கு..அதுவும் முதல் வருகைக்கு நன்றி பிரபாகரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Priya Sreeram said...
good information ! and congrats to u--- loved ur Payanam Kavidai ! it deserves the mention !!//

Thanks Priya Sreeram

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நன்று .
வாழ்த்துக்கள் .//

நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆனந்தி.. said...
தகவல்கள் எல்லாம் மிக்க அருமை...அதுவும் விஜயகுமார்,சேவல் விஷயம் புதுசு அண்ட் சிரிப்பை வரவழைத்தது...உங்கள் கவிதை படித்தேன் அருமை...வாழ்த்துக்கள்..//


வருகைக்கு நன்றி ஆனந்தி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
தகவல்கள் பகிர்ந்தமைக்கு, நன்றிங்க.//

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dr suneel krishnan said...
வாழ்த்துக்கள் சார் !:)//

நன்றி dr suneel krishnan

ஹேமா said...

நிறைவான பதிவு.
வாழ்த்தும் நன்றியும்கூட !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா