Saturday, December 25, 2010

காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்டால்...

 திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, " நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.


இதைப் படிக்க சிரிப்புதான் வருகிறது.


உண்மையில் காங்கிரஸ்..தி.மு.க.,கூட்டணியில் இருந்தால்..தி.மு.க.,வின்வெற்றி வாய்ப்பே பாதிக்கும்.

19 comments:

Philosophy Prabhakaran said...

அவரு ஒரு காமெடி பீசாச்சே....

bandhu said...

உங்கள் எண்ணம் தவறு என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தி மு க வை கழட்டிவிடும் வேலையில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. தி மு க விற்கு உண்மையில் காங்கிரஸ் ஐ விட்டால் கதி இல்லை. அதை விட, காங்கிரஸ் அ தி மு க வுடன் சேர்ந்து விடுமோ என்ற பயமே அதிகம் என்று நினைக்கிறேன். இதை நன்கு உணர்ந்து இருக்கிறது காங்கிரஸ்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
அவரு ஒரு காமெடி பீசாச்சே....//


நன்றி Prabhakaran

T.V.ராதாகிருஷ்ணன் said...

// bandhu said...
உங்கள் எண்ணம் தவறு என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தி மு க வை கழட்டிவிடும் வேலையில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. தி மு க விற்கு உண்மையில் காங்கிரஸ் ஐ விட்டால் கதி இல்லை. அதை விட, காங்கிரஸ் அ தி மு க வுடன் சேர்ந்து விடுமோ என்ற பயமே அதிகம் என்று நினைக்கிறேன். இதை நன்கு உணர்ந்து இருக்கிறது காங்கிரஸ்.//

உங்க மாறுபட்ட கருத்திற்கு நன்றி..
ஆனால்..காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஓட்டு வங்கி அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை.மேலும் அது சமீப காலத்தில் தமிழர்களிடையே பெயரையும் கெடுத்துக் கொண்டுள்ளது.ஆகவே காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அக்கட்சி வேட்பாளர்கள் வெல்லுவது கடினமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

முந்தைய பின்னூட்டத்தில் 'அக்கட்சி' என்று காங்கிரஸையே சொல்கிறேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((((

Thamizhan said...

பி ஜே பி தீண்டப்படாத கட்சி ஆகி விட்டது.இப்போது காங்கிரசை நம்பும் கட்சிகள் புது டில்லியை கணக்கில் பார்க்கிறார்கள். புது டில்லியிலேயே காங்கிரசு ஆட்டங்காணப் போகிறது.பின்னர் தமிழகத்தில் தீண்டப் படாதக் கட்சியாகி விடும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
:((((//

நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Thamizhan said...
பி ஜே பி தீண்டப்படாத கட்சி ஆகி விட்டது.இப்போது காங்கிரசை நம்பும் கட்சிகள் புது டில்லியை கணக்கில் பார்க்கிறார்கள். புது டில்லியிலேயே காங்கிரசு ஆட்டங்காணப் போகிறது.பின்னர் தமிழகத்தில் தீண்டப் படாதக் கட்சியாகி விடும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Thamizhan

பொன் மாலை பொழுது said...

காங்கிரஸ் யாருடன் இருந்தாலும் அதன் தலையில் மண்ணை அள்ளிப்போட தமிழ் நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள் . காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் தான் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கக்கு - மாணிக்கம்

சண்முககுமார் said...

philosophy prabhakaran said...

அவரு ஒரு காமெடி பீசாச்சே...

?????




இதையும் படிச்சி பாருங்களேன்

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி உண்மை தமிழன்

Unknown said...

பாவம் மக்கள்!

இருக்குற விலைவாசி பிரச்சனைல இவனுங்க கூத்த வேற தினமும் பாக்கவேண்டி இருக்கு!

சேக்காளி said...

// கக்கு - மாணிக்கம் said...
காங்கிரஸ் யாருடன் இருந்தாலும் அதன் தலையில் மண்ணை அள்ளிப்போட தமிழ் நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள் . காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் தான் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்//
நெசமாவா?

Unknown said...

அந்தாள இப்படி பேச சொல்லறது வேற யாரும் இல்ல ராகுல்காந்திதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்கி உலகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சேக்காளி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நா.மணிவண்ணன்